ரெய்டு பற்றி அமைச்சர்கள் ‛மூச்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரெய்டு பற்றி அமைச்சர்கள் ‛மூச்'

Updated : நவ 15, 2017 | Added : நவ 15, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஐடி ரெய்டு,IT Raid, அமைச்சர்கள், Ministers,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, Chief Minister Edappadi Palanisamy, சசிகலா குடும்பம், Sasikala Family,வருமான வரித் துறை,Income Tax Department,  அ.தி.மு.க., AIADMK,தினகரன்,Dinakaran, மத்திய அரசு,Central Government,  தமிழகம்,  Tamil Nadu,

சென்னை:தமிழகம் முழுவதும் சசி குடும்பத்துடன் தொடர்புடைய 197 இடங்களில் அதிரடியாக வருமான வரித் துறை ஒரே நேரத்தில் ரெய்டு நடத்துவதை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது குறித்து எந்தக் கருத்தும் சொல்லாதது மட்டுமல்ல; அமைச்சர்கள் கட்சியினர் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக்குவதாக நினைத்துக் கொண்டு பத்திரிகைகளுக்கு கருத்துச் சொல்ல வேண்டாம் என உத்தரவிட்டிருப்பதாக தகவல் பரவி இருக்கிறது.


பொதுமக்கள் வரவேற்பு:

இது குறித்து, அ.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தினகரன், தன்னை புனித ஆத்மாவாக காட்டிக் கொள்ள, மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் குற்றம்சாட்டி கருத்துச் சொன்னாலும், அதை மக்கள் நம்பத் தயாரில்லை. மோடி, பழிவாங்குவதற்காகவே அல்லது தினகரன் - சசிகலா தரப்பை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தோடு வருமான வரித் துறையினரை ஏவிவிட்டதாகவே வைத்துக் கொண்டாலும், ரெய்டு மூலம் கைப்பற்றப்பட்டிருக்கும் ஆவணங்கள், நகைகள், பணத்தை எல்லாம் அறியும் பொது மக்கள், இந்த ரெய்டை வரவேற்கின்றனர்.

சாதாரண சி.டி., கடை வைத்திருந்த சசிகலாவுக்கு எப்படி இத்தனை பெரிய சொத்து வந்தது? கர்சன் எஸ்டேட் விவரங்களையெல்லாம் பார்க்கும் பொது மக்கள், சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஆத்திரத்தில் பொங்குகின்றனர்.இந்த ரெய்டால் தங்கள் மீது மக்களுக்கு பரிதாபம் ஏற்பட்டிருப்பதாக, தினகரன் தரப்பு நினைத்துக் கொண்டிருந்தாலும், நிஜத்தில் அப்படி இல்லை.இப்படிப்பட்ட சூழலில், இந்த ரெய்டை ஆதரிப்பது போல வெளியே கருத்துச் சொல்வதுதான், பழனிச்சாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கு இருக்கும் ஒரே வழி. ஆனால், அப்படி சொன்னால், நேற்று வரை, சசிகலாவுக்கு துதி பாடி, அமைச்சர்களாக இருந்து கொண்டு, லஞ்சம்-ஊழல் தழைக்க, கமிஷன் வாங்கிக் கொடுத்து, கமிஷன் பெற்றவர்கள்தானே இவர்கள். இப்படிப்பட்டவர்கள், நியாயவாதிகள் போல பேசுகிறார்களே என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும். அதற்கு நாமே இடம் கொடுத்துவிடக் கூடாது.

அதனால், ரெய்டை ஆதரிப்பது போலவோ, எதிர்ப்பது போலவோ எந்தக் கருத்தையும், நம் அமைச்சர்கள், தலைவர்கள் யாரும் சொல்ல வேண்டாம் என, முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதனால்தான், ரெய்டு தொடர்பாக, அ.தி.மு.க., தரப்பு அடக்கி வாசிக்கிறது.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
16-நவ-201706:48:07 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஆமாம் நேத்திவரை தினகரன் படு கிளீன் ரெய்டுன்னதும் அசுத்தமா ஆயிட்டானோ என்னிக்கு அதுகள் குர்ஸிலேயே கண்ணா இருக்குங்களோ அப்போதுலேந்து நான் சொல்லிண்டே இருக்கேன் சுருட்டினதை காக்கவேதான் குறிக்கு லடாய் ' எல்லோருமே மாட்டுவீங்க பார்த்துண்ணே இருங்க
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-நவ-201700:05:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பொது மக்கள், சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஆத்திரத்தில் பொங்குகின்றனர். - அடேய், பத்து வருஷமா பொங்குறோம், அப்போ எங்கேடா போனீங்க. இப்போ பொங்குறோமுன்னு இவன் பொங்குறான்..
Rate this:
Share this comment
Cancel
a.s.jayachandran - chidambaram,இந்தியா
15-நவ-201720:22:41 IST Report Abuse
a.s.jayachandran இப்போது தான் தெரிகிறதா சசிகலா காஸெட் கடை வைத்து இருந்தார் என்று கப்பம் கட்டும் போது தெரியவில்லையா.அவர் காலில் விழும் போது தெரியவில்லையா .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X