கிருஷ்ணகிரி அணை ஷட்டரில் திடீர் உடைப்பு; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கிருஷ்ணகிரி அணை ஷட்டரில் திடீர் உடைப்பு
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், கே.ஆர்.பி., அணையின் 'மெயின் ஷட்டர்' திடீரென நேற்று உடைந்தது.

 கிருஷ்ணகிரி அணை, ஷட்டரில், திடீர் உடைப்பு  5 மாவட்டங்களுக்கு, வெள்ள அபாய ,எச்சரிக்கைகிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்துாரில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கே.ஆர்.பி., அணை கட்டப்பட்டுள்ளது. தற்போது, ௫௧ அடிக்கு தண்ணீர் உள்ளது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, திடீரென, அணையின், முதல் ஷட்டர் உடைந்தது. அணையில் இருந்து, 5,000 கன அடி தண்ணீர் வெளியேறியது.

முதல் ஷட்டரில், நீரின் உந்து சக்தி அதிகமானதால், அதை குறைக்க, ஐந்தாவது ஷட்டரில், 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், வினாடிக்கு, 6,000 கன அடி நீர், ஆற்றில் வெளியேறியது.


கலெக்டர்,கூறியதாவது: கே.ஆர்.பி., அணையின் ஷட்டர் சேதமாகி, அதிகளவில் தண்ணீர் வெளியேறுவதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை சார்பில், கிராமங்களில் தண்டோரா மூலமாகவும், எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

அணையில், 10 ஆயிரம் கன அடிக்கு மேல், தண்ணீர் திறந்து விடும் போது மட்டுமே, அபாய சங்கு ஒலிக்கப்படும். நேற்று மாலை, 4:30 மணிக்கு அபாய சங்கு ஒலித்ததால், பெரியமுத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். ஏராளமானோர் திரண்டு வந்து, என்ன ஆனது என, விசாரித்தனர்.

'தற்போது, 51 அடி தண்ணீர் உள்ள நிலையில், ஷட்டர் சேதத்தை உடனடியாக சரி செய்யமுடியாது.'குறைந்தது, 10 அடி தண்ணீர் குறைந்தால் மட்டுமே, ஷட்டரை சரி செய்ய முடியும்' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


அபாய சங்கு


அணையில், 10 ஆயிரம் கன அடிக்கு மேல், தண்ணீர் திறந்து விடும் போது மட்டுமே, அபாய சங்கு
ஒலிக்கப்படும். நேற்று மாலை, 4:30 மணிக்கு அபாய சங்கு ஒலித்ததால், பெரியமுத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பீதியடைந்தனர். ஏராளமானோர் திரண்டு வந்து, என்னஆனது என, விசாரித்தனர். அப்போது ஷட்டர் உடைந்த தகவல் அறிந்து அச்சமடைந்தனர்.

கே.ஆர்.பி., அணையில், தற்போது, 51 அடி தண்ணீர் உள்ள நிலையில், ஷட்டர் சேதத்தை உடனடியாக சரி செய்ய முடியாது. குறைந்தது, 10 அடி தண்ணீர் குறைந்தால் மட்டுமே, ஷட்டரை சரி செய்ய முடியும் என, பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
03-டிச-201711:13:17 IST Report Abuse

pollachipodiyanமே மாத வெய்யிலில் நிலவிய வறட்சியை பார்த்து மெத்தனமாக இருந்து பொழுது போக்கி, மொத்தமாக சம்பளம் வாங்கிய அதிகாரிகளின்,, ஊழியர்களின், புண்ணியமே இந்த மதகு உடைப்பு,மற்றும் ரிப்பேர். ஐந்து மாவட்டத்தின் பாதுகாப்பு இவ்வதிகாரிகளின் பொறுப்பு எனும் பொறுப்பொணர்ச்சி இல்லாமல் இருந்து பொழுதை போக்கியதுடன், மக்களின் வரிப்பணத்தையும் ஏப்பம் விட்டு விட்டார்கள். தீரா விசாரிப்பதை விட பணிநீக்கம் செய்வதே உடனடி தீர்வு.மற்ற ஊழியர்களுக்கும் ஒரு பாடம்.

Rate this:
30-நவ-201720:45:07 IST Report Abuse

VenkatesanChennaiIts horrible. Irrigation department do not take up necessary maintenance.. The water goes waste and the people has to suffer in due course.. Its a sorry state of affairs which can happen only in Tamilnadu.

Rate this:
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-201717:29:27 IST Report Abuse

Sriram VOn one hand, we are struggling for water and other hand we are wasting the water like this. Why PWD didn't check the condition of dam, if it is repaired, how it can break. Have they taken the money from contractor or PWD officials are incompetent. There should be complete investigation by retired judge and officials from other state.

Rate this:
Rajasekaran CJ - bangalore,இந்தியா
30-நவ-201713:54:06 IST Report Abuse

Rajasekaran CJஇந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை தீர விசாரித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்

Rate this:
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
30-நவ-201713:51:49 IST Report Abuse

Nemam Natarajan PasupathyThe PWD is the most irresponsible organisation. Why these shutters were not tested for their functioning, strength before monsoon season? The Chief engineer responsible for inspection of dams and shutters must be sacked not suspended . You pay water bill through your nose. These irresponsible employees will never take their work seriously unless strict action is taken for their omissions and commissions.

Rate this:
christ - chennai,இந்தியா
30-நவ-201710:37:48 IST Report Abuse

christநம்மளுக்கு தண்ணீரை சேமித்து வைக்கவும் தெரியாது ,சேமித்து வைத்து இருப்பவர்களையும் சேமிக்க விட மாட்டோம்

Rate this:
christ - chennai,இந்தியா
30-நவ-201710:34:56 IST Report Abuse

christஷட்டர் பராமரிப்புக்கு ஒதுக்கிய நிதியில் பாதிய இவனுக வாயில போட்டு இருப்பானுக .அதன் ஷட்டர் பிச்சிக்கிச்சி

Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
30-நவ-201709:06:25 IST Report Abuse

Loganathan Kuttuvaஇந்த தண்ணீர் கடலில் கலந்து வீணாகும்.

Rate this:
Rajan - Hydeabad,இந்தியா
30-நவ-201708:19:28 IST Report Abuse

Rajanஅணையின் முழுப்பெயரை முதலில் கொடுத்துவிட்டு பிறகு சுருக்கத்தை கொடுத்தால் புரிந்துகொள்ள எதுவாக இருக்கும். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்போல் பலர் இருப்பார்கள் என எண்ணுகின்றேன்.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
30-நவ-201706:58:27 IST Report Abuse

தேச நேசன் ஹிமாச்சல் உத்தராகண்ட் போன்ற வடமாநிலங்களில்தான் மணல் திருடர்கள் இதுபோல மதகுகளை உடைத்து மணல்திருட்டுக்கு வசதியாக ஆக்குவார்கள் .இங்கும் அந்த கலாச்சாரம் பரவிவிட்டதே

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement