மேட்டூர் அணையில் நீர்திறப்பு 7,000 கனஅடியாக அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணையில் நீர்திறப்பு 7,000 கனஅடியாக அதிகரிப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்ததால், மேட்டூர் அணை நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா சம்பா சாகுபடிக்கு வினாடிக்கு, 16,000 கனஅடி நீர்திறக்கப்பட்டது. டெல்டாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் மேட்டூர் அணை நீர்திறப்பு கடந்த அக்டோபர், 31ல், 4,000 கனஅடியாகவும், கடந்த, 3ல், 3,500 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது. பருவமழை தீவிரம் குறைந்ததால், பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணை நீர்திறப்பு வினாடிக்கு, 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம், 84.83 அடியாகவும், நீர்இருப்பு, 46.93 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. வினாடிக்கு, 1,884 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நீர்திறப்பு அதிகரித்துள்ளதால் வரும் நாட்களில் அணை நீர்மட்டம் மளமளவென சரியும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை