பரப்பன அக்ரஹாரா சிறையில் சசியிடம் இன்று விசாரணை? Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பரப்பன அக்ரஹாரா சிறையில்
சசியிடம் இன்று விசாரணை?

பெங்களூரு: பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படும் சசிகலாவிடம், சிறையிலேயே, இன்று வருமான வரித்துறை அதிகாரிகள், விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை, Bangalore parappana Agrahara prison, சசிகலா,Sasikala, வருமான வரித்துறை , Income Tax Department, சொத்து குவிப்பு வழக்கு, property accumulation case,சிறை தலைமை கண்காணிப்பாளர் சோமசேகர்,Prison Chief Superintendent Somashekar,  தமிழகம், Tamil Nadu,கர்நாடகா,  Karnataka, தெலுங்கானா, Telangana, போலி நிறுவனங்கள், fake companies, இளவரசி, ilavarasi

தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா என சசிகலா உறவினர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்

வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள், போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகள் விபரங்கள் பறிமுதல் செய்து உள்ளனர்.சொத்துகள்,பினாமி பெயரில் வாங்கி உள்ளதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், இதற்காக சசிகலா, இளவரசி ஆகியோரிடம் விசாரிக்க, வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில்
அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம், இது தொடர்பாக அதிகாரிகள் இன்று விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, இம்மாதம் 17ல், சிறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.இது தொடர்பாக, சிறை தலைமை

Advertisement

கண்காணிப்பாளர் சோமசேகரிடம் விசாரித்த போது, ''எந்த தகவலும் வரவில்லை,'' என்றார். ஆனால், வருமான வரித்துறை சோதனை நடத் தும் போது, தகவல் வெளியிடாமல், ரகசியம் காக்கப்படலாம், என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Dharmalingam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-நவ-201718:52:11 IST Report Abuse

Balaji Dharmalingamநீங்க பாட்டுக்கு சொல்லாம போகாதீங்க அந்த சின்ன மம்மி ஷாப்பிங் போய்ட போகுது

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
22-நவ-201717:12:25 IST Report Abuse

Endrum Indianபதில்" எனக்கு ஒன்றும் தெரியாது" இதெல்லாம் ஜுஜுபி சதிகாரிக்கு.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
22-நவ-201712:36:35 IST Report Abuse

Indhuindianஇந்த அம்மா கடபாராய முஷிங்கிட்டு சுக்கு கஷாயத்தை குடிச்சது ஏப்பம் விடறவங்களாச்சே இவங்ககிட்ட எனக்கொண்ணும் தெரியாது என்ற பதிலை தவிர வேறே ஒன்னும் எதிர்பாக்க முடியாது

Rate this:
N Sankar - Tirunelveli,இந்தியா
22-நவ-201710:20:05 IST Report Abuse

N Sankarசிறை யூனிபார்மில் நடக்குமா? சிறப்பு சலுகைகள் உண்டா?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-நவ-201708:47:36 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅந்த அம்மா ஒன்றும் சொல்ல போறதில்லை...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
22-நவ-201707:00:47 IST Report Abuse

தேச நேசன் சாதாரணக் கைதியை விசாரிப்பது போல் விசாரித்தால் தான் ஓரளவு உண்மையாவது வெளிவரும் வி ஐ பி போல நடத்தினால் வேஸ்ட்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
22-நவ-201705:52:26 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்கண்காணிப்பாளர் சோமசேகரிடம் ''எந்த தகவலும் வரவில்லை,'' என்றார். , வருமான வரித்துறை சோதனை நடத் தும் போது, தகவல் வெளியிடாமல், ரகசியம் காக்கப்படலாம், என்பது குறிப்பிடத்தக்கது. அப்போ எப்படியாப்பா உங்களுக்கு ரகசியம் தெரிஞ்சது? வதந்தியை நியூஸா போட்டு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு வேறா..

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-நவ-201704:21:26 IST Report Abuse

Kasimani Baskaranதெலுங்கில் மொழி பெயர்த்து கேள்விகளை கொடுத்தால் மட்டுமே பதில் சொல்லமுடியும் என்று சிக்ஸர் அடிப்பாரோ... தமிழனின் தலையெழுத்து மிக கேவலமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்...

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
22-நவ-201703:26:35 IST Report Abuse

Paranthamanசசிகலா ஊழலின் மையப்புள்ளி. பெங்களுரு பரப்பன சிறையில் இருக்கும் சசிகலாவை வருமான வரித்துறை கேட்கும் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதாக பதில் தர மாட்டார். அடியாத மாடு படியாது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement