சென்டர் மீடியன் மீது மோதி வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்டர் மீடியன் மீது மோதி வாலிபர் பலி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: வாய்க்கால்மேடு பகுதியில், சாலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் மீது, இரு சக்கர வாகனம் மோதியதில், மில் தொழிலாளி இறந்தார். பள்ளிபாளையம் அடுத்த, வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் மணிகண்டன், 22. இவர், வெப்படையில் உள்ள, நூல் மில்லில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 12 அன்று இரவு, 11:30 மணிக்கு டி.வி.எஸ்.எக்ஸ்.எல் இரு சக்கர வாகனத்தில், வாய்க்கால்மேடு பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக, சாலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள, சென்டர் மீடியன் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் இறந்தார். இது குறித்து, பள்ளிபாளையம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை