தமிழக அரசு மனுவை ஏற்க மறுப்பு; காவிரி வழக்கில் தயாராகிறது இறுதி தீர்ப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
தமிழக அரசு மனுவை ஏற்க மறுப்பு
காவிரி வழக்கில் தயாராகிறது இறுதி தீர்ப்பு

புதுடில்லி: நவ., 15ம் தேதி வரை அளிக்க வேண்டிய, 63 டி.எம்.சி., நீரை திறந்து விடும்படி, கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

 தமிழக அரசு,Tamil Nadu Government, காவிரி,Cauvery, கர்நாடகா,Karnataka, உச்ச நீதிமன்றம் ,Supreme Court, காவிரி நடுவர் மன்றம் , Cauvery Arbitration Forum, மேட்டூர் அணை, Mettur Dam, நீதிபதி தீபக் மிஸ்ரா, Judge Deepak Mishra, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர்,Justice AM Kanwal, நீதிபதி சந்திரசூட், Justice Chandrachud, பாலி நரிமன், Bali Nariman,

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, நவ., 15 வரை, கர்நாடகா அரசு, தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய காவிரி நதி நீரில், 62.88 டி.எம்.சி., பாக்கி உள்ளது.இதை அளிக்கும்படி, கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசுமனு தாக்கல்

செய்தது; அந்த மனுவில்கூறப்பட்டுள்ளதாவது:

நடுவர் மன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா,163 டி.எம்.சி., நீரை, தமிழகத்திற்கு அளிக்க வேண்டும். ஆனால், நவ., 15ம் தேதி, வரை, 100 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைத்துள்ளது. மாதம் தோறும் அளிக்க வேண்டிய நீரை திறந்து விட, கர்நாடகா மறுத்து வருகிறது. இதனால், தமிழகத்தில் விவசாய பணிகள் பாதிக்கப் பட்டு உள்ளன. நீர் பற்றாக் குறையால், மேட்டூர் அணையை, ஜூன்,12ம் தேதி திறக்க முடிய வில்லை.இதனால் குறுவை, சம்பா பயிர் சாகுபடியை குறித்த நேரத்தில் துவக்க முடிய வில்லை. மேட்டூர் அணை, அக்., 2ம் தேதி திறக்கப் பட்டதால், மிகத் தாமதமாக விவசாய பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

எனவே,தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய பாக்கி நீரை திறந்து விடும்படி, கர்நாடகா அரசுக்கு உத்தர விட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட்

Advertisement

அடங்கிய அமர்வு முன்,விசாரணைக்கு வந்தது.
முடிவில், 'காவிரி நீர் தொடர்பான வழக்கில், இறுதித் தீர்ப்பு எழுதும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில்,புதிய மனுக்களை ஏற்க முடி யாது' எனக் கூறி, தமிழக அரசின் மனுவை, அமர்வு, ஏற்க மறுத்தது.இருப்பினும், தமிழகத் திற்கு, கர்நாடகா அளிக்க வேண்டிய பாக்கி நீர் குறித்த தகவலை தெரிவிக்கும்படி, பாலி நரிமனுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (7)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
gmk1959 - chennai,இந்தியா
30-நவ-201715:34:24 IST Report Abuse

gmk1959தண்ணீர் தராத காங்கிரஸ் அரசை ஒன்னும் சொல்ல மாட்டார்கள் மத்திய அரசை குறை கூற வரிந்து கட்டிக் கொண்டு வந்து எழுதும் உங்கள் போக்கு மக்கள் புரிந்து கொள்வார்கள

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
22-நவ-201720:39:17 IST Report Abuse

K.Sugavanamஅடப்பாவமே,அந்த தீர்ப்பு வெளீல வரதுக்குள்ள மத்திய அரசு இன்னும் என்னென்ன பல்டி அடிக்குமோ? இறுதி தீர்ப்பாமே.. இப்படி சொல்லியே ஒரு தலைமுறையை முட்டாளாக்கிட்டாங்க..

Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
22-நவ-201713:51:30 IST Report Abuse

Stalinநாம் தமிழரின் ஆட்சி வரையறை அவசியமானது

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X