திருப்பதியில் இனி 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் இனி 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
திருப்பதி,Tirupati, சுவாமி தரிசனம்,Swami Darshanam,திருப்பதி வெங்கடாசலபதி , Tirupathi Venkatachalapathy, பக்தர்கள், devotees, திருமலை, Thirumalai,அன்னமைய்யா பவன்,Annamayya Bhavan,  சீனிவாசராஜூ, Srinivasa Raju,  இலவச சுவாமி தரிசனம், free Swami Darshanam,

திருப்பதி : திருப்பதியில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள், குறைந்த நேரத்திலேயே சுவாமி தரிசனம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ இன்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் விதமாக, நேர ஒதுக்கீடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக திருமலையில் 29 இடங்களில் 150 கவுன்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு இலவசமாக தரிசனத்திற்கான நேரம் குறித்து பதிவு செய்யப்பட்ட டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் பெற்ற பக்தர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், வைகுண்டத்திற்குள் அனுமதிக்கபட்டு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natrayan M - Dindigul,இந்தியா
15-நவ-201721:25:34 IST Report Abuse
Natrayan M தற்போதும் உள்ள நடைமுறையின்படி முந்நூறு ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் தனி வரிசையில் நின்று அதன்பிறகு ஒன்றாக இனிகிரார்கள். ஆனால் டிக்கெட் பரிசோதனை முடிந்ததும் அனைவரும் மிகவும் நெருக்கமாக அடித்துக்கொண்டு போகிறார்கள். குழந்தையை வைத்திருப்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை ஒழுங்கு படுத்தவேண்டும். இல்லாவிட்டால் ஏதேனும் ஒருநாள் மிகப்பெரிய விபரீதம் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த முந்நூறு ரூபாய் டிக்கெட்டில் வரிசையாக எந்தவித இடிபாடுகளும் இல்லாமல் மக்கள் சென்று தரிசிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201720:21:16 IST Report Abuse
வாழ்க​ பாரதம் திருமலை கோவில் நிர்வாகம் திருடர்களால் நிரம்பியது. பரம்பொருளின் சிறப்பை இழிவுபடுத்தி பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்க்கு ஒரு பட்சமாக நடக்கின்றனர். பக்தர்களுக்கு சிரமத்தையும் பணக்கார மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு முறைவாசல் செய்தும் ஈனப்பிழைப்பு நடத்தி பெரும்பொருள் ஈட்டி கடைசியில் அழுகி சாகின்றனர். சிவன் சொத்து குலநாசம் என்பதை மறக்கின்றனர் (ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவார்த்தத்தில் இக்கோவிலுக்கு இதன் வருவாயும் சிவன் சொத்தே). பக்தர்களுக்கு எவ்வாறெல்லாம் சிரமம் கொடுக்கமுடியுமோ அதனை சிரமம். எல்லாம் வல்ல இறைவன் முன் அனைவரும் சமமாகவே பாவிக்கப்படவேண்டுமேயல்லாமல் காசும் அதிகாரமும் உள்ளவனுக்கு தனி கவனம் அதே சமயம் பக்தர்களுக்கு பெரும் துன்பம்)
Rate this:
Share this comment
Cancel
Modify India - Calgary,கனடா
15-நவ-201719:52:42 IST Report Abuse
Modify India ஒரு நாளைக்கு 64000 பேர் வருகிறார்கள். எப்படி பார்த்தாலும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் ஐந்து லட்சம் கொடுத்து 'donor ' பாஸ்புக் வைத்திருந்தால் கூட இரண்டரை மணி நேரம் ஆகின்றது அவர்களை கூட செக்யூரிட்டி எண்ட்ரன்ஸ் வரை கூட கூட்டிச்சென்று சேர்க்க மாட்டேன் என்கிறார்கள். அப்படி செய்தால் கணிசமாக நேரம் குறையும். இதில் புதிதாக சீனியர் சிடிஸின் லைன் வேறு நாள் ஒன்றுக்கு 2 முறை அதனால் ஒரு மணி நேரம் வீண் - அந்த நேரம் பார்த்து லைன் இல் நின்றால்
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
15-நவ-201719:07:15 IST Report Abuse
vns மக்களை துன்புறுத்த வேண்டும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் நினைத்து நடவடிக்கை எடுத்தால் கூட பக்தர்களை இத்தனை துன்புறுத்த முடியாது. மிகவும் மோசமான, ஒழுங்கற்ற, வரைமுறை இல்லாதால், நிர்வாகம் என்ன என்று அறியாமல் நிர்வகிக்கப்படுகின்ற ஒரு அமைப்பு தான் திருமலை தேவஸ்தானம். அங்கு வருபவர்கள் கடவுளைத்தான் வணங்க வருகிறார்களா என்றே தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-நவ-201718:35:14 IST Report Abuse
Pasupathi Subbian காத்திருந்து தரிசிப்பதே திருப்பதி சிறப்பு, பெருமை
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201716:39:28 IST Report Abuse
KalaiselvanVenkatesan நடைமுறைக்கு வரட்டும்!
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
15-நவ-201715:57:17 IST Report Abuse
baski உண்டியல் போட ஆதார் எண் வேண்டுமா???இல்லையா????
Rate this:
Share this comment
Cancel
Balamurugan -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201715:41:34 IST Report Abuse
Balamurugan ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டம்தானே இது..நிறுத்தியது யார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை