Tughlaq had also implemented note ban: Yashwant Sinha's dig at PM Narendra Modi | துக்ளக் பாதையில் மோடி: யஷ்வந்த் சின்ஹா பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

துக்ளக் பாதையில் மோடி: யஷ்வந்த் சின்ஹா பேச்சு

Added : நவ 15, 2017 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரூபாய் நோட்டு வாபஸ்,demonetization, துக்ளக்,Tughlaq, பிரதமர் மோடி, Prime Minister Modi,யஷ்வந்த் சின்ஹா, Yashwant Sinha,பா.ஜ., BJP, பொருளாதார இழப்பு, economic loss,  ஜனநாயகம், democracy,முகமது பின் துக்ளக், Mohammed bin Tughluq, வேலைவாய்ப்பின்மை, unemployment,

புதுடில்லி: கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு டில்லியை ஆட்சி செய்த துக்ளக்கும் புழக்கத்தில் இருந்த கரன்சியை தடை செய்ததாக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

700 ஆண்டுகளுக்கு முன்பு :
டில்லியில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் இயக்கம் சார்பில் ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: பல அரசர்கள் தங்களுக்கு என சொந்தமாக கரன்சிகளை வைத்திருந்தனர். சிலர் பழைய கரன்சிகளை புழக்கத்தில் இருக்க அனுமதித்தும், புதியவற்றை புழக்கத்தில் விட்டனர். ஆனால்,700 வருடங்களுக்கு முன் முகமது பின் துக்ளக், பழைய கரன்சிகளை தடை செய்து விட்டு, புதிய கரன்சிகளை அறிமுகம் செய்தார். இதனால், ரூபாய் நோட்டு வாபஸ் 700 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. தலைநகரை டில்லியிலிருந்து தவுலாதாபாத் நகருக்கு மாற்றியதால், அவர் பெருமையை இழந்தாலும், ரூபாய் நோட்டு வாபசை அவர் செய்தார்.

3.75 லட்சம் கோடி இழப்பு

வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் பெரிய பிரச்னையாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், பொருளாதாரத்திற்கு ஏதாவது செய்ய காலம் வேகமாக ஓடி கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டு வாபசிற்கு நேரடியாக ஆன செலவு என்பது, புதிய நோட்டுகள் அச்சடிக்க ரூ.1.28,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக, பொருளாதாரம் 1.5 சதவீதம் குறைந்ததாக நாம் கருதினால், அதனை விட அதிகமாக இருக்கும் என கருதுகிறேன். ரூபாய் நோட்டு வாபஸ், இந்திய பொருளாதாரத்திற்கு ரூ.2,25,000 கோடி இழப்பு ஏற்பட்டது. நோட்டுகள் அச்சடிப்பதுடன் சேர்ந்து, இந்திய பொருளாதாரம் ரூ.3.75 லட்சம் கோடி பாதித்துள்ளது. இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaiyai solren - chennai,இந்தியா
16-நவ-201710:05:36 IST Report Abuse
unmaiyai solren அப்ப பி ஜெ பிக்கு ஆதரவாக யார் யார் பேசுகிறார்களோ அவர்கள் அனைவரையும் தேச பக்தர்கள்,தேச நல விரும்பிகள்,உண்மையை பேசுகிறார்கள் என்றும் .எதிராக கருத்து சொன்னால் அவர்கள் பி ஜெ பி தலைவர்களில் ஒருவராக இருந்தாலும் சரியே அவர்கள் அனைவரும் தேச துரோகிகள்,வயோதிகர்கள்,மூளை குழம்பியவர்கள் என இரு வகையாக பிரித்து கொள்ளலாம்.அப்படித்தானே
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
15-நவ-201720:52:28 IST Report Abuse
Nakkal Nadhamuni பிஜேபில் இருந்த ஒருத்தர் இப்படி பதவி ஆசை கொண்டவராக இருப்பது ஆச்சர்யம்... இவர் இப்பொழுதே காங்கிரஸில் சேர்ந்து விடலாம்... இவர் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் இவ்வளவு பாதிக்க பட்டிருக்கிறார் என்பது ஒரு பெரிய அதிர்ச்சி...
Rate this:
Share this comment
Cancel
கோீூபகக - BENGALURU,இந்தியா
15-நவ-201719:03:52 IST Report Abuse
கோீூபகக பின் துக்ளக்கின் அந்த முடிவுகள் அனைத்தும் தோல்வி. ஆகவே முரண்பாடுகளின் மொத்த உருவம் என வரலாற்றில் அவர் வர்ணிக்கப்படுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை