பணம் தர மறுத்த தந்தையை பாட்டிலால் குத்திய மகன் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் தர மறுத்த தந்தையை பாட்டிலால் குத்திய மகன் கைது

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செங்கம்: செங்கம் அருகே, பணம் தர மறுத்த தந்தையை, பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்திய மகன் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அரியகுஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல், 65, இவரது மகன் சின்னதுரை, 45; இவர்கள், இருவரும், நேற்று முன்தினம் இரவு, பி.எல்.தண்டா கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி, குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சின்னதுரை, தந்தை வடிவேலிடம் பணம் கேட்டுள்ளார். வடிவேல் தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த சின்னதுரை, மதுபாட்டிலை உடைத்து, தந்தையின் வயிற்றில் குத்தினார். இதில் குடல் சரிந்த நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில், வடிவேல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, மேல்செங்கம் போலீசார் விசாரித்து, சின்னதுரையை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை