ஔிப்படக்கலையில் கலக்கும் தந்தையும்-மகனும்...| Dinamalar

ஔிப்படக்கலையில் கலக்கும் தந்தையும்-மகனும்...

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017
Advertisement


ஔிப்படக்கலையில் கலக்கும் தந்தையும்-மகனும்...ஸ்ரீ ராமராஜா

மருத்துவம் தொடர்பான சாப்ட்வேர் எழுதும் நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.இவருக்கு சிறு வயது முதலே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம். சுற்றுச்சுழலில் ஆர்வம் கொண்ட இவர் இயற்கை, வனவியல் சார்ந்த புகைப்படங்கள் எடுப்பதில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்.
இதற்காக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர் உடன் தனது மகன் கேசவ்ராஜாவையும் அழைத்துச் சென்றார்.காடுகள் மலைகள் வனாந்திரங்களில் ஆர்வமாக பயணம் மேற்கொண்ட கேசவ் அப்பாவையே அவரையே குருவாகக் கொணடு புகைப்படம் எடுக்கக் கற்றுக்கொண்டார்.

இவருக்கு வனவிலங்குகளின் வாழ்வியல் முறை பிடித்துப் போக அதனை பதிவு செய்வதில் ஆர்வம் எடுத்துக்கொண்டார்.அப்பாவும்-பிள்ளையும் ஒரே ஜீப்பில் ஒரே லொகேஷனில் பயணம் செய்து ஒரே காட்சியை படம் எடுத்தாலும் இருவரது கோணங்களும் வேறு மாதிரியாக இருக்கும் இது இவர்களுக்கான வெற்றி மட்டுமின்றி இயற்கைக்கான வெற்றியும் கூட.

இப்படி இருவரும் சேர்ந்து பயணம் செய்தபோது எடுத்த படங்களைக் கொண்டு இவர்கள நடத்திய கண்காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை