கெஜ்ரிவாலுக்கு போகும் இடம் எல்லாம் எதிர்ப்பு| Dinamalar

கெஜ்ரிவாலுக்கு போகும் இடம் எல்லாம் எதிர்ப்பு

Added : நவ 15, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கெஜ்ரிவால்,Kejriwal,டில்லி காற்று மாசுபாடு,Delhi air pollution, ஆர்டிஐ, RTI, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், Delhi Chief Minister Arvind Kejriwal,  அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், Haryana Chief Minister Manohar Lal Katar, அகாலி தளம், Akali Dal, காங்கிரஸ், Congress, புகைமூட்டம், Congress,

புதுடில்லி : டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை சரி செய்வதற்காக அண்டை மாநில முதல்வர்களை சந்தித்து ஒத்துழைப்பு கேட்டு வருகிறார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால் அவரை சந்திக்க பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் மறுத்து விட்டார்.
இதனால் சண்டிகர் விமான நிலையம் சென்ற கெஜ்ரிவால், அங்கிருந்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்திக்க புறப்பட்டுச் சென்றார். காற்று மாசுபாடு குறித்து இரு மாநில முதல்வர்களும் ஆலோசித்தனர். ஆனால் கெஜ்ரிவாலின் வருகைக்கு அகாலி தளம், காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, கறுப்பு கொடி காட்டினர். ஆலோசனைக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவாலும், கட்டாரும், காற்று மாசுபாடு பொதுவான பிரச்னை. இதனால் இதை சரி செய்ய இரு மாநில அரசுகளும் இணைந்து செயல்பட உள்ளோம். அரியானாவில் விளைநிலங்களில் விவசாய கழிவுகள் எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கட்டார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், புகைமூட்டம் மற்றும் மாசுபாட்டிற்கு ஒரு அரசை மட்டும் குற்றம் கூற கூடாது. நிலைமையை புரிந்து கொள்ளாது சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர் என்றார்.
இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டை சரி செய்ய டில்லி அரசு செலவிட்டுள்ள தொகை குறித்து ஆர்டி.,யில் கேட்கப்பட்டதற்கான பதில் வெளியாகி உள்ளது. இதன்படி மாசு கட்டுப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.786 கோடியில் ரூ.93 லட்சத்தை மட்டுமே டில்லி அரசு செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சுட்டுக்காட்டி விமர்சித்துள்ள காங் மற்றும் பா.ஜ., கட்சிகள், டில்லி புகை கெஜ்ரிவால் அரசின் பொய் முகத்தை வெளிப்படுத்தி உள்ளது. மாசு கட்டுப்பாட்டை சரி செய்ய ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் எங்கே போனது எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-நவ-201700:20:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவரும் நம்ம மோடி போல, அமிதாப், ரஜினி, தோணி, கவர்ச்சி நடிகைகளை கூட்டி வந்து கும்மாளமிட்டு மாசு கட்டுப்பாடுன்னு பிரசாரம் செஞ்சி கோடிகளை வீணாக்கியிருக்கலாம். மனுஷன் செய்யல்லே.. வாகனங்களை கட்டுப்படுத்த திட்டம் சொன்னார். கேலி செஞ்சு கேவலப்படுத்தினாங்க. எல்லா அமைச்சனும் ஏ.சி காரில் வலம் வருகிறான். நீதிபதிகளும் தான். அவதிப்படுவது ஏழை, நடுத்தர மக்கள் தானே. காங்கிரசும், காவி காங்கிரசும் கை கோர்த்து கும்மி அடிக்கிறாங்க.. தலைநகருக்கு இந்த அசிங்கம். மத்திய மந்திரி எல்லாம் குஜராத்தில் கும்மி அடிக்க கிளம்பிட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-நவ-201720:40:23 IST Report Abuse
mindum vasantham Whatever bjp chief minister manohar lal khattar is decent and has met kejriwal on common problem leaving aside the differences ,congress Punjab cm and regional party akali dal are be cheaply
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-நவ-201720:33:04 IST Report Abuse
ஜெயந்தன் என்னமோ டெல்லிவாசிகள் எதிர்ப்பு காட்டியது போல செய்தி ஏன்??
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
15-நவ-201718:42:12 IST Report Abuse
yaaro வேல செஞ்சிட்டு விளம்பரம் பண்ணனும் ..முன்னாடியே விளம்பரம் பண்ணா எல்லா கிரெடிட்டும் இவரே எடுத்துக்குவார் , பிரச்னைன்னு வந்தா பழியை மட்டும் நம்ம மேல போடுவார் , எதுக்கு இவரோட வேலை செய்யணும்னு தான் தோணும் . அம்ரிந்தர் உஷார் பார்ட்டி .
Rate this:
Share this comment
Cancel
Pats - Coimbatore,இந்தியா
15-நவ-201717:27:56 IST Report Abuse
Pats "786" கோடி - நம்பரே கொஞ்சம் இடிக்குது.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
15-நவ-201717:01:22 IST Report Abuse
தமிழர்நீதி ஒருபுறம் பிஜேபி எதை செய்தாலும் தடை போடும் நிலைமை . இதை பயன்படுத்தி இழந்த ஆட்சியை பிடிக்க துடிக்கும் காங்கிரஸ் . இதுல கெஜ்ரி படும் அவஸ்தை . இதுல பொதுமக்கள் பாடாய் படுகிறார்கள் . இந்த ஆளும் அவஸ்தை அதுல இந்தியர்களின் அவலம் .
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
15-நவ-201716:53:25 IST Report Abuse
 ஈரோடுசிவா துப்புகெட்ட மனுசன் இந்த கேசரிவால் ... Useless fellow ...
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
15-நவ-201716:09:21 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. இந்த விஷயத்தில் காங் மற்றும் BJP ரெண்டும் ஒண்ணு தான், இங்கே திமுக மற்றும் அதிமுக சேர்ந்து மற்றவர்களுக்கு வாய்ப்பில்லாமல் செய்து கொள்ளை தங்களுக்கென வைத்திருக்கும் பாலிசி, அங்கே மத்தியில் காங் BJP பாலிசி.
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
15-நவ-201716:00:08 IST Report Abuse
appaavi நல்லவர்களுக்கு நாலு இடத்தில் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்....
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
15-நவ-201715:45:20 IST Report Abuse
சூரிய புத்திரன் // தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், புகைமூட்டம் மற்றும் மாசுபாட்டிற்கு ஒரு அரசை மட்டும் குற்றம் கூற கூடாது. நிலைமையை புரிந்து கொள்ளாது சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர் என்றார்.// தம்மாம் துண்டு யூனியன் பிரதேசத்தையே சாியாக நிா்வாகிக்க திறமையில்லை இதுல வாய் மட்டும் காது வரை. 786 கோடி நிதியை அப்படியே விழுஙகி ஏப்பம் விட்டுட்டான் இந்த யோக்கியன். இவரு தான் ஊழல் இல்லா ஆட்சி அமைக்க போறாரு....
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
15-நவ-201718:14:00 IST Report Abuse
Karuthukirukkanஎன்ன ஒரு அறிவு .. எப்பா .. செலவு செய்யலைன்னா , அப்பிடியே கஜானால இருக்குனு அர்த்தம் மேதாவி .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை