ரவுடி ஸ்ரீதருக்கு சயனைடு சப்ளை செய்தவர்கள் குறித்து விசாரணை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரவுடி ஸ்ரீதருக்கு சயனைடு சப்ளை செய்தவர்கள் குறித்து விசாரணை

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: கம்போடியா நாட்டில், தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதருக்கு, சயனைடு சப்ளை செய்தவர்கள் குறித்து, வேலூரில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதர், 43, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியாக, போலீசாரால் அறிவிக்கப்பட்டார். இதனால், கம்போடியா நாட்டுக்கு அவர் தப்பிச் சென்றார். இந்நிலையில், கடந்த மாதம், கம்போடியாவில், ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார். அவர் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, கம்போடியா போலீசார் தெரிவித்துள்ளனர். இதை, ஸ்ரீதரின் குடும்பத்தினரும் உறுதி செய்தனர். இதையடுத்து, கடந்த மாதம் ஸ்ரீதர் உடல் காஞ்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் போலீசார், ஸ்ரீதர் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். அதில், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த, இரண்டு பேர் மூலம், வேலூரில் உள்ள நகை செய்பவர்களிடமிருந்து சயனைடு வாங்கி, அதை கம்போடியாவுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வரும் காஞ்சிபுரம் போலீசார், நேற்று காவேரிப்பாக்கம், வேலூர் ஆகிய இடங்களுக்கு சென்று விசாரணை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை