Ariviyalmalar | 'பல்டி' அடிக்கும் அட்லஸ் ரோபோ!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'பல்டி' அடிக்கும் அட்லஸ் ரோபோ!

Added : நவ 30, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'பல்டி' அடிக்கும் அட்லஸ் ரோபோ!

மனித வடிவிலான, 'ஹியூமனாயிட்' ரோபோக்கள், வேகமாக பரிணாம வளர்ச்சியடைந்து வருகின்றன. தள்ளாடி விழாமல் நிற்பது, வேகமாக நடப்பது, படியேறுவது, ஓடுவது, எடை துாக்குவது என, மனிதன் செய்யும் பல காரியங்களை, இந்த ரோபோக்கள் செய்ய துவங்கி உள்ளன.
அதில், 'லேட்டஸ்ட்' முயற்சி தான் பல்டி அடிப்பது. அதுவும், முன்பக்கம் சாய்ந்து பல்டி அடிப்பது அல்ல. தலையை முதுகு பக்கமாக வளைத்து, பின்னோக்கி பல்டி அடிக்கும் வித்தையை, பாஸ்டன் டைனமிக்சின் இரு கால் ரோபோவான, 'அட்லஸ்' அசால்டாகச் செய்து காண்பித்திருக்கிறது. அமெரிக்க தயாரிப்பான இந்த ரோபோ, ஜப்பானின், ஹோண்டா உருவாக்கி, மெருகேற்றி வரும், குள்ள ரோபோவான, 'அசிமோ'வுடன் போட்டி போடுவது போலத் தெரிகிறது.

அசிமோ, அட்லஸ் செய்யும் பல வேலைகளைச் செய்கிறது என்றாலும், அட்லஸ் தான், பின்னோக்கி பல்டி அடித்த முதல் ஹியூமனாயிட் ரோபோ. ஆனால், அசிமோவால் பேசவும், எதிரே வருபவருக்கு வணக்கம் சொல்லவும், சில வார்த்தைகள் பேசவும் தெரியும். அட்லசுக்கு அதைச் செய்யத் தெரியாது என்றாலும், அதன் பல்டி மனித பல்டியை போலவே சாமர்த்தியமாக இருப்பதாகவும், 5 மதிப்பெண்களுக்கு, 3.5 மதிப்பெண் தரலாம் என்றும், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஒருவர் மதிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஒன்று, கூகுளின் ரோபோ பிரிவாக இருந்த பாஸ்டன் டைனமிக்சை, ஜப்பானைச் சேர்ந்த, சாப்ட்பேங்க் நிறுவனம், கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியது. எனவே, அட்லசும் இப்போது ஜப்பானியர் கையில் தான் இருக்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை