ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சி?| Dinamalar

ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சி?

Added : நவ 15, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராணுவ புரட்சி,Military Revolution,  ஜிம்பாப்வே,  Zimbabwe, அதிபர் ராபர்ட் முகாபே, president Robert Mugabe,விடுதலை, Liberation, ராணுவ பீரங்கிகள்,Military cannons, ராணுவ தளபதி சிபுசிசோ மோயோ,  Army Commander Sibusiso Moyo,

ஹராரே: ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிபரை சுற்றியுள்ள குற்றவாளிகளை மட்டுமே குறிவைத்துள்ளதாக ராணுவம் விளக்கமளித்துள்ளது.


சுற்றி வளைப்பு

கடந்த 1980ல் இங்கிலாந்திடமிருந்து ஜிம்பாப்வே விடுதலை பெற்றது முதல் அதிபராக ராபர்ட் முகாபே இருந்து வருகிறார். உலகின் நீண்ட நாட்களாக பதவியில் இருக்கும் தலைவராக இவர் கருதப்படுகிறார். இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய சாலைகளில் ராணுவம் குவிக்கப்பட்டது. தலைநகர் ஹராரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. ராணுவ வீரர்கள் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டனர். அந்நாட்டு அரசு ஊடக தலைமை அலுவலகத்தையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவம், தகவல் வெளியானது. அதிபர் முகாபேவும், அவரது மனைவியும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.


சீராகும்

இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி சிபுசிசோ மோயோ டிவியில் பேசுகையில், அதிபர் மற்றும் அவரின் மனைவி பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறோம். ராணுவம் ஆட்சியை கைப்பற்றவில்லை என்பதை தெளிவாக கூறுகிறோம். நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்திற்கு பிரச்னையாக அதிபரை சுற்றியுள்ளவர்களை குறிவைத்துள்ளோம். அவர்கள் நீதி முன் நிறுத்தப்படுவார்கள். எங்களது நோக்கம் நிறைவேறிய பின்னர், நாட்டில் நிலைமை பழைய நிலைமைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவுர் கூறினார்.


பாதுகாப்பு

இதனிடையே, அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shree Ramachandran - chennai,இந்தியா
15-நவ-201720:50:20 IST Report Abuse
Shree Ramachandran ராபர்ட் முகாபே இந்திரா காந்திக்கு மிக வேண்டியவர். காரணம் இருவருமே சர்வாதிகார சிந்தனை உள்ளவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை