வேளாண் நிலையத்தில் மேலாண் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் நிலையத்தில் மேலாண் பயிற்சி

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மோகனூர்: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 20ல், காலை, 9:00 மணிக்கு, 'சேமிப்பு தானியங்களின் பூச்சி மற்றும் நோய் மேலாண்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியில், தானியங்களை காயவைத்தல், சேமித்தல், ஈரப்பதத்தை கண்டறிதல், சேமிக்கும் முறைகள், சேமிப்பில் வரக்கூடிய பூச்சிகள் மற்றும் பூஞ்சாணங்கள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்படும். விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை, நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை