மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு

சென்னை: 'மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க தேவையில்லை.'இது தொடர்பான மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்றக் கூடாது' என, மத்திய நீர்வளத் துறை அமைச்சர், நிதின் கட்கரிக்கு, முதல்வர் பழனிசாமி, கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியுள்ளதாவது:

மாநிலங்களுக்கு இடையே, நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நிரந்தர நடுவர் மன்றம் அமைக்கப்படுவதற்காக, மத்திய அரசு, மசோதா கொண்டு வருவதை, தமிழகஅரசு எதிர்க்கிறது.

தமிழக அரசை பொறுத்தவரை, நிரந்தர நடுவர் மன்றம் தேவை இல்லை.மாநிலங்களுக்கு

இடையிலான நதி நீர் பிரச்னை, ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை போல், நதிநீர் வழக்குகளை கருதக் கூடாது.

 மத்திய அரசின், முடிவுக்கு,தமிழகம், கடும் எதிர்ப்பு

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண, உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே, நடுவர் நீதிமன்றம் அமைக்கப் பட்டது.காவிரி நடுவர் நீதிமன்றம், தன் இறுதி தீர்ப்பை, 2007 பிப்., 5ல் வெளியிட்டது. அதை எதிர்த்து, கர்நாடகா மற்றும் கேரள அரசு சார்பில்,

Advertisement

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது; அது நிலுவையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, நிரந்தர நடுவர் மன்றம் அமைப்பதற்காக, மசோதா கொண்டு வரத் தேவையில்லை; ஏற்கனவே உள்ள சட்டங்களே போதுமானது.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-நவ-201721:02:54 IST Report Abuse

kulandhaiKannanஒவ்வொரு நதிநீர் பிரச்சினை வெவ்வேறாக இருக்கும். என்னே அறிவு. ஒவ்வொரு கொலை வழக்கும் ஒவ்வொரு விதம் என்பதால் பொது நீதிமன்றம் வேண்டாம் என்று சொல்வார்களோ?

Rate this:
skv - Bangalore,இந்தியா
30-நவ-201719:40:19 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>இதனால் இப்படி காச்மூச்னு கூவினாள் நோ யூஸ்

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
30-நவ-201710:23:20 IST Report Abuse

Prabaharanதமிழ்நாட்டுக்காரர்களை முட்டாள் ஆக்கும் நடவடிக்கை. முடியப்போகும் வழக்குகளுக்கு மறு உயிர் கொடுக்கும் செயல். காவிகளின் சதி

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
30-நவ-201709:10:11 IST Report Abuse

balakrishnanமத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பா நம்பவே முடியவில்லை, அதுவும் தற்போதைய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறதா ஆச்சரியமாக இருக்கு

Rate this:
skv - Bangalore,இந்தியா
30-நவ-201721:15:36 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>சசியின் காலில் வீழ்ந்து சேவிச்சு முதல்வர் பதவி கிட்டியாச்சு உடன் வெட்டிண்டாக eps >கொடியும் ரெட்டை இலையும் கிடைக்க காவடி எடுத்தாக வித் ஓபிஸ் கிடைச்சதும் தன சுயபுத்தியை காட்டுறாரு eps வெரி சுயநலம் பிடிச்ச ஆளுங்க . இனிப்பாருங்களேன் எல்லாவேலைகளும் டான் டான் என்று நடத்துவாங்க...

Rate this:
rajan - kerala,இந்தியா
30-நவ-201708:45:16 IST Report Abuse

rajanஇந்த தேறாத வேலை எல்லாம் ஓரம் கட்டி விட்டு A. C. காமராஜின் தேசிய நீர்வழிசாலை திட்டத்தை கொண்டு வந்து அடிப்படை நீராதாரத்தை பெருக்கும் வழிய பாருங்க சாமியோவ். வருங்காலம் நீர் சார்ந்த யுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

Rate this:
V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்
30-நவ-201708:00:39 IST Report Abuse

V .வெங்கடேஷ் இதற்கு பதில் எல்லா நதிகளையும் தேசியமாக்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடலாமே..

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
30-நவ-201706:54:49 IST Report Abuse

தேச நேசன் ஒவ்வொரு நதிநீர் பிரச்னைக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் சட்டவிளக்கங்கள்மூலம் தனித்தனி வகை தீர்ப்புகள் சாத்தியமில்லை அப்படியெல்லாம் தீர்ப்பளித்தால் முன்பு பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பழைய தீர்ப்புக்களனைத்தையும் மறு ஆய்வு செய்யக்கோரி கோர்ட்டுக்குப்போகும் .மத்திய அரசுக்குத் தீராத தலைவலியாகிவிடும். நாடெங்கும் பிரிவினை வாதம் பயங்கரவாதம் தலையெடுக்கும் . நதிநீர் ஆணைய உறுப்பினர்கள் நீதித்துறை மற்றும் நீர்பாசன அறிஞர்களை கொண்டுதான் இயங்கும். இதன் நியமனங்களில் சுப்ரீம் கோர்ட் முடிவுதான் இறுதிமுடிவு . அனாவசியமாக மத்திய அரசின் ஒவ்வொரு செய்கையிலும் குற்றம் உள்நோக்கம் கண்டுபிடித்து போராடினால் வெறுப்புணர்ச்சிதான் மேலிடும் .அது யாருக்கும் நல்லதல்ல ..தமிழகத்தின்மீது மத்திய அரசுக்கு காழ்ப்புணர்ச்சி என்பதெல்லாம் பொய். தமிழகத்தில் ஒரே ஒரு லோக்சபா எம்பியை பாஜக பெற்றிருந்தாலும் மூன்று தமிழ் எம்பிக்களை ( நிர்மலா சீதாராமன் ஹேமமாலினி மற்றும் எல் கணேசன்) பிற மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுத்து மதித்துள்ளது. இரு முக்கியமான துறைகளும் தமிழர் வசம் .இந்த மரியாதை வேறெந்த மாநிலத்துக்கும் இல்லை . யாவரும் கேளிர் எனும் நாம் எப்போதாவது பிறமாநிலத்தவரை ராஜ்யசபா உறுப்பினராகதேர்வு செய்த்ததுண்டா? .நம் டுமீலர் பாணி கொள்கை ஊருக்கொரு நியாயம் நமக்கொரு (சுயநல) நியாயம்

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
30-நவ-201709:18:33 IST Report Abuse

balakrishnanமழை அளவு குறைந்துவிட்டது, தண்ணீர் தேவை அதிகரித்துவிட்டது, பாசன பரப்பளவு அதிகரித்து விட்டது, தண்ணீருக்கு மாற்றுவழி நம்மால் இன்னும் அடையாளம் கண்டுபுடிக்க முடியவில்லை, இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த எந்த திட்டமும் இல்லை, ஆளும் கட்சி எதிர்கட்சியையும், எதிர்க்கட்சி ஆளும் கட்சியையும் குற்றம் சுமத்துவதற்குத்தான் இந்த பிரச்சனைகள் பயன்படுகின்றன, தேசிய அக்கறை என்பது எல்லாம் யாருக்கும் இல்லை, நீங்கள் பெருமைப்பட்டுக்கொண்டது போல நிர்மலா சீதாராமன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு பதவி கிடைத்தது, ஹேமமாலினி, இல.கணேசன் இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து நமது நாட்டுக்கு என்ன பிரயோஜனம், எதுவும் இல்லை, இவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் பேசியதே மிக மிக குறைவு, இது ஒன்றும் நமக்கு கிடைக்கும் பெரிய மரியாதை இல்லை, குறுகிய அரசியல் எண்ணம் இருக்கும் வரை எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது...

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
30-நவ-201703:04:05 IST Report Abuse

அன்புநிரந்தர தீர்ப்பாயத்தை யார் கண்காணிப்பார்கள்? மத்திய அரசின் அதிகாரிகள் என்றால், அவர்கள் வருமானவரி துறை போன்று டான்ஸ் ஆடும் அதிகாரிகள். நீதிபதிகள் என்றால், அவர்களை நியமிக்கும் மத்திய அரசு, தனது விருப்பமான நீதிபதிகளை போட்டு, நீதியை அந்தந்த மாநில அரசியலுக்கு ஏற்றவாறு வழங்கும்படி செய்துவிடும். இதற்கு சுப்ரிம் கோர்ட்டின் அறிவுரைப்படி, மேலாண்மை வாரியம் மட்டுமே சரி. ஆனால் இதை பழனி வீறாப்பாக சொன்னால், அவரின் பதவி இருக்காது. அதனால், மோடியின் கால்களில் விழுந்து பணிவாக சொல்ல வேண்டும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-201701:47:39 IST Report Abuse

Kasimani Baskaranதீர்ப்பாயம் அமைத்தாலும் கூட அதை எந்த மாநிலமும் மதிப்பது கிடையாது... நீதி மன்றத்தைத்தான் நாடுகிறார்கள்....பிறகு எதற்கு ஒரு வெட்டி மன்றம்... இதைவிட கூத்து என்னவென்றால் நீதிமன்றம் சொன்னால்க்கூட அதையும் கேட்க்காத மாநிலங்கள் கூட உண்டு... யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் என்றால் நீதி மன்றம் என்ன செய்யவேண்டும்? ஆட்சியை கலைக்கச்சொல்லியிருக்க வேண்டும். அதைச்சொல்ல அவர்களுக்கும் துப்பு இல்லை. இந்தியா நாசமாக கேடுகெட்ட நீதித்துறை ஒன்றே போதும்...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
30-நவ-201709:12:32 IST Report Abuse

balakrishnanநாடு நாசமாக நீதிமன்றம் மட்டும் காரணம் இல்லை, அதை மதிக்காத மாநில அரசுகள், தேசிய கட்சிகள் அனைத்துமே காரணம் தான், பி.ஜெ.பி., காங்கிரஸ் போன்ற கட்சிகள் இங்கே ஒரு நிலைப்பாடு, அதே கர்நாடகாவில் ஒரு நிலைப்பாடு, ஆட்சியை கலைக்க சொல்ல நீதிமன்றத்துக்கு தைரியம் இல்லை, அப்படியே உத்தரவு போட்டாலும், கைவைக்க மத்திய அரசுக்கும் தைரியம் இல்லை, இது தான் ஏக இந்தியா,...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
30-நவ-201700:34:34 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்"மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நிரந்தர தீர்ப்பாயம் அமைக்க தேவையில்லை", காவிரி மேலாண்மை வாரியத்தை நாங்கள் எதிர்க்கவில்லைன்னு பொய் சொன்ன காவி புறம்போக்குகள் எங்கே..? ஆஜர் சொல்லவும்,

Rate this:
Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா
30-நவ-201707:05:44 IST Report Abuse

Senthilsigamani.Tஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா அவர்களே பிஜேபி எனும் அரசியல் கட்சி thontrum munbae ,பிரதமர் மோடிஜி எனும் தலைவர் அரசியலுக்கு வருமுன்னரும் காவேரி பிரச்சனை இருந்தது .இதெற்க்கெல்லாம் காவி புறம்போக்குகள் என்ற வசை சொற்கள் தேவை இல்லை. சுவற்றுக்கு காவி அடிக்கும் வீடுகள் போன்று சுண்ணாம்பு ,டிஸ்டெம்பர் ,பெயிண்ட் அடிக்கும் வீடுகள் பொதுவாக தமிழகமெங்கும் உண்டு .மதுரையிலும் உண்டு .அப்படியானால் நீங்கள் நவின்ற காவி புறம்போக்குகள் போன்று சுண்ணாம்பு புறம்போக்குகள்,டிஸ்டெம்பர் புறம்போக்குகள் ,பெயிண்ட் புறம்போக்குகள் என்று புதிய சொற்பதங்களை தமிழ் அகராதியில் சேர்க்க வேண்டுமா ? ஏற்கனவே காவி மதவாதம் போன்று சுண்ணாம்பு மதவாதம் ,டிஸ்டெம்பர் மதவாதம் ,பெயிண்ட் மதவாதம் என பொருளின்மை கருத்துக்கோவைகள் தேவையின்றி உலா வருகின்றன .காவேரி பிரச்சனைக்கும் மோடிஜிக்கும் சம்பந்தம் இல்லை . தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர் குலைத்தவரே திராவிட கருணாநிதி தான் .முல்லை பெரியாறு ,காவேரி நதி நீர் பங்கீடு ஆகியவற்றை கருணாநிதி முறையாக கையாளவில்லை . முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதி மன்றம் மூலம் சாதித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் .மேலும் தமிழகத்தில் உள்ள தற்போதைய அணைக்கட்டுகளில் பல கர்ம வீரர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது .அது - கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் , புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அதனால் தான் அவர் ஆட்சியை பொற்கால ஆட்சி என்கிறோம் .கருணாநிதி ,எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராய் இருந்து கட்டிய அணைக்கட்டுகளை விட காமராஜர் காலத்தில் கட்டப்பட்டவை அளவிலும் ,பாசன அளவிலும் பெரியவை .மேலும் காவிரி பிரச்சனையின் மூலாதாரமே திராவிட மூத்தாசான் கருணாநிதி தான் - அது பற்றிய சிறு பதிவு இந்திய பிரதமர்கள் வி பி சிங்,நரசிம்மராவ் ,குஜ்ரால் ,தேவ கௌடா,வாஜிபாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் பதவிகள் வகித்தபோது ,காவேரி பிரச்சனைக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் தான் இந்த கருணாநிதி . தனது மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சோனியா காந்தி அரசில் ( மன்மோகன் சிங் பொம்மை பிரதமர் ) நல்ல பசையான துறைகளை வாங்க நேரடியாக டெல்லி சென்றவர் அப்போதே மத்திய நீர்வளத்துறையை கேட்டு பெற்றிருந்தால் இந்நேரம் கருணாநிதி காவிரி பிரச்சனை தீர்த்ததற்காக உலக புகழ் பெற்றிருப்பார் .ஆனால் அந்த அக்கறை அவருக்கு கிடையாது .காவிரி பிரச்சனையில் அவரின் துரோகங்கள் வரிசையாக 1). “கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம்.2).இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் திராவிட கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.3.) 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.4.)18.2.1892-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924-ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் திராவிட கருணாநிதி இது கருணாநிதியின் நான்காவது துரோகம் .இப்படி கர்நாடகா கடந்த 40 வருடங்களில் முக்கியமாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் - அணைகள் கட்டியதை - ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை ,கபினி ஆற்றில் 19 டி.எம்.சி கொள்ளளவு அணை - ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை - தடுக்காத /கண்டுகொள்ளாத /கவனிக்காத /கவலைப்படாத /வருத்தமற்ற/ கூர் நோக்காத /ஆராயாத கருணாநிதி தமிழர் நலன் /திராவிடர் நலன் குறித்து கவலை கொண்டது இல்லை 5.காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளி யிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு .இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது கருணாநிதியின் ஐந்தாவது துரோகம் .மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீதி மன்றம் மூலம் சாதித்தவர் காவேரித்தாய் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் 6.காவேரி பிரச்சனையில் ஆரம்ப காலத்தில் இருந்து கர்நாடக மக்களின் வன்மத்தை தூண்டி வளர்த்தவர் தேவ கவுடா தான், கேட்டால் நான் விவசாய குடும்பம் என்பார் .காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (மத்திய அரசின் கெஜட்) வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கௌடா கோரிக்கை விடுத்தார் -அதில் தேவ கௌடா சாதித்தார் .அப்பேற்பட்ட தமிழின விரோதி இந்திய பிரதமராக பதவி வகிக்க ஆதரவுக்கரம் நீட்டியவர் இந்த கருணாநிதி தான்.இது கருணாநிதியின் ஆறாவது துரோகம் .7.இது எல்லாவற்றையும் முழுங்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு கருணாநிதி செய்த மாபெரும் துரோகம் இதோ - 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி திமுக ஆட்சியின் போது , சென்னையில் முதல்வர் கருணாநிதி ,பிரதமர் தலைமையில் ஆன காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கூட்டம் கூட்டினார் .அதில் காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில் ,பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது .அதனை கருணாநிதி நீக்கி விட்டார் .காரணம் அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள அளவற்ற/ கணக்கற்ற சொத்துக்கள் தான் . அந்த ஷரத்து இருந்தால் இப்போது உச்சமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காததை சுட்டிக்காட்டி அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள் / வழி இருந்திருக்கும் .அதனை இரக்கமின்றி அடைத்தவர் /மூடியவர் கருணாநிதி தான். அன்று அந்த ஷரத்து இல்லாததை குறிப்பிட்டு தான் ஜெயலலிதா அவர்கள் காவேரி ஆணையத்தை பல் இல்லாத ஆணையம் என்று விமர்சனம் செய்தார் . இது கருணாநிதியின் ஏழாவது துரோகம் .8.இப்படி அடுக்கடுக்காக காவேரி நதி நீர் விஷயத்தில் துரோகங்கள் செய்தவர் இந்த கருணாநிதி தான் .முன்பு ஒரு தமிழ் கவிஞர் - காவேரியை கடக்க இனி ஓடங்கள் தேவையில்லை ஒட்டகங்கள் போதும் - என்று சொன்னது போல தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள் செய்து தனது குடும்பத்தின் சொத்துக்களை பல பல பல பல மடங்காக பெருக்கியவர் ஆரிய எதிர்ப்பு புகழ் திராவிட கருணாநிதி தான் .காவேரி பாய்ந்த நிலத்தை கருக வைத்த அரசியல்வாதி கருணாநிதி தான் .ஆம் இவரின் துரோகங்களை தமிழர்கள் குறிப்பாக திருவாரூர் ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட இன்னும் அறியாதது தமிழகத்தின் சாபக்கேடு தான், ஆம் தமிழகத்தின் சாபக்கேடு . வழக்கம் போல போலி மதசார்பின்மை வாதிகள் இதற்க்கு கூட மோடிஜி குறித்து இளிவரல்கள் /ஏளனங்கள் /நக்கல்கள் /நையாண்டி செய்து பதிவுகளை தட்டி vida vendaam...

Rate this:
Anand - chennai,இந்தியா
30-நவ-201717:39:47 IST Report Abuse

Anandபொறம்போக்குகளெல்லாம் சொந்த பெயரில் கருத்து எழுதாமல் அடுத்தவர்களை பொறம்போக்கு என்பவர்களை என்ன செய்வது....

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement