அமெரிக்காவில் வேலைவாய்ப்பு உருவாக்கும் இந்திய நிறுவனங்கள்| Dinamalar

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு உருவாக்கும் இந்திய நிறுவனங்கள்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அமெரிக்கா,USA, இந்திய நிறுவனங்கள்,Indian companies, வேலைவாய்ப்பு,Employment,  தொழில் முதலீடு, Industry Investment,இந்திய தொழில்துறை கூட்டமைப்பு , Indian Industry Confederation, சிஐஐ,CII, அமெரிக்க மண் இந்திய வேர்கள், Indian Roots American Soil, இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா, Indian Ambassador Navdej Sarna, அமெரிக்க பொருளாதாரம், American Economy

வாஷிங்டன் : அமெரிக்காவில் சுமார் 1,13,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்புக்களை இந்திய நிறுவனங்கள் உருவாக்கி உள்ளதாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'அமெரிக்க மண்ணில் இந்திய வேர்கள்' (Indian Roots, American Soil) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் சுமார் 18 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன. கிட்டதட்ட 100 இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் 1,13,000 வேலைவாய்ப்புக்களை உருவாக்கி உள்ளன. அமெரிக்கா இந்திய நிறுவனங்கள் சமூகம் சார்ந்த துறைகளில் 147 மில்லியன் டாலர் மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் 588 மில்லியன் டாலர் அளவிற்கு பங்கு வகிக்கின்றன.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் உள்ள 100 இந்திய நிறுவனங்களில் 1,13,423 அமெரிக்கர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்திய நிறுவனங்களில் அமெரிக்கர்கள் அதிகம் பணிபுரியும் டாப் 5 மாகாணங்களில் நியூயார்க், நியூஜெர்சி, மாஸ்சசூட்டஸ், கலிபோர்னியா, யோமிங் ஆகியன இடம்பெற்றுள்ளன. 85 சதவீதம் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் கூடுதலாக முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதல் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை தர 87 சதவீதம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்க பொருளாதாரத்தில் இந்திய நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் பங்கு முக்கிய இடம் வகிப்பதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா பாராட்டி உள்ளார். அமெரிக்காவில் மிக வேகமாக இந்திய நிறுவனங்களின் முதலீடு வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
16-நவ-201711:47:23 IST Report Abuse
ganapati sb oru sarvadesa graamamaaga ulagam surungi varugirathu world shrinking like global village
Rate this:
Share this comment
Cancel
POPCORN - Chennai ,இந்தியா
15-நவ-201718:03:31 IST Report Abuse
POPCORN இப்படியும் சொல்லலாம் - மேக் இந்த இந்தியா தோல்வி திட்டம்
Rate this:
Share this comment
Cancel
indian -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201715:53:44 IST Report Abuse
indian Due to reservation policy poeple spent lot of money and got their education in foreign. if the inverse also lot of problem in practice.ni smmith sail even at labour level and in operation proceedings.
Rate this:
Share this comment
Cancel
DESANESAN -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201714:06:53 IST Report Abuse
DESANESAN REMOREMOREMORE AND MORE WILL BE UNDER SCANNER? COMEDY?
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
15-நவ-201714:04:42 IST Report Abuse
kandhan. என் ஆர் ஐ மக்களுக்கு நம் இந்தியாவில் முதலீடு செய்யும் எண்ணம் ஏன் வரவில்லை ??நம் நாட்டில் அரசு செலவில் படித்துவிட்டு வெளிநாடுகளில் வேலைசெய்யும் இவர்கள் தாய் நாட்டை பற்றி கவலை இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்????? நம் நாட்டு அரசியல்வாதிகளா ?????அல்லது விருப்பமில்லையா என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள் கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
15-நவ-201718:11:17 IST Report Abuse
Mohan Sundarrajaraoஇந்திய அரசாங்கத்தின் கொள்கை மற்றும் லஞ்சம்தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை