ஆட்டை விழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டை விழுங்க முயன்ற 10 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: நள்ளிரவில், வீட்டு வளாகத்தில் புகுந்து, ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மேட்டூர், நவப்பட்டி ஊராட்சி, பாலமலை அடிவாரம், மேல்காட்டுவலவைச் சேர்ந்த விவசாயி அம்மாசி. இவர், வீட்டு வளாகத்தில் உள்ள பட்டியில் ஆடுகள் வளர்க்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, பட்டியில் புகுந்த, 10 அடி நீள மலைப்பாம்பு, ஒரு ஆட்டை விழுங்க முயன்றது. தகவல் அறிந்து, மேட்டூர் தீயணைப்பு படையினர், நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில், அங்கு விரைந்து சென்றனர். ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பின், பாம்பை பிடித்து, மேட்டூர் வனச்சரகர் சரவணமுத்துவிடம் ஒப்படைத்தனர். அவர், நேற்று காலை, பாம்பை அருகிலுள்ள பாலமலை வனப்பகுதியில் விட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை