காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை

Added : நவ 15, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை, வானிலை மையம், தமிழகம், புதுச்சேரி,

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: நேற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதேஇடத்தில் நிலவுகிறது. இது தமிழக பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை.


தஞ்சையில் அதிகம்

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூரில் 7 செ.மீ. , மழை பதிவாகியுள்ளது.


சென்னையில்

அடுத்து வரும் 2 நாட்களை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X