கையெழுத்து சர்ச்சை: ராகுல் ஹிந்து இல்லையா?| Dinamalar

கையெழுத்து சர்ச்சை: ராகுல் ஹிந்து இல்லையா?

Added : நவ 30, 2017 | கருத்துகள் (233)
Advertisement
கையெழுத்து சர்ச்சை,Signature controversy,  ராகுல் ,Rahul,ஹிந்து ,  Hindu, சோம்நாத் கோவில் , Somnath Temple,குஜராத்,Gujarat,  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தீபேந்திர சிங் ஹூடா,Congress spokesperson Dipendra Singh Hooda,  காங்கிரஸ், Congress,

ஆமதாபாத்: புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் ஹிந்து அல்லாதோர் வருகை பதிவேட்டில் ராகுல் கையெழுத்திட்டதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. காங்., அதை மறுத்துள்ளது.

குஜராத்தில் பிரசித்தி பெற்ற, சோம்நாத் கோவிலுக்கு காங்., துணைத் தலைவர் ராகுல் நேற்று சென்றார். ஹிந்து கோவிலான இங்கு, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு முன், அங்குள்ள ஹிந்து அல்லாதவர் பதிவேட்டில் பதிவு செய்து, அனுமதி பெற வேண்டும். அவ்வாறு ராகுல் சென்றபோது, அவரது பெயரை, அந்தப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது


பா.ஜ., சதி:

கட்சியின் செய்தித் தொடர்பாளர் தீபேந்திர சிங் ஹூடா கூறியதாவது: இந்தப் பதிவேடு, பொய்யானது. வேண்டுமென்றே சிலர் குழப்பத்தை ஏற்படுத்த ராகுலின் பெயரை ஹிந்து அல்லாதோர் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர்; இது பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X