அ.தி.மு.க.,வை அபகரிக்க நினைத்த தினகரனின் கூடாரம் காலியாகிறது! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க.,ADMK, தினகரன்,Dinakaran, சசிகலா கும்பல் , Sasikala gang, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, பன்னீர் செல்வம், panneerselvam, சபாநாயகர்,Speaker, தேர்தல் கமிஷன்,Election Commission, வருமான வரி சோதனை, Income Tax inspection,

அ.தி.மு.க.,வை அபகரிக்க நினைத்த, தினகரனின் கூடாரம் காலியாகிறது. ஆட்சி, அதிகாரம், கட்சி, சின்னம் என, எல்லாமே பறிபோனதால், ஆளும் தரப்பிடம் சரணடைய, அவரின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நம்பி வந்து, பதவி இழந்த, 18 எம்.எல்.ஏ.,க்களும், தங்களை நட்டாற்றில் விட்ட, சசிகலா கும்பல் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதனால், ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க, முடிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க.,ADMK, தினகரன்,Dinakaran, சசிகலா கும்பல் , Sasikala gang, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, பன்னீர் செல்வம், panneerselvam, சபாநாயகர்,Speaker, தேர்தல் கமிஷன்,Election Commission, வருமான வரி சோதனை, Income Tax inspection,

ஜெ., மறைந்த பின், அ.தி.மு.க.,வையும், ஆட்சி யையும் கைப்பற்ற, சசிகலா குடும்பத்தினர் முயற்சித்தனர். ஆனால், அவர்களால் முதல்வ ராக்கப்பட்ட பழனிசாமியும், அவர்களால் முதல்வர் பதவியை இழந்த பன்னீர் செல்வமும் கைகோர்த்து, சசி குடும்பத்தை அடியோடு ஓரங்கட்டினர்.

பன்னீரும், பழனிசாமியும் இணைய மாட்டார் கள் என, தினகரன் தப்பு கணக்கு போட்டார். அவரது கணக்கு பொய்யானதால், பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க, முடிவு

செய்தார். அதற்காக, கட்சியை உடைக்கும் வேலையில் இறங்கினார். எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, பேரம் பேசப்பட்டது. 'பழனிசாமி ஆட்சியை கவிழ்த்து விட்டு, நாம் புதிய ஆட்சி அமைக்கலாம். அதில், உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்' என, எம்.எல்.ஏ.,க்களுக்கு, பதவி ஆசை காட்டினர். சிலருக்கு, பணத்தாசை காட்டினர். அதை நம்பி, 20 எம்.எல்.ஏ.,க்கள், தினகரன் விரித்த வலையில் விழுந்தனர்.

அவர் சொன்னதை கேட்டு, 18எம்.எல்.ஏ.,க்கள், முதல்வருக்கு எதிராக, கவர்னரிடம் கடிதமும் கொடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சபாநாயகர் தயாரானதும், அந்த எம்.எல்.ஏ.,க்கள் பயந்து, பின்வாங்கினர். அப்போதும், அவர்களை கடத்திச் சென்று, கவனிப்புகள் செய்து, தினகரன் தக்க வைத்தார். இப்போது அந்த, 18 பேரும் பதவியை பறிகொடுத்து நிற்கின்றனர்.

எனினும், 'தினகரன் கைக்கு கட்சி வரும்; பதவி கிடைக்கும்' என்ற நப்பாசையில் காத்து இருந்தனர். அதற்கும், தேர்தல் கமிஷன் இறுதி தீர்ப்பு கூறி விட்டது. அதைஅடுத்து, ஆட்சி, அதிகாரம், கட்சி, சின்னம் எல்லாமே, பன்னீர் - பழனி அணிக்கு சென்று விட்டன. தினகரன், வெறும் மரமாக நிற்கும் நிலைமை வந்து விட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்து உள்ள, 18 பேரும், ஆட்சிக்கு ஆதரவு அளிக்க, முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


இது குறித்து, தினகரன் ஆதரவுவட்டாரத்தில் கூறப்படுவதாவது: நம்பி வந்தவர்களை, தினகரனால் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் இழந்த, எம்.எல்.ஏ., பதவியை, நீதிமன்றத்தின் வாயிலாக மீட்டு தருவதாக, அவர் கூறியிருந்தார். அதுவும், இப்போது நடக்குமா என்பது தெரியவில்லை.

