தமிழக எல்லை காவிரி கரையோரம் 20 யூனிட் திருட்டு மணல் பறிமுதல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக எல்லை காவிரி கரையோரம் 20 யூனிட் திருட்டு மணல் பறிமுதல்

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: தமிழக எல்லை காவிரி கரையோரம், கடத்துவதற்கு குவித்து வைத்திருந்த, 20 யூனிட் மணலை, வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக எல்லையிலுள்ள காவிரியாற்றில், திருட்டு கும்பல் பரிசலில் சென்று, மணலை அள்ளி, கரையோரம் கொட்டி கட்டுமானப் பணிக்கு வெளியிடங்களுக்கு கடத்துகின்றனர். இதுகுறித்து, ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து, மேட்டூர் சப் - கலெக்டர் மேகநாதரெட்டி, தாசில்தார் செந்தில்குமார், போலீசார் ஆகியோர், நேற்று முன்தினம், காவிரி கரையோரம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காரைக்காடு அடுத்த, காவிரி கரையோரம், கடத்துவதற்கு தயார் நிலையில், 20 யூனிட் மணல் குவித்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த மேகநாதரெட்டி, பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தார்.

பின், அவர் கூறியதாவது: காவிரியாற்றில், பெரிய பரிசல்களில் சென்று மணல் திருடுகின்றனர். அந்த பரிசல்கள், விரைவில் பறிமுதல் செய்யப்படும். மணல் கடத்தலை தடுக்க, போலீசில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், இரவில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தமிழக எல்லை காவிரியாற்றில், அரசே மணல் குவாரி அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. அதற்கான சாத்தியம் இருந்தால், குவாரி அமைக்கப்படும். மணல் கடத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை