மாற்றங்களுக்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்! : 'தினமலர்' துணை ஆசிரியர் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றங்களுக்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்! : 'தினமலர்' துணை ஆசிரியர் பேச்சு

Added : நவ 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மாற்றங்களுக்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்! : 'தினமலர்' துணை ஆசிரியர் பேச்சு

திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொடர்பியல் துறையில், புதிய கட்டடங்களை, 'தினமலர்' துணை ஆசிரியர், கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், 'தினமலர்' ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் உதவியால், 70 லட்சம் ரூபாயில், தொடர்பியல் துறை கட்டடம், ஸ்டுடியோ கட்டித் தரப்பட்டது. 2007ல், 'சக்தி' நிறுவனங்களின் தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம், இதை திறந்து வைத்தார்.

ரூ.25 லட்சம் : இந்த கட்டடத்தில் கூடுதலாக நுாலகம், மினி தியேட்டர் கட்டப்பட்டுள்ளது. 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நிதி, 25 லட்சம் மற்றும் பல்கலை நிதி, 25 லட்சம் ரூபாயில், இவை கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. துணைவேந்தர் பாஸ்கர் தலைமை வகித்தார். பதிவாளர் ஜான் டி பிரிட்டோ முன்னிலை வகித்தார். தொடர்பியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியராஜா வரவேற்றார்.

மூத்த பேராசிரியர் கோவிந்தராஜு பேசியதாவது: நெல்லை பல்கலையில், 1990களில், முதன் முதலாக தொடர்பியல் துறைக்கு, 'தினமலர்' சார்பில் கம்ப்யூட்டர்கள் வழங்கி, அதன் நிறுவனர், டி.வி.ராமசுப்பையர் பெயரில் ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டது.

மாணவர் பத்திரிகை : மாணவர்கள் தயாரித்த, 'அர்ஜுனா, தாமிரபரணி, ஊரக உறவு' போன்ற பத்திரிகைகளை, 'தினமலர்' சார்பில் அச்சிட்டு, இலவசமாக வழங்கினர். ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியை சமீபத்தில் சந்தித்த போது, தொடர்பியல் துறை மூலம், 17 பேர் முனைவர் பட்டம் பெற்றிருப்பது குறித்து, மகிழ்ச்சி அடைந்தார். பல்கலையில், அவரது பெயரில் ஏற்படுத்தப்பட உள்ள ஆய்வு நிதிக்காக, ஐந்து லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் தருவதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

விரிவாக்க கட்டடங்களை, 'தினமலர்' துணை ஆசிரியர், கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு திறந்து வைத்து, பேசியதாவது: பத்திரிகை துறையில், நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. துறையில் பயிலும் மாணவர்கள், அதற்காக தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
குறிப்பாக, இரண்டு விஷயங்கள் உள்ளன. தற்போது, கம்ப்யூட்டர்களே செய்தி எழுதும் அளவுக்கு தகுதியாகி விட்டன. இதை, ஆங்கிலத்தில், 'ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ட்' என்கின்றனர். விளையாட்டு செய்தி, கட்டுரை என, எதை வேண்டுமானாலும் எழுதி விடும். ஆனால், கோர்வையாக இருக்காது. எனவே, அதற்காக நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்னொரு விஷயம், 'பிக் டேட்டா' எனப்படுகிறது. எதைப் பற்றி வேண்டுமானாலும் புள்ளி விபரங்கள், தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம், அந்த துறையில் மேலும் வளர்ச்சி அடைய முடியும். குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மாடுகள் இனப்பெருக்க மையத்தில், ஒவ்வொரு மாடு குறித்தும், தலை முதல் கால் வரை, தனித்தனியாக புள்ளி விபரங்கள் சேகரித்து வைத்திருந்தனர். இதன் மூலம், வெறும், 5 லிட்டர் பால் கறந்த மாடுகளை, 30 லிட்டர் கறக்கும் மாடுகளாக மாற்ற முடிகிறது.

விளையாட்டு : இத்தகைய வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு, நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். செய்தித் துறையில் அரசியல், வளர்ச்சி மட்டுமல்லாது பொருளாதாரம், வணிகம், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். விளையாட்டு செய்திகளை கூட சுவாரஸ்யமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள். தற்போது ஒருவர், அரசாங்கத்திடம் இருந்து, சான்றிதழை தவிர வேறு எதுவும் பெறாமலேயே வாழ்க்கை நடத்தி விடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களுக்கு தயாராகிக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மாணவி ராஜசினேகா தொகுத்து வழங்கினார். பேராசிரியர் ராதா பத்ரன் நன்றி கூறினார். தொடர்பியல் துறை வளாகத்தில், கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, மரக்கன்று நட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை