ஜெ., மரணம் குறித்த விசாரணை நாளை துவக்கம் கூடுதல் அதிகாரம் கேட்டு அரசுக்கு கமிஷன் கடிதம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., மரணம் குறித்த விசாரணை நாளை துவக்கம்
கூடுதல் அதிகாரம் கேட்டு அரசுக்கு கமிஷன் கடிதம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன், நாளை தன் பணியை துவக்குகிறது. உயர் பதவியில் இருப்போரையும் விசாரிக்க வசதியாக, கூடுதல் அதிகாரம் கேட்டு, கமிஷன் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவால், 2016 செப்டம்பர், 22ல், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மரணம் , Jayalalithaa death, நீதிபதி ஆறுமுகசாமி ,Justice Arumugasamy,  விசாரணை கமிஷன்,Commission of Inquiry,  அப்பல்லோ மருத்துவமனை,Apollo Hospital, சி.பி.ஐ, CBI,முதல்வர் பழனிசாமி , Chief Minister Palanisamy,சசிகலா குடும்பம், Sasikala Family,தி.மு.க சரவணன், DMK Saravanan, ஆனுார் ஜெகதீசன், Anuar Jagadeesan, தீபா கணவர் மாதவன்,Deepa Husband Madhavan,  எம்பால்மிங்,Embalming, உயர் நீதிமன்றம், High Court,

நவ., 22க்கு முன்அங்கு சிகிச்சை பலனின்றி, டிச., 5ம் தேதி இரவு இறந்தார். 'ஜெ., மரணத்தில், பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, செப்., 25ல், முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.விசாரணை கமிஷன் சார்பில், 'ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்கள் தெரிந்தோர், உறுதிமொழி பத்திர வடிவில், நவ., 22க்கு முன் அளிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டது.இதற்கான காலக்கெடு,

நாளை முடியும் நிலையில், விசாரணை கமிஷனுக்கு, 70 கடிதங்கள் வந்துள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆனுார் ஜெகதீசன், ஜெ., அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி ஒருவர் உட்பட, பலர்பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.இவர்களில், சரவணனை நாளை காலை, 10:30 மணிக்கு ஆஜராகும்படி,கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஜெ., மரணம் தொடர்பாக, லண்டனிலிருந்து வந்த டாக்டர் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சசிகலா குடும்பத்தினர் என, அனைவரையும் விசாரிக்க வேண்டி உள்ளது.
தற்போது, விசாரணை கமிஷனுக்கு, 'முன்சீப்' நீதிமன்ற நீதிபதிக்கான அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. உயர் பதவியில் இருப்போரையும், வெளிநாடுகளில் இருப்போரையும் அழைத்து விசாரிக்கும் வகையில், கூடுதல் அதிகாரம் வழங்கக் கோரி, விசாரணை கமிஷன் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.


'சசி உறவினர்களிடம் விசாரிக்க வேண்டும்'விசாரணை கமிஷனில், தீபாவின் கணவர் மாதவன் சமர்ப்பித்துள்ள, பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதாவது:ஜெ., அண்ணன் மகள் தீபாவை திருமணம் செய்துள்ளதால், நான்,ஜெயலலிதாவுக்கு மகனாவேன். ஜெ., மறைவு தொடர்பாக, எனக்கும், என் குடும்பத்தினருக்கும் சந்தேகம் உள்ளது. அவருடன் இருந்த பாதுகாவலர்கள், போலீசார், டி.ஜி.பி., வீட்டு வேலைக்காரர்கள், டிரைவர்கள், சமையலர்கள், அவசரகால மருத்துவர்கள், சசிகலா, ஜெ.,யின் அரசியல் ஆலோசகர்கள்,

Advertisement

போயஸ் கார்டன் வந்து போன அதிகாரிகள், சசிகலா
உறவினர்கள் என, அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.சசிகலா, இளவரசி, அவர்களின் குடும்பத்தினர், ஜெ., உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களின் சுய லாபத்திற்காக, சதிவலை பின்னப்பட்டுள்ளது. ஜெ., இறப்பு சசிகலாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த சதியில், அவருக்கு தொடர்பு இருப்பதாக கருதுகிறோம்.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு, அக்கறையோடு நேரத்தை செலவிட்டவர்கள், ஜெ.,க்கு உரிய சிகிச்சை அளிக்க முன் வரவில்லை. ஜெ.,வால் விரட்டப்பட்ட சசிகலாவின் உறவினர்கள், ஜெ., மருத்துவமனைக்கு செல்லும் முன், ஏன் போயஸ் கார்டன் வந்தனர்; பின், ஏன் மருத்துவ
மனையில் உடனிருந்தனர் என, விசாரிக்க வேண்டும்.என் மனைவி தீபாவை, மருத்துவமனை உள்ளே விடாமல் தடுத்தது யார்; ஜெ., உடல் ஏன், 'எம்பார்மிங்' செய்யப்பட்டது; ஜெ., உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தயார் செய்தது யார்; ஒரே இரவில், தயார் செய்ய முடியுமா என்றெல்லாம் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mariappa T - INDORE,இந்தியா
21-நவ-201720:30:44 IST Report Abuse

