ஆர்.கே.நகர் வேட்பாளர் யார்? அ.தி.மு.க., நாளை முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகர் வேட்பாளர் யார்? அ.தி.மு.க., நாளை முடிவு

Added : நவ 26, 2017 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

சென்னை: ஆர்.கே.நகர் வேட்பாளரை முடிவு செய்வதற்காக, அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

அ.தி.மு.க.,வில், வேட்பாளர் தேர்வை, ஆட்சி மன்ற குழு தான் முடிவு செய்யும். ஜெ., இருந்த போது, ஆட்சி மன்ற குழுவில், ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன், மதுசூதனன், பன்னீர்செல்வம், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், தமிழ்மகன் உசேன் ஆகியோர் இருந்தனர்.

அவர்களில், ஜெ.,யும், விசாலாட்சியும் தற்போது இல்லை. அவருக்கு பதிலாக, புதிய நபர்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக, அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நாளை காலை, 11:30 மணிக்கு, சென்னையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில், உட்கட்சி பிரச்னைகள் ஆலோசிக்கப்பட உள்ளன. மேலும், ஜெ., முதலாம் ஆண்டு நினைவு தினம், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா, ஆட்சி மன்ற குழு மாற்றம், ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க.,விலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன், தற்போது, எந்த கட்சியும் இல்லாமல் உள்ளார். அவர், மீண்டும் போட்டியிட விரும்புகிறார்.

சென்னையில், நேற்று தன் ஆதரவாளர்களுடன், அவர் ஆலோசனை நடத்தினார். பின், 'மீண்டும், 29ம் தேதிகூடி, வேட்பாளர் பெயரை அறிவிப்போம்' என, தினகரன் ஆதரவாளர், தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran - dar salam ,தான்சானியா
26-நவ-201714:02:23 IST Report Abuse
Ravichandran பன்னீர் பெரிய யோக்கிய புத்திரன் இல்லை என்றாலும் பன்னீருடன் இணைந்து அரசியல் நடத்தினால் எடப்பாடி சரியான பாதையில் போகிறார் என்று அர்த்தம், இல்லை என்றால் சசி மாதிரி தன் தலையில் தானே மண்ணை போட்டுக் கொண்டது போல் ஆகும். மதுசூதனனை வேட்பாளராக்கி பி ஜெ பி இடம் ஆதரவூ கேட்டு தேர்தலை சந்திப்பதே இந்த சூழ்நிலையில் சரியானதாகும்.
Rate this:
Share this comment
Cancel
Subramaniyan Balachandran - Chennai,இந்தியா
26-நவ-201712:54:06 IST Report Abuse
Subramaniyan Balachandran இரட்டை இலை, ஜெ தொகுதி , அனுதாப ஓட்டு ஆக எல்லாம் சேர்ந்து 2016 தேர்தலை விட அதிக ஓட்டு வாங்கி அதிமுக வெற்றி பெறும். தமிழர்கள் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வாக்களிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
26-நவ-201712:45:51 IST Report Abuse
GB.ரிஸ்வான் இவர்களின் கட்சி வேட்பாளரை அதிமுகவின் மேலிடம் தான் அறிவிக்கும்... அதான் பாஜக தான் அந்த மேலிடம்.... இரட்டை இலை.. அதிமுக.. இவைகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவோடு... முடிந்து விட்டது... ஒட்டு போட போகிறவர்கள் தான் யோசிக்கணும்.. நாம் எதை செய்கிறோம் என...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X