பாலமலையில் பாசனத்துக்கு வெட்டப்படும் 10 கிணறுகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலமலையில் பாசனத்துக்கு வெட்டப்படும் 10 கிணறுகள்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொளத்தூர்: பாலமலையில், அரசு நிதியுதவியுடன், விவசாயிகள் பாசனத்துக்கு, 10 கிணறுகளை வெட்டுகின்றனர். கொளத்தூர் ஒன்றியம், பாலமலையில், 33 குக்கிராமங்களில் மலைவாழ் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களில், 90 சதவீதம் பேர், விவசாயத்தை நம்பியே உள்ளனர். குறிப்பாக, மலைப்பகுதி நிலங்களில் வாழை, மரவள்ளி கிழங்கு, சோளம், வேர்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். பாலமலையில் பாசன கால்வாய் கிடையாது. விவசாயிகள் முழுக்க, முழுக்க கிணற்று பாசனம் மற்றும் மழையை நம்பியே பயிர் சாகுபடி செய்கின்றனர். தேசிய ஊரக வேலை திட்டத்தில், 2017 - 18ல், பாலமலையில், 10 விவசாயிகள், தங்கள் நிலங்களில் புதிதாக கிணறு வெட்ட, தலா, 7.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம், இந்த கிணறுகள் வெட்டப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X