கடலோர படை வீரர்களிடம் விசாரணை: டி.எஸ்.பி., தகவல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர படை வீரர்களிடம் விசாரணை: டி.எஸ்.பி., தகவல்

Updated : நவ 16, 2017 | Added : நவ 15, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
இந்திய கடலோர காவல்படை,Indian Coast Guard, மன்னிப்பு,Sorry, பேச்சுவார்த்தை ,negotiation, தமிழக மீனவர்கள், Tamil nadu fishermen, துப்பாக்கிச்சூடு, gunfire,

ராமேஸ்வரம்: மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக தேசிய கடலோர காவல் படை வீரர்களுக்கு சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்தப்படும், என மண்டபம் கடலோர குழும போலீஸ் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
நவ.,13ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் மீது தேசிய கடலோர காவல் படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பிச்சை ஆரோக்கியம், ஜான்சன் இருவருக்கு காயம் ஏற்பட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.இது தொடர்பாக மண்டபம் கடலோர குழும போலீசார் தேசிய கடலோர காவல் படை வீரர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தை நேற்று மண்டபம் கடலோர குழும போலீஸ் டி.எஸ்.பி.,ரவிச்சந்திரன், தலைமையில் போலீசார் படகில் சென்று பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட விசைப்படகையும் ஆய்வு செய்தனர்.
டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் கூறியதாவது:ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து 4 நாட்டில்கல் மைல்(7.5 கி.மீ.,துாரம்) துாரத்தில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்தோம். இச்சம்பவம் தொடர்பாக தேசிய கடலோர காவல் படை வீரர்களுக்கு சம்மன் அனுப்பி, விரைவில் விசாரணை நடத்தப்படும், என்றார்.

மன்னிப்பு கேட்டது கடலோர காவல்படை


'ஓசி' படகு கேட்ட போலீசார்:

துப்பாக்கி சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்ய மரைன் போலீசார் நேற்று, காயமடைந்த மீனவரின் படகு உரிமையாளரிடம் ஓசியில் படகு தரும்படி கேட்டனர். படகு தர மறுத்த மீனவர்கள், போலீசாரிடம் கேள்விகள் கேட்டு ஆத்திரமாக பேசினர். இதனால் போலீசார் தங்கள் செலவிலேயே வேறு படகில் கடலுக்குள் ஆய்வுக்கு சென்றனர்.
தங்கச்சிமடம் மீனவர் எடிசன் கூறுகையில், நம்எல்லைக்குள் மீனவருக்கு ஏற்படும் பிரச்னைக்கு ஒருநாள் கூட மரைன் போலீசார் உதவி செய்யவில்லை. தற்போது துப்பாக்கி சூட்டில் பாதித்த மீனவரின் படகு உரிமையாளர், பிற மீனவர்களிடம் விசாரணை என்ற பெயரில் போலீசார் அலைக்கழிப்பு செய்கின்றனர். போலீசாரிடம் அதிநவீன ரோந்து படகு இருந்தும், சம்பவ இடத்தை பார்க்க எங்களிடம் ஓசி படகு கேட்டார்கள். நாங்கள் கொடுக்க மறுத்து விட்டோம், என்றார்.


அமைச்சர் ஆறுதல்:

ராமேஸ்வரத்தில் அமைச்சர் மணிகண்டன், துப்பாக்கி குண்டு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறும் மீனவர்கள் பிச்சை ஆரோக்கியம், ஜான்சன் இருவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின் அமைச்சர் கூறியதாவது:நேற்று முன்தினம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என கடலோர காவல் படை உயர்அதிகாரிகள் அறிக்கை வெளியிட்ட நிலையில், மீனவர்களை வரவழைத்து வருத்தம் தெரிவித்துஉள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் பழனிசாமி,பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார், என்றார்.


வருத்தம் தெரிவித்ததால் போராட்டம் வாபஸ்:

நேற்று மாலை ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள தேசிய கடலோர காவல் படை அதிகாரிகள், ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தைநடத்தினர்.ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறியதாவது:மீனவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து, இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காது எனவும், தற்போதைய சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடக்கிறது. உண்மையெனில் சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை வாபஸ் பெறுங்கள் என கோரினர். இதையடுத்து இன்று நடக்கும் போராட்டம் நடைபெறாது, என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - toronto,கனடா
16-நவ-201704:17:15 IST Report Abuse
bala மேல நாடுகளில் இது நடந்து இருந்தால் அந்த மீனவர்களுக்கு நஷ்டஈடு கொடுத்திருப்பார். ஆனால் நம்ம நாட்டில் அதிகார வர்க்கம் எளிய மக்களை சிந்திப்பதே இல்லை. யாருக்கு வேண்டும் இவர்களுடைய மன்னிப்பு. முதலில் அவனுக்கு எற்பட்ட இழப்புக்கு பணம் குடுங்க. எனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க காவல் படை மீது நட வடிக்கை எடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Capt JackSparrow - Madurai,இந்தியா
16-நவ-201702:31:03 IST Report Abuse
Capt JackSparrow இரு தரப்பும் சமாதானமாகி இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிமுறை செய்து கொண்டால் நல்லது. உதாரணமாக கடலோர காவல்துறை படகை நிறுத்துமாறு கூறினால், மீனவர்கள் ஓடவோ (படகின் மூலம்), தப்பிக்கவோ (கடலில் குதித்து) முயற்சிக்க கூடாது. அது போல காவல்துறை மீனவர்க்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியவில்லை என்றால் உடனே கைது செய்யாவோ, தாக்கவோ கூடாது. மொழி தெரிந்த ஒருவரை சடெல்லிட்டே போன், ரேடியோ மூலம் அணுகி தெளிவு பெற வேண்டும். இப்போது சீமான் இதை வைத்து எவ்வளவு மட்டமாக அரசியல் செய்ய போகிறார் என தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-நவ-201700:03:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்தியாவுக்கு கடலோர பாதுகாப்பு படையா இல்லை இலங்கைக்கு கடலோர பாதுகாப்பு படையான்னு தெரியலே. வடக்கத்தானை வச்சா அவனுக்கு தக்காண பீடபூமி க்கு கீழே இருக்குறதெல்லாம் பாகிஸ்தான்னு சொல்லுவான்.
Rate this:
Share this comment
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
15-நவ-201721:31:07 IST Report Abuse
velan தலைவி இல்லாத தமிழகம் தலைவர் இல்லாத தமிழகம் என்று ஏளனம் செய்யும் அளவுக்கு உள்ளது . இதுபோன்று தமிழகத்தின் நலனில் , தமிழக மக்களின் உரிமைகளில் இந்திய அரசே பாதகம் செய்தால் அது இந்திய இறையாண்மைக்கு கேள்விக்குறியாக அமைந்துவிடும்.தமிழகம் இயற்கை வளத்திலும் சரி , மக்கள் உழைப்பிலும் சரி, மொழியிலும் சரி தனியாக சுயம்புவாக இயங்கும் சக்தி படைத்தது . எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் தமிழன் யாரையும் நம்பி இல்லை
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
15-நவ-201721:23:44 IST Report Abuse
J.Isaac முதலில் சுடவில்லை என்று ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும் ? நம் பாதுகாப்பு படையிடமும் நேர்மை குறைந்துக்கொண்டு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-நவ-201720:26:35 IST Report Abuse
ஜெயந்தன் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை டெல்லிக்கு அடிமை ஆக்க பார்க்கிறது பிஜேபி.. அதனால் தான் இந்த மிரட்டல்கள் எல்லாம்.. ஏற்கனவே மாநில அரசு அடிமை ஆகி விட்டது..இனி தமிழக மக்கள் தான் அடுத்த குறி..
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
15-நவ-201719:59:09 IST Report Abuse
Varun Ramesh எதற்காக கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது என்பதை ஊடகங்கள் கேட்கவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
15-நவ-201719:09:17 IST Report Abuse
yaaro மன்னிப்பு கேட்டதா எங்கயும் நியூஸ் வரல . கோஸ்ட் கார்டு எதுக்கு ரப்பர் புல்லட் வெச்சிருக்கணும் முதல்ல. ரப்பர் புல்லட் ரயட் கன்ட்ரோல் பண்ணறதுக்குத்தான் ..கடல்ல எவன் கும்பல் சேர்த்துட்டு கல் எறிஞ்சிட்டு இருக்கான் ரயட் கண்ட்ரோல் பண்ண
Rate this:
Share this comment
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
15-நவ-201719:03:22 IST Report Abuse
VOICE வெயிட்டா மாதம் மாதம் மீட்டிங் முடிந்ததும் வஞ்சிரம் மீன் கொஞ்சம் தாராளமாக அன்பளிப்பாக கொடுக்கப்பட்டால் நட்புறவு கூடும். கொடுப்பதனால் தவறு இல்லை ஆனால் சுட்டவர் மீது கண்டிப்பாக நடவெடிக்கை எடுக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201718:01:08 IST Report Abuse
karthikeyan மன்னிப்பு கேட்டது சுத்த பொய்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை