அரசு குழந்தைகள் காப்பகம் தரம் உயர்த்த ரூ.9 கோடி ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு குழந்தைகள் காப்பகம் தரம் உயர்த்த ரூ.9 கோடி ஒதுக்கீடு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம், அய்யந்திருமாளிகையில், அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு, ஆதரவற்ற, 58 மாணவியர் உள்பட, 67 பேர் தங்கி, பிளஸ் 2 வரை படிக்கின்றனர். இங்குள்ள துவக்கப் பள்ளியில், 16 பேர் படிக்கின்றனர்.போதிய அடிப்படை வசதி இல்லாதது, குறுகலான இடத்தில் செயல்படுவதால், மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். அத்துடன், பெற்றோர் இல்லாத குழந்தைகள் அதிகரித்துவரும் நிலையில், அவர்களை காப்பகத்தில் சேர்ப்பது, இடவசதியின்மையால் கேள்விக்குறியானது. இதனால், காப்பகம் தரம் உயர்த்த, அரசுக்கு, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 9.46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, நேற்று, அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், 3,875 சதுர மீட்டரில், இரு விளையாட்டு மைதானங்கள் உள்பட, தரை, முதல் தளத்தில், சகல வசதிகளுடன், 250 பேர் தங்கி படிக்கும் அளவுக்கு தரம் உயர்த்தப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை