புட்டபர்த்தியில் குதூகலம்..| Dinamalar

புட்டபர்த்தியில் குதூகலம்..

Updated : நவ 27, 2017 | Added : நவ 27, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


புட்டபர்த்தியில் குதுாகலம்..


சுற்றிலும் மலை
வானம் பார்த்த செம்மன் பூமி

பெரும்பாலும் காய்ந்து கிடக்கும் கரட்டு காடு

இதற்குள்தான் நாட்டிலேயே சிறப்பாக முற்றிலும் இலவசமாக இயங்கும் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனை உள்ளது.

இதற்குள்தான் சிறந்த கல்வியை கற்றுத்தரும் பள்ளி மற்றும் கல்லுாரிகள் உள்ளன.
இதற்குள்தான் நாட்டிலேயே சிறந்த உள்விளையாட்டு அரங்கமும் மிகப்பெரிய ஸ்டேடியமும் உள்ளது.

இதற்குள்தான் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு அன்பையும் அமைதியையும் தரும் பிரசாந்தி நிலையமம் உள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்துார் மாவட்டத்தில் உள்ள உள்ள புட்டபர்த்திதான் மேலே சொன்ன அத்துணை சிறப்புகளையும் தாங்கிநிற்கிறது.

இது அத்தனையையும் சாதித்தவரான ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 92 வது பிறந்த தினவிழாவினை ஊரே கொண்டாடியது.
ஏன் கொண்டாட மாட்டார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்வியும் வேலைவாய்ப்பையும் வாரி வழங்கும் கல்வியைத்தந்தவர் அல்லவா அவர்.நல்ல குடிநீரை நாள் முழுவதும் பெறச் செய்தவர் அல்லவா அவர்.


சாய்பாபா இருக்கும் போது பலமுறை போயிருக்கிறேன் அவர் மகாசமாதியான பிறகு இப்போதுதான் போனேன். கூட்டம் முன்பு போல வருமா? என்றெல்லாம் யோசித்தபடி போனபோது முன்பைவிட அதிகமாகவே கூட்டம் காணப்பட்டது.
அன்றைய தினம் அன்னதானம் மட்டும் பல லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது.பிரசாந்தி நிலையத்தில் மட்டுமின்றி ஊருக்குள்ளும் பலரும் தத்தம் கைகாசை செலவழித்து அன்னதானம் செய்தனர்.அன்னதானம் செய்தவர்களில் நிறைய முஸ்லீம் அமைப்பினரும் இருந்தனர்.

புட்டபர்த்தியில் மட்டும் இருநுாறுக்கும் அதிகமான தமிழ்க்குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களது நீண்ட கால கோரிக்கை தினமலர் நாளிதழ் அன்றாடம் கிடைக்கவேண்டும் என்பதுதான்.இந்த கோரிக்கை பாபாவின் பிறந்த நாளான்று நிறைவேறப்பட்டது. இதை முன்னிட்டு அன்னதானம் செய்யப்பட்டது.இரு நிகழ்விலும் அங்குள்ள தமிழ் சங்கத்தினர் பெருவாரியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முதல் நாள் பட்டமளிப்பு விழா இரண்டாவது நாள் பிறந்த நாள் விழா.விழாவினை முன்னிட்டு பிரசாந்தி நிலையம் கோபுரம் என்று அனைத்தும் சிறப்பு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.ஆனந்த வினாயகரும் அவர் பங்கிற்கு புது வேட்டி கட்டி குடை பிடித்து விழாவிற்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்.

இரு நாள் விழாக்களிலும் சாய்பாபா பேசிய ஆடியோ வீடியோவை பெரிய திரையில் காண்பித்து அசத்தினர்,மகா ஆரத்தியோடு நிறைவு பெற்ற விழா பங்கேற்றவர்களின் மனதிலும் நிறைவை ஏற்படுத்தியது.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X