Mariappa Tஇது அரசுக்கு தேவை இல்லாத வேலையும் செலவும். நோயால் இறந்து விட்டார்கள், டாக்டர் சொல்லியாச்சு அப்புறம் என்ன வேணும். அரசியல் ஆதாயம் தேட பாக்கிறார்கள் பைத்தியகாரர்கள்.

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
21-நவ-201712:11:26 IST Report Abuse

Visu Iyerமத்திய அரசையும் விசாரிப்பான்களா?

Rate this:
Krishna Prasad - Chennai,இந்தியா
21-நவ-201711:02:09 IST Report Abuse

Krishna Prasadமாதவன் சொல்வதில் நிச்சயமாக அர்த்தம் உள்ளது அதை லேசாக எடுத்துக்கொள்ள கூடாது

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
21-நவ-201709:21:50 IST Report Abuse

balakrishnanவேலையற்ற வேலை, தண்ட செலவு, மரணத்தை சந்தேகப்பட்டது ஓ.பி.எஸ் தான், எனவே ஆகும் செலவை அவரிடம் இருந்தே வசூல் செய்யவேண்டும்

Rate this:
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
21-நவ-201720:12:19 IST Report Abuse

Gokul Krishnanஏன் முரசொலி மாறன் இறந்த பின்னும் பத்து மாதம் மத்திய அரசு தண்ட செலவு செய்யவில்லையா...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-நவ-201708:49:12 IST Report Abuse

Srinivasan Kannaiyaசெத்தும் கொடுத்தான் சீதக்காதி மாதிரி இந்த அம்மா செத்தும் சொத்தை கொடுத்தது மான்னார்குடி குடும்பத்திற்கு... இப்பொழுது ஜெ மரணம் அனுதாபம் படக்கூடியதாக இல்லை...இவ்வளவு மட்டமான ஒரு அடிவரிடையை உடன் வைத்து இருந்ததே என்ற வருத்தம்தான் மேலோங்கி நிக்கிறது...

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-நவ-201708:00:17 IST Report Abuse

Rajendra Bupathiஅப்படியே ஆகட்டும் எஜமான்? தாங்களின் உத்திரவு என் பாக்கியம்?

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-நவ-201707:59:14 IST Report Abuse

Rajendra Bupathiஏங்கோவாலு கூடுதல் அதிகாரம் வேணுமாமில்ல?அப்ப வெளங்கிடும்?

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
21-நவ-201706:28:58 IST Report Abuse

Paranthamanமூன்று மாதத்திற்குள் முடியற கேசா இது. இது முடிய முப்பது ஆண்டுகள் கூட ஆகலாம்.

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-நவ-201708:07:07 IST Report Abuse

Rajendra Bupathiஅய்யா இன்னும் ஐம்பது வருக்ஷம் கூட ஆவட்டும்? இல்ல இன்னும் மூணு நீதிபதிகள் கூட மாறட்டும், எங்களுக்கு கவலை இல்ல? ஆனா எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்? ஆமாம்....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-நவ-201705:19:32 IST Report Abuse

Kasimani Baskaranவாவ்.. விசாரணை என்ற பெயரில் சம்பளமாக / படியாக பல கோடிகளை அள்ளி விடுவார் இந்த ஒய்வு பெற்ற நீதிபதி... கமிஷன் கொடுத்து கூட இந்த வேலையை வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது...

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-நவ-201708:02:13 IST Report Abuse

Rajendra Bupathiநாங்களும் இத ஒத்துக்கோவமில்ல? உண்மைதான?...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
21-நவ-201709:22:43 IST Report Abuse

balakrishnanநிச்சயம் வாய்ப்பிருக்கிறது, எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு,...

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
21-நவ-201702:44:14 IST Report Abuse

Baskarஇவரு எப்ப விசாரணை ஆரம்பித்து இவர் எப்ப அறிக்கை சமர்ப்பித்து அட போங்கப்பா.முடியல.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement