விவேக் பினாமி சினிமாக்காரர்கள்: ஆவணங்கள் பதுக்கல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவேக் பினாமி சினிமாக்காரர்கள்: ஆவணங்கள் பதுக்கல்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விவேக்,Vivek, சினிமாக்காரர்கள், filmmakers, சசிகலா குடும்பம்,  Sasikala family, வருமான வரித் துறை ,Income Tax department, சசிகலா அண்ணி இளவரசி ,Sasikala sister-in-law ilavarasi, வருமான வரி ஏய்ப்பு, income tax evasion, ஜெயலலிதா,Jayalalithaa, ஜெயா டிவி,Jaya TV, பினாமி,Proxy, தமிழகம், Tamil Nadu, ஆவணங்கள்,documents,

சென்னை:தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்தினரை மையமாக வைத்து நடத்திய வருமான வரித் துறை சோதனையில், சசிகலாவின் அண்ணி இளவரசி குடும்பத்தினர் தான், அதிக அளவில் வகை தொகையில்லாமல் சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதும், வருமான வரி ஏய்ப்பு அதிக அளவில் செய்திருப்பதும், தெரிய வந்திருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் இளவரசியின் மகன் விவேக், தன்னுடைய 29 வயதில் பெரிய பின்புலம் எதுவும் இன்றி, ஜெயலலிதா என்ற ஒரு தனி மனிதரின் பின்புலம் கொண்டு, ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியானது, சோதனைக்குச் சென்ற வருமான வரித் துறை அதிகாரிகளையே வாய்ப்பிளக்க வைத்துள்ளது.


சினிமாவில் முதலீடு:

இதற்கிடையில், ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விவேக், வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய ரெய்டின் போது, அவர் சினிமா தொழிலில் செய்துள்ள பைனான்ஸ் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளன. அவர்களில் பலரையும் தனக்கு பினாமியாக பயன்படுத்தி கொண்டிருக்கும் தகவல்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். முதல் கட்டமாக, விவேக்கிற்கு நெருக்கமாக இருக்கும் சினிமாக்காரர்கள் சிலரையும் நோக்கி நகர வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக அவர்களது இல்லம் மற்றும் அலுவலக விவரங்களை வேகமாக திரட்டத் துவங்கி இருக்கும் வருமான வரித் துறை அதிகாரிகள், அந்த இடங்களுக்கும் விரைவில் சோதனை நடத்தச் செல்லக் கூடும் என, வருமான வரித் துறை வட்டார தகவல்கள் வருகின்றன. இதை எப்படியோ மோப்பம் பிடித்து விட்ட, அந்த சினிமாக்காரர்கள், சோதனை வருவதற்குள் ஆவணங்களை ரகசிய இடங்களுக்கு கடத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
16-நவ-201705:26:44 IST Report Abuse
Rpalnivelu மோடி/பாஜக மட்டும் இல்லை என்றால், திருட்டு கழகங்கள் தமிழ் நாட்டை காயலான் கடைகளுக்கு விற்றிருக்கும். மாநில சுயாட்சி என்பது தமிழ்நாட்டை பொருத்தவரை ஊழலாட்சி என்று பொருள்படும். சசியாட்சி வந்திருந்தால் இங்கிருக்கும் திமுக என்னும் பிரைவேட் கம்பனி, சோதாமணி, சோமான், கான்கிராஸ், சைகோ போன்ற சொந்த கம்பனி நடத்துபவர்கள் கப்பம் வாங்கி கொண்டு மணி அடித்திருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
15-நவ-201717:18:52 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மனுஷனை மனுஷ சாப்பிடுறாண்டா என்ற பாடல் வரிகளே தான் நியாபகம் வரதுங்கா மனிதன் தன் வசதிக்கு பணத்தைக் கண்டுபிடிச்சான் இன்று பணமே மனுஷாளை ஆட்டிப்படைக்குது என்பது தான் உண்மை , இது புரிஞ்சால் மனிதன் எதுக்கு இப்படி பறக்கப் போறான் எவனையும் நம்பவேமுடியலீங்க அதுவும் இந்த ஊமைக்கோட்டான் சசியும் அவ அண்ணியும் அவ வாரிசுகளும் ஐயோ என்னானு சொல்றது .ஒன்னு நிச்சயமா தெரியுது ஜெயாம்மா எதுக்கு இவங்களை நம்பின்னாங்க என்று ஒன்னு காசு சொத்து சேர்க்க ரெண்டு மக்களுக்கு இதுபோல ஏமாந்து சாவாதீங்க என்று புரியவைக்கவே தானோ
Rate this:
Share this comment
Cancel
SasiKumar -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201717:14:35 IST Report Abuse
SasiKumar தேசநேசன் அவர்களே தி மு க தேச துரோகி என்றால் பா ஜ க வை என்னவென்று சொல்வது, கங்கை நதி திட்டம் எங்கே, பாமரன் சோற்றுக்கு வழி இல்லாத தேசத்தில் சிவாஜிக்கு சிலை எதற்கு
Rate this:
Share this comment
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201718:47:55 IST Report Abuse
Sivramkrishnan Gkகங்கை நதி திட்டம் - நீங்கள் நேரில் சென்று பார்த்தால் தான் புரியும். கணினி முன் உட்கார்ந்து கருத்து தெரிவித்தால் திட்டத்தின் வளர்ச்சி தெரியாது. சிவாஜிக்கு சிலை எதற்கு, இதே கேள்வியை திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்திற்கு ஏன் நீங்கள் கேட்கவில்லை....
Rate this:
Share this comment
Cancel
natarajan - Hyderabad,இந்தியா
15-நவ-201716:12:03 IST Report Abuse
natarajan Cinimaa kaaraney dhhoram vaikanum. padam paathama kaithattunama nnu irundha naaladhu. idha naan sollaley anna paata MR Radha solliirukkaru.
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
15-நவ-201716:08:58 IST Report Abuse
rama இது தவருமொனாறுமிலலையே
Rate this:
Share this comment
Basic Instinct - Coimbatore,இந்தியா
15-நவ-201716:53:54 IST Report Abuse
Basic Instinctஇந்த மாதிரி இலவச மார்க்கெட்டிங் செய்து கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள். அதுவும் நம்ம தமில் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் PRIME TIME என்று சொல்லுகின்ற நேரத்தில் ஒளிபரப்ப எவ்வளவு செலவாகும்... இது தவறு ஒன்றுமில்லை.......
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
15-நவ-201714:59:46 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. /// DESANESAN - , சர்க்காரியா அறிக்கையால் போடப்பட்ட கோர்ட் வழக்குகளை சுயநலத்துக்காக இந்திரா வாபஸ் பெறாமல் இருந்திருந்தால்////அண்ணே போற போக்குல, தாமரை மண்டபத்தில் எழுதி கொடுத்ததை அப்படியே கக்கிவிட்டு செல்கிறீர்கள், அப்படி என்னென்ன வழக்குகள் போடப்பட்டு , வாபஸ் பெறப்பட்டன என்று பட்டியலிடமுடியுமா?
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
15-நவ-201714:59:07 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ///ஊழல்களின் ஊற்றுக்கண் துரோகி கருணா .அவரை ஆதரிப்பவன் தேச துரோகி. மனித இனத்தின் துரோகி.... ///உண்மைதான், நானும் அப்படியே ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவரை தேடி சென்று கூட்டணிக்கு அச்சரம் போட்டுச்செல்லும், மோசடிகளை என்னவென்று சொல்லலாம்.... இதை விட மோசமாக தான் சொல்வீர்கள் என்று நம்புகிறேன், என்றால் நீங்கள் தேசனேசர், கூலிக்கு மாரடிக்கும் , கும்பல் அல்ல என்றால் இதற்க்கு பதில் சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
15-நவ-201716:48:52 IST Report Abuse
Ranga Ramanathanவீட்டுக்கு...
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
15-நவ-201714:57:03 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. /// DESANESAN - , சர்க்காரியா அறிக்கையால் போடப்பட்ட கோர்ட் வழக்குகளை சுயநலத்துக்காக இந்திரா வாபஸ் பெறாமல் இருந்திருந்தால்////அண்ணே போற போக்குல, தாமரை மண்டபத்தில் எழுதி கொடுத்ததை அப்படியே கக்கிவிட்டு செல்கிறீர்கள், அப்படி என்னென்ன வழக்குகள் போடப்பட்டு , வாபஸ் பெறப்பட்டன என்று பட்டியலிடமுடியுமா?
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
15-நவ-201714:24:19 IST Report Abuse
baski ரோம்ப லேட்டு...
Rate this:
Share this comment
Basic Instinct - Coimbatore,இந்தியா
15-நவ-201716:52:16 IST Report Abuse
Basic Instinctஎவ்வளவு சீக்கிரம் செய்கிறார்களோ, அவ்வளவு நல்லது. இதனால் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டி இட வசதியாக இருக்கும். மற்றவர்கள் இந்த மாதிரி சந்திக்க தயாரா என்று தேர்தல் பிரச்சாரத்தில் கேட்பார்கள்.......
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
15-நவ-201714:20:54 IST Report Abuse
தேச நேசன் சமீபத்தில்  கேள்விப்பட்டது. ஒரு   வருத்தப்படாத நடிகரின் மார்க்கெட் திடீரென ஏறியது. ஆனால் இரண்டு பழைய தயாரிப்பாளர்களோ  தங்களிடம் அவர் முன்பு அட்வான்ஸ் வாங்கி  ஒப்புக்கொண்ட அடிமாட்டு சம்பளத்திற்கு படங்கள் நடித்துக்கொடுக்க சங்கமூலம்  நெருக்கடி கொடுத்தனர். ஹீரோ  /விவேகத்துடன் /மாபியா குடும்ப   வாரிசை உதவிக்குக் கூப்பிட்டார். வாரிசு தன் கறுப்பை  ஒரு பழைய பேப்பர் காயலான் கடைக்காரருக்கு கொடுத்து அவரை பினாமி தயாரிப்பாளராக்கி  படமெடுத்து கீர்த்தியுடன் லாபம் பார்த்தார். இரண்டு பழைய தயாரிப்பாளர்களையும் கண்களை உருட்டி வாயடைக்க வைத்தார். இதில் என்ன வேடிக்கையென்றால் நாயகன் பூர்வீகம் ? மஞ்சத்தூண்டாரின் பக்கத்துக்கு  ஊர் மற்றும் தூரத்து உறவாம்.
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-நவ-201714:47:03 IST Report Abuse
Pasupathi Subbianசிவகார்த்திகேயன் ஊர் காரைக்குடி பக்கம். கருணாநிதியின் ஊர் திருக்குவளை ( திருவாரூர் ) விவேக்கின் ஊர் மன்னார்குடி . இதில் யார் யாருக்கு , யார் யார் சொந்தம் ?...
Rate this:
Share this comment
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201718:51:04 IST Report Abuse
Sivramkrishnan Gkஇரண்டுமே கேடுகெட்ட குடும்பம் - இவர்கள் உறவுமுறைகளை ஆராய்ந்தால் கூவம் மணக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை