10 ஆயிரம் பேரின்,'லைசென்ஸ் ' ஒரே மாதத்தில் ரத்து : போதையில் வாகனம் ஒட்டியதால் சிக்கல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 ஆயிரம் பேரின்,'லைசென்ஸ் ' ஒரே மாதத்தில் ரத்து : போதையில் வாகனம் ஒட்டியதால் சிக்கல்

Updated : நவ 30, 2017 | Added : நவ 30, 2017 | கருத்துகள் (11)
Advertisement

சென்னை: தமிழகத்தில், ஒரு மாதத்தில் மட்டும், போதையில் வாகனம் ஓட்டியதால், 10 ஆயிரம் பேர், 'டிரைவிங் லைசென்சை' இழந்துஉள்ளனர்.
தேசிய அளவில், சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே, விபத்துக்களை குறைக்க சிறப்புக் கவனம் செலுத்தும்படி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், உச்ச நீதிமன்றமும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளன. இதற்காக, மாவட்டம் தோறும், கலெக்டர்கள் தலைமையில், போலீஸ், போக்குவரத்து மற்றும் கல்வி துறையினர் அடங்கிய சாலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், அதிக வேகம், அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட, சாலை விதிகளை மதிக்காதோரின், லைசென்சை பறிமுதல் செய்யும், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அந்த வகையில், அக்டோபரில் மட்டும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், போதையில் வாகனம் ஓட்டி, தங்களின் லைசென்சை இழந்துள்ளனர்.


இது குறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
குடித்து விட்டு வாகனம் இயக்குவதால், அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன; இரவில், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த, தமிழக போக்கு வரத்து துறை, 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபரில் மட்டும், சென்னையில், 1,505 பேர் உட்பட, மாநிலம் முழுவதும், 10 ஆயிரத்து, 862 பேர், போதையில் வாகனம் ஓட்டியதால், லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
உரிய விளக்கம் அளிக்காத, 7,332 லைசென்ஸ்கள், தற்காலி கமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள, 3,530 பேரும், 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
eswarasamy - tirupur ,இந்தியா
01-டிச-201719:54:14 IST Report Abuse
eswarasamy திருப்பூரில் யாரும் குடித்து விட்டு வாகனம் ஓட்டவில்லை.பச்ச குழந்தை கூட நம்பாது.தமிழ்நாட்டில் மது விற்பனையில் முதல் இடம் திருப்பூர்.
Rate this:
Share this comment
Cancel
Raman - Lemuria,இந்தியா
30-நவ-201721:19:21 IST Report Abuse
Raman ஆதார் இணைக்காமல் இதனால் பயன் இல்லை . அவர்கள் மீண்டும் வேறு ஊரில் லைசென்சு எடுத்து கொள்வார்கள்
Rate this:
Share this comment
Cancel
R.SUGUMAR - tiruvannamalai,இந்தியா
30-நவ-201718:07:22 IST Report Abuse
R.SUGUMAR அனைத்திற்கும் காரணம் மதுபான கடை , அதனால் அரசு முதலில் மதுபான கடையை மூட வேண்டும் பிறகு அனைத்து தவறுகளும் குறையும் .....
Rate this:
Share this comment
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
30-நவ-201714:20:40 IST Report Abuse
Kundalakesi உறுப்பு தானத்தில் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதலிடம். இதில் பாதிற்கு மேல் விபத்து மூலம் உயிர் இழந்தவர்களின் உறுப்பு. அது அனைத்துமே கவனக்குறைவு, போதை பயணம் போன்றவற்றால் நடைபெறும் விபத்து. டாஸ்மாக் இழுத்து மூடுங்கள், போக்குவரத்து குற்ற நடவடிக்கையை கடினமாகுங்கள். பின்பு இந்த இறப்பு குறையும்.
Rate this:
Share this comment
Mk cbe - covai,இந்தியா
30-நவ-201715:33:44 IST Report Abuse
Mk cbeஅன்பரே அது தேவையில்லை. அனைத்து இடங்களிலும் cctv கேமரா மூலம் கண்காணித்து வீட்டிற்கே அபராதம் என அனுப்புங்கள் இதன் மூலம் வேலையில்லா இளைனார்க்கு வேலை கிடைத்த மாதிரியும் இருக்கும் தவறுகளும் குறையும். ஆனால் ஒரே நிபந்தனை இரண்டாம் முறை ஒரே தவறு நிகழுமாயின் பைன் தொகையை பத்து ஆயிரத்திற்கு மேல் என நிர்ணயித்தல் போதும்...
Rate this:
Share this comment
Cancel
Valayapatti Kanniappan Kanniappan - Madurai,இந்தியா
30-நவ-201711:58:51 IST Report Abuse
Valayapatti Kanniappan Kanniappan '10 ஆயிரம் பேரின்,'லைசென்ஸ் ' ஒரே மாதத்தில் ரத்து : போதையில் வாகனம் ஒட்டியதால் சிக்கல்' என்ற செய்தியை வாசித்தேன். காவல் துறையினர் பிடித்ததை அடுத்து வாகனத்தை எடுத்துச் சென்றார்களா? அப்படியே ஓட்டிச் சென்றார்களா? அதற்கடுத்த நாட்களில் உரிமம் ரத்து செய்யப்பட்டோர் வாகனத்தை ஓட்டுவதையும், மதுபானம் அருந்துவதையும் விட்டு விட்டார்களா என்பதைக் கவனிப்பதெப்படி? முன்பெல்லாம் 1970 களில் மது அருந்தியதாகச் சந்தேகப்பட்டவர்களை மருத்துவச் சோதனைக்கு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவச் சான்றிதழ் வாங்கி நீதிமன்றத்திற்கு கூட்டிச் செல்வார்கள். அப்படிக் கூட்டிச் சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் மதுபானம் அருந்துவார்கள் மது அருந்தி உரிமம் இல்லாமலே வாகனங்களை ஓட்டவும் செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ivan Nan - Tiruvannamalai,இந்தியா
30-நவ-201711:37:33 IST Report Abuse
Ivan Nan 10000 licence ah.... 10000xRs.2500(Fine)=Rs. 25000000 Ennada panuringa ivvalo money..... சம்பளம் வாங்குறீங்க அப்புறம் எதுக்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு
Rate this:
Share this comment
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
30-நவ-201710:17:48 IST Report Abuse
VOICE TASMAC பார் முன்பு பார்க்கிங் செய்யப்பட்ட வாகனம் ஓட்டுபவர் எல்லாம் யார் ? அவர்களை பிடித்த மாத்ரி செய்தி வருவது இல்லை ? பிடித்தல் தினமும் 1 லட்சம் லைசென்ஸ் கேன்சல் செய்யவேண்டி வரும். மாமூல் வரும் இடத்தில தான் நம்ம காவல்துறை கண்காணிப்பு இருக்காது என்பது தெரிந்த விசயம் தானே.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
30-நவ-201708:16:12 IST Report Abuse
Amirthalingam Sinniah இக்கூட்டம் குடியை விட்டால் மதுகடைகளுக்கு நஷ்டம்தான் வரும்.
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
30-நவ-201706:31:01 IST Report Abuse
kalyanasundaram HOPE CONCERNED DRIVERS DID NOT BRIBE POLICE WHO BOOKED CASE
Rate this:
Share this comment
Cancel
Arun - MAA,யூ.எஸ்.ஏ
30-நவ-201704:41:02 IST Report Abuse
Arun Can the Government enforce buses/trains with doors closed during operation? Also avoid overcrowd in buses...what is needed is "Roads with proper designs/signals and cars with crash tests (passed) to avoid too many fatalities...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை