உ.பி.,யில் 10, 12ம் வகுப்பு தேர்வு எழுத ஆதார் கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உ.பி.,யில் 10, 12ம் வகுப்பு தேர்வு எழுத ஆதார் கட்டாயம்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆதார் கார்டு, Aadhaar Card, உத்திர பிரதேசம், Uttar Pradesh, அரசு தேர்வு, Government exam, மாணவர்கள், Students,  10ம் வகுப்பு தேர்வு,10th Std Exam, ப்ளஸ் 2 தேர்வு ,Plus 2 Exam,  பள்ளிகள்,Schools,

லக்னோ : பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வு எழுதுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என உத்திர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு பதிவு செய்யும் போதும், தேர்வு எழுத வரும்போதும், ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஆதார் அட்டை கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு மாணவன் ஆதார் இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் போனால் அதற்கு அவர் பயிலும் பள்ளியின் முதல்வர்தான் பொறுப்பு என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனுமதி கார்டுடன், ஆதார் கார்டையும் தேர்வு எழுதும் அறைக்கு எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என உ.பி., அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.தேர்வு எழுத தேவை ஆதார்

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
30-நவ-201719:23:25 IST Report Abuse
Narayanan Sklaxmi நாங்க பேசுவது ஒன்னு செய்வது ஒன்னு எப்பவுமே அடுத்தவன் சொல்லி நாங்க ஏத்துக்கறதாவது. நாங்க கோர்ட்ல சொல்லுவோம் ஆதார் நலதிட்டங்களை முறைப்படுத்துவதற்கு என்று , இங்கு எந்த நலத்திட்டம் வருகிறது என்று அறிவு ஜீவிகளுக்கே தெரியும். ஆதார் ஒன்று மட்டுமே போதும் என்று சொல்லிவிட்டு எல்லா ஆஃபீசுகளும் ட்ரிவிங்கிலீன்ஸ் இருக்க ஓட்டர் id இருக்காஎன்று கேட்பார்கள் அதுதான் நடைமுறை
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
15-நவ-201715:56:42 IST Report Abuse
MANI DELHI In Delhi already implemented in 10th and 12th class board exams forms. We should not entertain any more Vasool Raja type candiates
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
15-நவ-201714:45:46 IST Report Abuse
தேச நேசன் என்ன செய்ய? எதையும் கட்டாயப்படுத்தினால் தானே  நம் ஆட்கள் வழிக்கு  வருகிறார்கள்? வாஜ்பாயி வழிகாட்டுதலில் அத்வானி கமிட்டி 2002  இல் வலியுறுத்திய போதே அடையாள அட்டைமுறையைக் கொண்டுவந்திருந்தால் நாடு எங்கேயோ போயிருக்கும்.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
15-நவ-201715:10:27 IST Report Abuse
சுந்தரம் 2009 -2010 ல் காங்கிரஸ் கொண்டுவந்தபோதே மனமுவந்து அதை ஏற்றக்கொண்ட பாஜகவை எப்படி பாராட்டுவது. தனி மனித உரிமை பறிபோகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியதை மறக்கவா முடியும்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X