பள்ளி மாணவரை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்தவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவரை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்தவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, பள்ளி மாணவரை கடத்தி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றவர்களை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜோன்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 51; கூலித்தொழிலாளி. இவரது மனைவி மங்கலம், 45. இவர்களது மகன் கோவிந்தன், 13; திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை, சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, நேதாஜி நகர் என்ற இடத்தில், பைக்கில் வந்த, இரண்டு பேர், கோவிந்தன் சைக்கிள் மீது மோதினர். இதில் கீழே விழுந்த கோவிந்தனை தூக்கிக் கொண்டு, அருகில் உள்ள மாந்தோப்புக்கு சென்றனர். அங்கு அவரை தாக்கி, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். உடல் முழுவதும் தீ பரவியதால் கோவிந்தன் அலறினார். சத்தம் கேட்டு அங்கிருந்த பொது மக்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். பொதுமக்கள், மாணவரை மீட்டு, '108' அவசர கால ஆம்புலன்சில் ஏற்றி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்த பின், வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், சென்னை அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற மர்ம நபர்களை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய, மர்ம நபர்களை பிடித்தால் தான் மாணவர் எரிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்பதால், ஜோன்றம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், தனிப்படையினர், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X