ஆபாச படம் பார்த்திருக்கிறேன்: பரீக்கர்| Dinamalar

ஆபாச படம் பார்த்திருக்கிறேன்: பரீக்கர்

Added : நவ 15, 2017 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கோவா முதல்வர் மனோகர் பாரீக்கர், Goa Chief Minister Manohar Barikar, குழந்தைகள் தினம்,Childrens Day,  பள்ளி குழந்தைகள்,School Children,  சினிமா தியேட்டர்,Cinema Theater, மனோகர் பாரீக்கர், Manohar Barikar,

பனாஜி: இளம் வயதில் ஆபாச படங்களை பார்த்ததாக கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் கூறியுள்ளார்.


கலந்துரையாடல்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுடன் கோவா முதல்வர் பாரீக்கர் கலந்துரையாடினார். அப்போது அவரிடம், இளம் வயதில் எந்த மாதிரியான படங்களை பார்த்தீர்கள் என மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.


அதிர்ச்சி

அதற்கு பரீக்கர் அளித்த பதில்: இளம் வயதில் நான் ஆபாச படங்களை பார்த்துள்ளேன். தற்போது, எங்களது காலத்தில் இருந்த ஆபாச படங்களை விட, நீங்கள் மோசமான காட்சிகளை டிவியில் பார்க்கிறீர்கள். என் இளம் வயதில் பிரபலமான ஆபாச படம் ஒன்று சினிமா தியேட்டரில் வெளியானது. நானும், எனது சகோதரரும் அந்த படத்திற்கு சென்றோம். இடைவேளையில், சினிமா தியேட்டரில் விளக்குகள் போட்ட போது, அருகில் எங்களது பக்கத்து வீட்டுக்காரர் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தோம். அவர், எங்களது தாயாருடன் அடிக்கடி பேசுவார். நாங்கள் செத்தோம் என எனக்கு நானே கூறிக்கொண்டேன்.


திட்டம்

உடனடியாக நானும் எனது சகோதரனும் உடனடியாக, படத்தின் பாதியிலேயே அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு ஓடி வந்தோம். வழியில் பிரச்னையை சமாளிக்க திட்டம் தீட்டினோம். அதன்படி, வீட்டிற்கு வந்ததும் நான் எனது தாயாரிடம் சென்று, நாங்கள் ஒரு படத்திற்கு சென்றோம். ஆனால், அந்த படம் மோசமாக இருக்கும் என தெரியாது. இதனால்பாதியில் கிளம்பி வந்துவிட்டோம் என சாதாரணமாக கூறினேன். அங்கு நமது பக்கத்து வீட்டுக்காரரும் வந்ததாக கூறிவிட்டு அமைதி காத்தோம். மறுநாள் எதிர்பார்த்தது போல், பக்கத்து வீட்டுகாரரும், எனது தாயாரைஅழைத்து, நாங்கள் ஆபாச படத்திற்கு சென்றதாக கூறினார். அதற்கு எனது தாயார் அவரிடம், நாங்கள் எந்த படத்திற்கு சென்றோம் என்பது தனக்கு தெரியும். நீ ஏன் அந்த படத்திற்கு சென்றாய் ? என கேள்வி எழுப்பினார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Krishnan - Coimbatore,இந்தியா
16-நவ-201701:19:47 IST Report Abuse
Hari Krishnan போங்க பரிக்கர் சார் தமாசு பண்ணாம .. இங்க ஆபாசப்படங்களில நடிச்ச கமல் மற்றும் ஜோசப் விஜய் தான் அடுத்த முதல்வர் னு சொல்லிட்டு திரியிறானுங்க.. நீங்க வேறே காமெடி பண்ணிக்கிட்டு...
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
15-நவ-201721:23:51 IST Report Abuse
krishnan இவர் ஒரு உல்லாச பேர்வழி போல . ராணுவ மந்திரியா இருக்கும் பொது வார இறுதி நாட்ட்களில் கண்டிப்பாக கோவா வந்து விடுவாராம். அதனால் தான் கோவாகு மொதலமைச்சராக ஓடிவந்துவிட்டார். இந்தமாதிரி நெறய அழுக இருகாங்க அவங்க கட்சியல்ல .
Rate this:
Share this comment
Hari Krishnan - Coimbatore,இந்தியா
17-நவ-201717:50:08 IST Report Abuse
Hari Krishnanஆமாமா இவருக்கு ரொம்ப தெரியும் பரிக்கரை பத்தி.....
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-நவ-201720:47:50 IST Report Abuse
Agni Shiva சுவரசியான நகைச்சுவையான நிகழ்ச்சி தான். ஆனால் மாணவர்கள் மத்தியில் இதை பேசியிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஆபாச படம் என்ற விவாதத்தையே தவிர்த்து இருக்கலாம். சிறந்த மனிதர் ஆனால் மாணவர்கள் மத்தியில் பேசி சிறிது தவறி விட்டதாக படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X