சசி உறவுகளின் சொத்துக்களை, 'ஜப்தி' செய்ய வேண்டும்: ஜெயகுமார் ஆவேசம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசி உறவுகளின் சொத்துக்களை, '
ஜப்தி' செய்ய வேண்டும்: ஜெயகுமார்

சென்னை,''சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்களை, ஜப்தி செய்ய வேண்டும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் கூறியதாவது:

சசிகலா சொத்துக்கள்,Sasikala assets,அமைச்சர் ஜெயகுமார் , Minister Jayakumar, நடிகர் கமல்,Actor Kamal,  தினகரன் ,Dinakaran, லஞ்ச ஒழிப்புத் துறை, Vigilance Department,நீதிமன்றம்,Court, தகவல் அறியும் உரிமை சட்டம்,  Right to Information Act, குற்றவாளிகள்,Criminals, திவாகரன், Divakaran,  சசிகலா குடும்பம்,Sasikala Family,

சசிகலா குடும்பமும், தினகரனை சார்ந்தவர்களும், சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவங்களாக உள்ளனர். அவர்களின் சொத்துக்களை, முதலில், ஜப்தி செய்ய வேண்டும். அந்த அளவிற்கு, தமிழகத்தை சூறையாடி வளைத்து போட்டுள்ளனர். 'சசிகலாவை, ஜெ.,

பாதுகாக்காமல் விட்டு விட்டார்' என, திவாகரன் கூறுகிறார். ஜெ.,வை விமர்சனம் செய்ய, எந்த தகுதியும் இல்லாதவர் திவாகரன். அதேபோல், 'ஜெ., முதல் குற்றவாளி' என, தினகரன் கூறுகிறார். எவ்வளவுநெஞ்சழுத்தம்; இவர்களை வரலாறு மன்னிக்காது.


கமல் மீது காட்டம்கமல் மீது நடவடிக்கை'குற்றவாளிகள் நாடாளக் கூடாது; ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான்' என, நடிகர் கமல் கூறியது கண்டனத்திற்குரியது. குற்றம் இருந்தால் எங்களிடம் கூறுங்கள்; திருத்திக் கொள்கிறோம். நாங்கள் கேட்காவிட்டால், லஞ்ச ஒழிப்புத் துறை,நீதிமன்றம், தகவல் அறியும் சட்டம் என, பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆதாரமின்றி,கற்பனையான குற்றச்சாட்டை, நடிகர் கமல்முன் வைத்திருப்பதை ஏற்க முடியாது.

Advertisementயாருடைய கைப்பாவை


ஜெ., இருந்த போது, 'நாட்டை விட்டே ஓடிவிடுவேன்' எனக்கூறிய கமலுக்கு, தற்போது முதுகெலும்பு எப்படி வந்தது. அவர், யாருடைய கைப்பாவையாகவே செயல்படுகிறார். நாங்கள் உப்பு போட்டு சாப்பிடுவதால், ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டிய கமல் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a.s.jayachandran - chidambaram,இந்தியா
21-நவ-201719:25:18 IST Report Abuse

a.s.jayachandranகரெக்டான பதில் தான் உங்கள் ஆட்சி தானே நடந்து கொண்டு இருக்கிறது சசிகலா மற்றும் அவர்களுடைய சொத்துக்களை நீங்களே ஜப்தி செய்யலாமே .ஏன் தயக்கம் .முதலில் அதை செய்யுங்கள் பார்க்கலாம்.

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
21-நவ-201717:52:22 IST Report Abuse

Sundaramavangala kudumbathoda jail ah adachathan india ve nala irukum

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
21-நவ-201717:44:39 IST Report Abuse

Jeeva mannarkudi sammantha patta orunthan kooda miss aga koodathu

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X