Ariviyalmalar | 'டெஸ்லா'வின் அசத்தல் மின் லாரி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'டெஸ்லா'வின் அசத்தல் மின் லாரி!

Added : நவ 30, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'டெஸ்லா'வின் அசத்தல் மின் லாரி!

யாரும் எதிர்பாராத வகையில், முழுவதும் மின்சாரத்தில் இயங்கும், ராட்சத சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார், அமெரிக்க தொழிலதிபர், எலான் மஸ்க். 'டெஸ்லா செமி டிரக்' என, பெயரிடப்பட்டுள்ள அந்த மின் லாரி, ஒருமுறை மின்னேற்றம் செய்தால், 800 கி.மீ., தொலைவு செல்லுமாம். அதுவும், 36.28 டன் எடையுள்ள, சரக்குகளை ஏற்றிக் கொண்டு, நெடுஞ்சாலையில் மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும் என, சமீபத்தில், ஊடகங்களிடம் விளக்கினார், மஸ்க்.

காற்றை கிழித்துச் செல்லும் வகையில், துப்பாக்கித் தோட்டா முனை போல், செமி டிரக்கின் வடிவம் இருக்கிறது. பின்னால் இணைக்கப்பட்டிருக்கும் சரக்கு டிரெயிலருடன், ஓட்டுனரின் பகுதி கச்சிதமாக இணைவதால், காற்று தடை ஏற்படாது என்கிறார், மஸ்க்.
இந்த மின் லாரியின் மின்கலன்களை, 30 நிமிடத்தில், 'ரீசார்ஜ்' செய்யலாம். டீசல் லாரியின் டேங்க்கை நிரப்ப, 20 நிமிடம் பிடிக்கும். அதைவிட, 10 நிமிடம் தான் கூடுதலாக இருக்கும் என்கிறார், மஸ்க்.

ஓட்டுனரின் அறை, ஏதோ விமானியின் அறை போல, இரண்டு கட்டுப்பாட்டு திரைகளுடன்
வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டீசல் லாரிகளை விட, டெஸ்லா செமி டிரக்கை இயக்க, 20 சதவீதம் குறைவான செலவே பிடிக்கும் என, அவர் உறுதியாக தெரிவித்தார். 10 லட்சம் கி.மீ., வரை இந்த வண்டி, சாலை நடுவே பழுதாகி நிற்காது என, உத்தரவாதம் தருகிறது, டெஸ்லா. இதன் கண்ணாடிகள், அணு குண்டு அருகே வெடித்தாலும் உடையாது என, டெஸ்லா விளம்பரம்
செய்கிறது.

எல்லாவற்றையும் விட முக்கியம், செமி டிரக், 'ஆட்டோ பைலட்' தொழில்நுட்பத்துடன் வருகிறது. அதாவது, நெடுஞ்சாலைக்கு வந்ததும், இந்த லாரியிலுள்ள மென்பொருளும், உணர்வான்களும், தானாகவே ஓட்டிச் செல்லும். ஓட்டுனர் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்!

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை