இந்த 9 சொகுசு கார்கள் யாருக்கு சொந்தம்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்த 9 சொகுசு கார்கள் யாருக்கு சொந்தம்?

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017 | கருத்துகள் (11)
Advertisement
சுகேஷ் சந்திரசேகர்,Sugesh Chandrashekhar,சொகுசு கார்கள், Luxury Cars, வருமான வரித்துறை, Income Tax Department,தினகரன், Dinakaran, இரட்டை இலை,irattai ilai, தேர்தல் ஆணையம்,Election Commission, லஞ்சம்,Bribery, டில்லி திஹார் சிறை, Delhi Tihar Jail,யு.பி.சிட்டி மால் , UPCity Mall,போர்சி, Borsi,லம்போர்கினி, Lamborghini, ரோல்ஸ் ராய்ஸ்,Rolls Royce, ரேஞ்ச் ரோவர், Range Rover,பி.எம்.டபிள்யூ.,BMW, பார்ச்சூனர், Fortuner, ,பிரதோ, Pirato,

பெங்களூரு: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான ஒன்பது சொகுசு கார்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


டில்லி போலீசாரின் உதவி

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தினகரனுக்கு உதவியதாக சுகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இந்த ஆண்டு துவக்கத்தில் எடுக்கப்பட்டது. இதன் பிறகு கடந்த அக்., 10ம் தேதி ஒரு விசாரணைக்காக, சுகேஷ் சந்திரசேகரை டில்லி போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சில தொழில் அதிபர்களை சந்தித்ததாகவும், யு.பி.சிட்டி மாலில் பொருட்களை வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு உதவிய டில்லி போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


சுகேசுக்கு 9 சொகுசு கார்

கொச்சியில் சிக்கிய கார்கள்

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் கடந்த நவ., 9ம் தேதி சசிகலாவின் உறவினர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த துவங்கினர். இந்த சோதனை ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்தது. இதே நேரத்தில் நவ., 10ம் தேதி பெங்களூருவை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கொச்சி சென்று அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து ஏழு சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். போர்சி, லம்போர்கினி,ரோல்ஸ் ராய்ஸ், ரேஞ்ச் ரோவர், பி.எம்.டபிள்யூ., பார்ச்சூனர், பிரதோ ரக கார்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள டுகாட்டி ரக பைக்கும் அங்கு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பெங்களூருவில் நகரபாவி என்ற இடத்தில் விட்டல் மல்லையா சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து, 'பென்ட்லி, ஜாக்குவார்' ரக கார்களும், விலை உயர்ந்த வாட்ச்களையும் பறிமுதல் செய்தனர். இந்த ஒன்பது கார்களும் பல கோடி ரூபாய் மதிப்புடையவை. இவை சுகேசுக்கு சொந்தமானவை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், யாருக்காக, யார் கொடுத்த பணத்தில் இந்த கார்களை சுகேஷ் வாங்கி வைத்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Advertisement
வாசகர் கருத்து (11)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
15-நவ-201720:42:34 IST Report Abuse
Dr Vijaya Choumiyan இரட்டை இலை சக்க போடு போட்டிருக்கிறது போல. சக்கை போடு போடு ராஜா என் காட்டிலே மழை பெய்யுது என்று அன்றே பாடி விட்டு சென்று விட்டார். தொடர்கிறது இன்றும்.
Rate this:
Share this comment
Cancel
a.s.jayachandran - chidambaram,இந்தியா
15-நவ-201720:08:40 IST Report Abuse
a.s.jayachandran இவருடைய அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து நாட்டை விட்டே விரட்டனும்.
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
15-நவ-201720:01:44 IST Report Abuse
சிற்பி உங்களுடைய விளையாட்ட புரிந்துகொள்ளவே முடியல.. இந்த கார்களை ஒரு பெட்டியில் அடித்தா கொண்டு வர முடியும்? இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு கார்கள். ஒவ்வொன்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தேறும். இறக்குமதே செய்யப்பட்ட போதே கண்காணிக்க கூடாதா...? ஒரு ரெய்டு நடத்தி இது யாருது? என்று ஆராய்ச்சி செய்து, இன்னாருடையது என்று கோர்ட்டில் நிரூபித்து... அட போங்கப்பா... நீங்களும் உங்க ஊழலும்... எல்லோரும் ஊழல்காரனுங்க.. மாட்டினவன் அஷ்டமத்துல சனி... ஓடினவனுக்கு ஒன்பதுல குரு... இந்த நாட்ட திருத்தவே முடியாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X