பேசியபடி முழு தொகையும் கைமாறவில்லை. மத்திய அரசின் பிடியும் இறுகுவதால், வருமான வரி சோதனையும் தீவிரமாகி உள்ளது.இனியும் தினகரன் பின்னால் போவதா என்ற, குழப்பத்தில், ஆதரவு எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர். இனிமேல், தினகரனால், அ.தி.மு.க., என்ற பெயரில் செயல்பட முடியாது. தனிக்கட்சி ஆரம்பித்தாக வேண்டும்.

அதில் சேர்ந்தால், கட்சி தாவல் தடை சட்டப்படி, பதவி பறிபோய் விடும். ஏற்கனவே, இழந்த பதவியை பெற, எம்.எல்.ஏ.,க்கள் போராடும் நிலையில், இது நிரந்தர தடையை ஏற்படுத்தி விடும் என, பலரும் அஞ்சுகின்றனர்.இதை தவிர்க்க, பதவி இழந்த, எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர், அ.தி.மு.க.,விற்கு செல்ல தயாராகி, ரகசிய பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளனர். மற்ற நிர்வாகிகளும், 'இனி தினகரனை நம்பினால், அரசியல் எதிர்காலம் இருக்காது' என நினைத்து, அணி மாற முடிவு செய்துள்ளனர்.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (84)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Natarajan Ramanathan - chennai,இந்தியா
25-நவ-201719:56:49 IST Report Abuse

Natarajan Ramanathanபதினெட்டு தொகுதிகளுக்கும் இடைதேர்தல் வைத்தால் பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
25-நவ-201717:47:53 IST Report Abuse

Narasimhan18 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை அறிந்ததும் பன்னீர் அணி ஓரங்கட்டப்படுகிறது. முப்பெரும் விழா ஒரு உதாரணம். பன்னீர் அணி பாஜகவுக்கு தாவும் சூழ்நிலை உருவாகுகிறது. சமீபத்தில் மாபா பாண்டியராஜன் பாஜகவின் திட்டங்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதிமுக தானே அழிந்து விடும். சுடலைக்கு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டால் வெகு விரைவில் ஆட்சியை கைப்பற்றமுடியும். மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவராக கமலஹாசன் திகழ போகிறார்.

Rate this:
elango - trichy,இந்தியா
25-நவ-201717:17:17 IST Report Abuse

elangoதினகரனுக்கு ஆதரவு பெருகுவதை தடுக்க முடுயாது

Rate this:
muthu - ,
25-நவ-201720:25:04 IST Report Abuse

muthuboss mutts payaley...

Rate this:
Prem - chennai,இந்தியா
25-நவ-201716:35:13 IST Report Abuse

Premkudumba aatchiku tamilnaatula nadakura makkalatchila orunaalum idam illa

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
25-நவ-201716:25:35 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஏன் ஜனாதிபதி நல்ல நேர்மையான ஊழியர்களை அவர்கள் பிறந்த ஜாதகத்தை வைத்து கல்வி தகுதியையும் வைத்து தேர்வு செய்து நாட்டை ஆண்டால் மாதம் மும்மாரி பெய்து கடன்களை எல்லாம் அடைத்து நாடு நிம்மதியாக இருக்கும். என்னங்க சுயநலவாதிங்க கொள்கை பிடிப்பு இல்லாதவங்க நாட்டுணர்வு இல்லாதவங்க மனசாட்சிக்கு பயப்படாதவங்க ஆட்சி ஆளனுமா>> சேசே சட்டத்தை மதியாதவங்க நீதிக்கு பயப்படாதவங்க பணத்துக்கு அடிமையாகிறவங்க ஒருபோதும் >>>>>>>

Rate this:
LAX - Trichy,இந்தியா
27-நவ-201702:26:56 IST Report Abuse

LAXஜாதகத்தை வைத்தா..? அப்புறம் 'ஜாதகம் கணிக்கற ஜோசியர் தேவை'ன்னு அரசாங்கம் ஒரு டெண்டர் விடணுமா..?...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
25-நவ-201716:23:17 IST Report Abuse

தேச நேசன்வெள்ளையும் சொள்ளையுமாய் திரியும் முதல்வர் , இந்த பதவியை அடைய சசியின் காலில் நெடுஞ்சாண் கிடையா விழுந்த கிடந்ததை அவர் மனச்சாட்சி மறுக்குமா ? மனசாட்சி கிஞ்சிற்றும் இல்லாமல் , நன்றி கெட்டு , துரோகத்தையே மூலதனமாக எடுத்து மக்களின் கொஞ்சமும் ஆதரவில்லா இந்த EPS போல இந்த காலத்தில் யாரை காட்டமுடியும் ? சல்லடை போட்டு தேடினாலும் கிட்டா.

Rate this:
LAX - Trichy,இந்தியா
27-நவ-201702:35:25 IST Report Abuse

LAXமுள்ளை முள்ளாலதானே எடுக்கணும்.. முன்னே செல்லும் வண்டி கவிழ்ந்தால், அதைப் பார்த்துக்கொண்டே பின்னேவரும் வண்டிக்கு எச்சரிக்கை விடுவது போல.. ஓ.பி.எஸ். அவர்களுக்கு நேர்ந்ததைப் பார்த்த பிறகு, தனக்கும் அதுதான் நிகழும் என்று உணர்ந்த பிறகே சதிகலாவின் சூழ்ச்சிப்படி பதவியை யற்றிருப்பார்.. பின்னர் அவர்கள் தயாராக வைத்திருந்த ஆப்பைப் பிடுங்கி அவர்களுக்கே வைத்துவிட்டார்.. ஹா.. ஹா.. ஹா.. ஹா..எப்பூடி..? சதிகலா & கோ. கையில் கட்சி சிக்கியிருந்தால், அவர்கள் கும்பலில் யாருமே பதவி ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும் வேளையில், வாரத்துக்கு/மாசத்துக்கு ஒரு முதல்வரை மாற்றுவார்கள்.. தப்பியது தமிழகம்.....

Rate this:
niki - Chennai,இந்தியா
25-நவ-201716:05:14 IST Report Abuse

nikichinnam mannargudi kumbalidam irunthu meetkka pattathu....

Rate this:
vnatarajan - chennai,இந்தியா
25-நவ-201715:54:52 IST Report Abuse

vnatarajanஜெ யின் ஆத்மா சசியின் குடும்பத்தினுள் நுழைந்து இன்னும் சில மாதங்களில் அவர்களையும் பிரித்துவிடும் பின்பு சசி தினகரன் யாருடைய ஆதரவும் இல்லாமல் கத்தி கலங்கி நிற்பார்கள் ' கெடுவான் கேடு நினைப்பான் என்பது உண்மையாகி விடும்

Rate this:
LAX - Trichy,இந்தியா
27-நவ-201702:35:54 IST Report Abuse

LAXகரெக்ட்.....

Rate this:
vnatarajan - chennai,இந்தியா
25-நவ-201715:47:24 IST Report Abuse

vnatarajanதினகரன் அணியிலிருந்து யாரை வேணுமானாலும் ADMK லே சேர்த்துக்குங்க ஆனால் புகழேந்தி, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சரஸ்வாதியை மட்டும் சேர்த்துடாதீங்க. நீங்க இவங்களை சேர்த்தீங்கன்னா இந்த மூவரும் ரகசியமாக தினகரனுக்கு சசிகலாவுக்கு விசுவாசமாகத்தான் இருப்பாங்க.

Rate this:
LAX - Trichy,இந்தியா
27-நவ-201702:36:55 IST Report Abuse

LAXசரியாச் சொன்னீங்க ஜி.....

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
25-நவ-201715:40:34 IST Report Abuse

தேச நேசன்container பணத்தால் உருவான மிகவும் குறைந்த வித்தியாசத்தில் உருவான ஆட்சி தான் அதிமுக , இந்த EPS சசி இந்த காலில் விழுந்து தான் முதல்வர் பதவியை புடித்தார், அதுவும் கூவத்தூர் கேவலத்தில் . பிஜேபி க்கும் நன்கு தெரியும் அதிமுகவை தன் கட்டுக்குள் வைத்து அழிக்க சசி சரிப்பட்டு வரமாட்டார் , எனவே OPS மற்றும் EPS அடிமைகளை பதவி ஆசை காட்டி , வருமானத்துறை விசாரணை பயம் காட்டி கட்டுக்குள் வைத்து முதல் படியை பிஜேபி வெற்றி கண்டு விட்டது . அடுத்து சரியான தலைமை இல்லாததால் ஆட்சி போனதும் துண்டு துண்டாய் உடையும் அதிமுக , அதில் குளிர் காய பிஜேபி நினைக்கிறது . இது தானாகவே நிகழும் என்று பிஜேபி நினைப்பு . OPS EPS க்கு கட்சி முக்கியமில்லை , ஆட்சி இருக்கும் வரை பதவி சுகம் , இன்னும் அதனால் பல சுகம் அனுபவித்து விட்டு செட்டில் ஆகிவிடலாம் என்று மக்கள் நினைப்பதில் நியாயம் இருக்கு அதிமுக ஆட்சிக்கு பிறகு ,வரும் காலத்தில் சசி கட்டுப்பாட்டில் கூட கட்சி வந்தால் ஆச்சரியமில்லை .

Rate this:
மேலும் 69 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement