காங்., செயற்குழு கூட்டத்தில் முடிவு : ராகுல் தலைவராவதற்கு விறு விறு ஏற்பாடு Dinamalar
பதிவு செய்த நாள் :
ராகுல் தலைவராவதற்கு விறு விறு ஏற்பாடு
காங்., செயற்குழு கூட்டத்தில் முடிவு :

புதுடில்லி, : காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை, தற்போது, அதன் துணைத் தலைவராக உள்ள ராகுல் விரைவில் ஏற்க உள்ளார்.

காங்., செயற்குழு கூட்டத்தில் முடிவு : ராகுல் தலைவராவதற்கு விறு விறு ஏற்பாடு

தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராகுலை தலைவர் பதவிக்கு நிறுத்துவது என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, 70, உடல்நலக்குறைவால், சமீப காலமாக அரசியல் நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. அவரது மகனும், கட்சியின் துணைத் தலைவருமான ராகுலை, 47, கட்சித் தலைவர் பதவியை ஏற்கும்படி, கட்சியின் மூத்தத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
கடந்தாண்டு நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்திலும், இது வலியுறுத்தப்பட்டது. ஆனால், தேர்தல் மூலமே கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை ராகுல் தெரிவித்திருந்தார். அதன்படி கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக, செயற்குழு கூட்டம், சோனியா தலைமையில் நேற்று நடந்தது.
அதைத் தொடர்ந்து, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் நடவடிக்கைகள், டிச.,1ல் துவங்குகின்றன.


வேட்பு மனுத் தாக்கல் பரிசீலனை செய்வதற்கு டிச., 5 கடைசி நாள். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு, டிச.,11 கடைசி நாள். போட்டி இருந்தால், டிச.,16ல் தேர்தலும், டிச., 19ம் தேதி முடிவுகளும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏகமனதாக முடிவுஇதற்கிடையே, கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுலை நிறுத்துவதற்கு, செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சோனியா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.செயற்குழு கூட்டத்தின் முடிவுகள் குறித்து, கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரனதீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுலை நிறுத்துவது என கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், சோனியா, தொடர்ந்து கட்சிக்கு ஆலோசனைகள் வழங்குவார். அவர் கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவராக தொடர்ந்து செயல்படுவார்.இவ்வாறு அவர் கூறினார். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ராகுலை நிறுத்துவது என்ற செயற்குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சியின்அடுத்தத்தலைவராக விரைவில் ராகுல் பொறுப்பேற்பது உறுதியாகி உள்ளது.

'வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான, டிச., 5ல், ராகுலை தவிர, வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றால், அவர் தலைவராவது அன்றே உறுதி செய்யப்படும்.

Advertisement

வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு இல்லை' என, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

சோனியா காட்டம்


டில்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா பேசியதாவது: குளிர்கால கூட்டத் தொடரை ஒத்திவைத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பார்லிமென்ட் நடவடிக்கைகளை சீர்குலைத்து விட்டது. மோடியின் பிடிவாத குணத்தால் போலியான அற்ப காரணங்களை கூறி பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை முடக்கி விட்டனர். ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்ய நடு இரவில் பார்லிமென்ட் கூட்டத்தை நடத்தியவர்கள்
எதிர்க்கட்சிகளை சந்திக்க பயந்து பார்லிமென்ட் கூட்டத் தொடரை நடத்தவில்லை.வேலைவாய்ப்பு இல்லாதது, விலைவாசி உயர்வு, இறக்குமதி குறைவு போன்றவற்றுடன், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.
ஓராண்டாகியும் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் பாதிப்பு இன்றும் தொடர்கிறது, என்றார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S K NEELAKANTAN - chennai 24,இந்தியா
21-நவ-201714:54:26 IST Report Abuse

S K NEELAKANTANராகுல் குடிசை குடிசையாக போய் கஞ்சி குடித்தார். ஒன்றும் பெறவில்லை. இப்பொழுது கோவில் கோவிலாக போகிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் இந்த நாடு ஏன் வேகமாக முன்னேறவில்லை என்ற காரணம், அவர் கிள்ளு தாத்தா, அவர் பாட்டி, அவர் அப்பா, அவர் அம்மா, இப்போ இவர்....... இந்தியா வையும் , காங்கிரெஸ்ஸையும் காப்பாற்று.

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
21-நவ-201714:37:14 IST Report Abuse

Paranthamanராகுல் பிறந்த தேதி 18 .06 .70 நேரம் இரவு 09 .52 .வியாழன். மேஷம் 4 ல் சனி நீச்சம். குடும்ப சுகமில்லை. ஆயுள்காரகன் சனியை குரு பார்வை நீண்ட ஆயுள். 7ல் சுக்ரன் பகை சிம்மம் 8ல் கேது பகை திருமணமில்லை. 5ல் புதன் நல்ல கல்வி 6ல் சூரியன் மறைவு ஸ்தானம். நேரடி ஆட்சி இல்லை. துலாம் 10 ஜீவனஸ்தானம் குரு பகை. செய் தொழில் பதவி என எதுவும் இல்லை. பூர்வீக சொத்தை அனுபவிப்பவர். மகர லக்னம் சர ராசி.ஒரு இடத்தில் நிற்கமாட்டார். சிந்தனையும் அப்படியே. 11மிடம் லாபத்தில் நீச்ச சந்திரன். உடலுழைப்பு மிக குறைவு. பிறரது வாக்குறுதியை நம்பி எளிதில் ஏமாறுபவர். பிரதி பலனை எதிர் பார்க்காதவர்.

Rate this:
anand - Chennai,இந்தியா
21-நவ-201713:59:02 IST Report Abuse

anandஇளவரசரை தான் முடிசூட்ட போகிறீர்கள்..அப்புறம் எதுக்கு election?

Rate this:
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
21-நவ-201713:38:38 IST Report Abuse

நந்தினி திவ்ய பாரதிஅங்க திறைமையானவங்க ரொம்ப நெறய பேர் இருப்பாங்களே. அவங்கள்லாம் அப்ளை பண்ணக்கூடாது அப்டி சோளி போட்டாங்களா.

Rate this:
rajan - kerala,இந்தியா
21-நவ-201713:36:17 IST Report Abuse

rajanநம்ம பப்பு ஐஸ்க்ரீம் சாப்பிட தயாராகி விட்டான். இனி தொண்டர்களுக்கெல்லாம் லாலி பாப் இலவசம்.

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
21-நவ-201713:31:22 IST Report Abuse

Paranthamanராகுல் ஒரு ஏடா கூடமான ஆள். சோனியா காந்தியும் அதற்கு மேல் ஏடாகூடமான பொம்பளை. அவர் கட்சியும் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து கொட்டினால் நாலா பக்கமும் சிதறிஓடுவது போன்று ஒற்றுமையில்லாதவர்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு கட்சி அதில் ஊர் பேர் தெரியாத கோமாளிகள். திராவிட கட்சியினன் பெரியாரை தந்தை பெரியார் என்றான். காங்கிரஸ் காரன் சோனியாவை அன்னை சோனியா என்று கூப்பிடுகிறான். இவர்களது உறவுமுறைகள் நாட்டு மக்கள் பக்கம் வரக்கூடாது.

Rate this:
Endless - Chennai,இந்தியா
21-நவ-201709:56:37 IST Report Abuse

Endless"லக்கான குமரனுக்கு" என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-நவ-201708:45:49 IST Report Abuse

Srinivasan Kannaiyaமோடியின் பிடிவாத குணத்தால் போலியான அற்ப காரணங்களை கூறி பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை முடக்கி விட்டனர்,,,அப்போ மோடி என்றாலே போலி என்கிறீர்களா...

Rate this:
vasanthan - Moscow,ரஷ்யா
21-நவ-201708:31:05 IST Report Abuse

vasanthanவடக்கிலே பப்புவும் தெற்கிலே சுடலையும் கட்சியில் இருக்கும் வரை இரண்டும் கட்சிக்கும் கேடு காலம் தான்

Rate this:
இரா. சந்திரன் - சென்னை,இந்தியா
21-நவ-201717:41:54 IST Report Abuse

இரா. சந்திரன்ஒரு ஆர்வத்திற்குத் தான். சுடலை யாரென்று தெரிகிறது.. ஆனால் ஏன் அந்தப்பெயர் என்பது புரியவில்லை?...

Rate this:
skv - Bangalore,இந்தியா
22-நவ-201706:20:06 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>அது ஒண்ணுமில்லீங்க முகவின் தாய்வீட்டுக்கு குலதெய்வம் சுடலைமுத்து முனீஸ்வரனாக்கும் தன் தந்தை பெயர் முத்துவேலர் முதல் மவன் முக முத்துக்கு அப்ப அப்பேறு வச்சாங்க அடுத்து அழகிரிக்கு அந்தப்பெரு இவருக்கு தான் குலதெய்வம் பேருவச்சுட்டாங்க சுடாலின் மீது ரொம்பவே முகாவுக்கு பிரியமா செல்லலாமா சுடாலின் என்று அழைக்க அதுவே நிலைச்சுருக்கும் போல, செலவும் செழிக்கவந்தானு மகளுக்கு செல்வி தன் மகளே என்று சொல்லியவளுக்கு பேரு கனிமொழி...

Rate this:
raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ
21-நவ-201708:15:49 IST Report Abuse

raguraman venkatMy personal assessment is that Rahul, Stalin, Akilesh are good people by heart. But as they grew up, they were always surrounded by people with mixed agenda - those who wish them well and those who exploit them, and these young leaders always rely on these people more than they rely on their inner voice. This leads to either not taking timely decision or taking incorrect decision. As they rely on other sources, their own self confidence is not that high. Also, they are unreasonably compared with their parents. For example, a 60 year old Stalin is compared with 93 year old MK whose astute political reading has very few matching in whole India and this is unfair on the part of Stalin. Such comparisons add additional pressure to them. People like Modi and Amit Shah (even Nitish Kumar, Mamta, JJ, MK) did not have this pressure. They all grew from the low level, so they are able to get 360 degree view on most of the items and are able to take timely and bold decisions. The younger lot is actually carrying the sins of their elders, so that is another disadvantage they have.

Rate this:
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
21-நவ-201708:55:43 IST Report Abuse

Jey Kay - jeykay@email.comதங்களின் கூற்றுப்படி ராகுல், ஸ்டாலின், அகிலேஷ் ஆகியோர் சுயமாக குறிப்பிட்ட நேரத்திரிக்குள் சரியான முடிவெடுக்க தெரியாதவர்கள் என்றால் அவர்களுக்கு எதற்கு அரசியல். கீழ் மட்டத்திலிருந்து வருபவர்களால் இவர்களை விட சிறப்பாக செயல்பட முடியும் என்று கருதினால் இவர்கள் எதற்கு இன்னும் அரசியல் செய்ய வேண்டும். அரசியல் என்பது நாட்டையும் மக்களையும் முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச்செல்வதே ஒழிய தகப்பனார் ஆட்சி புரிந்தார் என்பதற்காக தானும் ஆட்சியில் அமரவேண்டும் என்பதற்காக இல்லை....

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement