எங்கள் ஒற்றுமை எதிரிகளின் கண்களை உறுத்துகிறது; தஞ்சை விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஒற்றுமை எதிரிகளின் கண்களை உறுத்துகிறது
தஞ்சை விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு

தஞ்சை: ''இந்த இயக்கத்தில், அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை, ஒற்றுமையுடன் செயல்படுவது, எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. ஜெயலலிதா, கடவுளாக இருந்து, நம்மை வழி நடத்துவதால், நமக்கு எப்போதும் வெற்றி தான்,'' என, தஞ்சையில், முதல்வர் பழனிசாமி பேசினார்.

 எங்கள்,ஒற்றுமை,எதிரிகளின், கண்களை,உறுத்துகிறது, முதல்வர், பழனிசாமி பேச்சுதஞ்சையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்தது. இதில், 1,091 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

தமிழன்னைக்கு மகுடம் சூட்டி, அழகு பார்க்க எண்ணிய, எம்.ஜி.ஆரின் நினைவுக்கு வந்தது, தஞ்சை மாவட்டம் தான். தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை போல, எம்.ஜி.ஆரும், தஞ்சையில், 972 ஏக்கர் பரப்பளவில், தமிழ் பல்கலையை நிறுவினார்.அதனால், இவர்கள் இருவரும், இந்திய வரலாற்றில், மன்னாதி மன்னர்களாக போற்றப்படுகின்றனர்.

கும்பகோணத்தில், எம்.ஜி.ஆர்., படித்த யானையடி நகராட்சி துவக்க பள்ளிக்கு, எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டி, நகராட்சி பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.இந்த இயக்கத்தில், அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை, ஒற்றுமையுடன் செயல்படுவது, எதிரிகளின் கடவுளாக இருந்து, நம்மை

வழி நடத்துவதால், நமக்கு எப்போதும் வெற்றி தான்; எதிரிகளுக்கு தோல்வி தான்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், முதலிடத்தில் உள்ள தமிழகத்துக்கு, மத்திய அரசு பரிசு வழங்கியுள்ளது. இரண்டாவது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை, தமிழகத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.காவிரி விவகாரத் தில், தி.மு.க., நினைத்திருந்தால், தீர்வு கண்டு இருக்கலாம்; ஆனால், செய்யவில்லை.

தி.மு.க., ஆட்சியில் தான், மணல் கொள்ளை நடந்தது. ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, எந்த முறைகேடுக்கும் இடமளிக்காமல், அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தியது.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, ஆன் - லைனில் முன்பதிவு செய்து, தவறே ஏற்படாமல் மணல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, நீதிமன்ற தீர்ப்பு காரணமாக, மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அரசு குவாரியில் நடந்த மணல் விற்பனையில், எந்த தவறும் ஏற்படவில்லை. எந்த தவறுக்கும் துணை போகவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்.

இந்த கட்சியையும், ஆட்சியையும் எதிர்க்கட்சியினர் குறை சொல்லி வருகின்றனர். இவை அனைத்துக் கும், நாங்கள் முற்றுப்புள்ளி வைத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த நுாற்றாண்டு விழாவில், எம்.ஜி.ஆர்., 100 என்ற நெல் ரகத்தையும், சிறப்பு தபால் தலையையும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர்.

'ஒற்றுமையுடன் வெற்றி பெறுவோம்':துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., முதல்வராக

Advertisement

இருந்த போது, வடசென்னையில், தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பாதையை, நிர்வாகம் திடீரென மூடியதால், அப்பகுதிமக்கள் பெரும் சிரமப்பட்டனர். அப்போது, தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்த குமரி அனந்தன் பேச்சு நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. அதனால், தொகுதி மக்கள் உடன் இணைந்து, குமரி அனந்தன் உண்ணா விரதம் இருந்ததை அறிந்து, முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., அங்கு சென்றார்.

தொடர்ந்து, தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்திய, எம்.ஜி.ஆர்., பாதையை திறக்க ஏற்பாடு செய்தார். முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆர்., உத்தரவிடும் அதிகாரம் பெற்று இருந்த போதிலும், நியாயமான முறையில் செயல்பட்டு, மக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்கும் முதல்வராக திகழ்ந்தார்.

எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வழியில் உருவான, அ.தி.மு.க., இன்னும், 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வரலாறு காணாத வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-நவ-201723:24:32 IST Report Abuse

Pugazh Vஓபிஎஸ் முன்பு இதை ஊழல் அரசு என்று கவர்னரிடம் எழுத்து மூலம் புகார் அளித்தாரே அந்த ஊழல் அரசை ஆதரித்து அதிமுகவை ஜெயிக்க வைக்கணுமாம்

Rate this:
skv - Bangalore,இந்தியா
30-நவ-201719:35:42 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>எவனும் மக்களுக்கு ஒரு ரூபாய்கூட தந்தாள் அவன் நிக்கும் தகுதியே இழப்பான் மக்களுக்கு தெரியும் யார் பெஸ்ட் என்று தினகரன் ஜெயிக்கவே கூடாது தீய சக்தீ அவன் அவன் அசெம்பிளிக்குள்ளே வந்தால் அதிமுகவை படுத்துவான் அதே சமயம் மக்களையும் ஆளும் கட்ச்சி ப்ளீஸ் கவனிக்கவும் துட்டு அலையும் கிள்ளியும் தரவேண்டாம்

Rate this:
S. RAGHURAMAN - BENGALURU ,இந்தியா
30-நவ-201718:38:55 IST Report Abuse

S. RAGHURAMANஉங்கள் ஒற்றுமை அல்ல , செயல்கள்தான் எதிரிகளின் கண்ணை உறுத்த வேண்டும். செயல் படுங்கள்.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X