சாலை தடுப்பில் ஏறிய லாரி: இரும்பு தாக்கி டிரைவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை தடுப்பில் ஏறிய லாரி: இரும்பு தாக்கி டிரைவர் பலி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: நாகப்பட்டணம் மாவட்டம், வேதாரண்யத்தை சேர்ந்த டிரைவர் செல்வேந்திரன், 22. நாகை மாவட்டம், பாலகுறிச்சியை சேர்ந்த கிளீனர் அஜித்குமார், 20. இருவரும், டிரெய்லர் லாரியில் ரயில் தண்டவாளம் அமைக்க தேவைப்படும், இரும்புகளை ஏற்றிக்கொண்டு, நாமக்கல்லில் இருந்து, சேலம் நோக்கி சென்றனர். நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் ராசிபுரம் அடுத்த, பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே வரும் போது, தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் செல்வேந்திரன், நெடுஞ்சாலையில் உள்ள சாலை தடுப்பில் லாரியை ஏற்றினார். நிலைதடுமாறி, லாரியில் இருந்த இரும்புகளின் இறுக்கம் தளர்ந்து, முன்பக்கம் இருந்த டிரைவரை தாக்கியது. இந்த விபத்தில், செல்வேந்திரன், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கிளீனருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X