Ariviyalmalar | பனி காற்றிலிருந்து குடிநீர்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பனி காற்றிலிருந்து குடிநீர்

Added : நவ 30, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பனி காற்றிலிருந்து குடிநீர்

தண்ணீர் என்றதும், பூமி மேலும், பூமிக்கு அடியிலும் தான் இருக்கும் என்று தான், இத்தனை காலம் மனிதர்கள் நினைத்தனர். ஆனால், காற்றிலிருந்தும் சுத்தமான குடிநீரை பெற முடியும் என்பதை, பல புதிய தொழில்நுட்பங்கள் நிரூபிக்கின்றன.

தைவானைச் சேர்ந்த, தேசிய சென் குங் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள், 'அக்குவா ஏர்' என்ற, ஓர் எளிய கருவியை வடிவமைத்து உள்ளனர். மூன்று மூங்கில் கால்களும், அதன் மேலே, ஒரு கூம்பு போன்ற விரிப்பும் கொண்ட இந்த கருவியை, பனி மிக்க மலைப் பகுதிகளில் வைத்துவிட்டால், இக்கருவி, பனிக் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை, ஒரு சிறு மின் விசிறி மூலம் உறிஞ்சி சுழற்றி, நீராக்கி தருகிறது. அந்நீரை, ஒரு குழாய் வழியே கீழே இருக்கும் வாளியில் சேமிக்கலாம்.ஹாண்டூராஸ் போன்ற மலைப் பாங்கான, நீர் குழாய் வசதியற்ற பகுதிகளுக்கு, இந்த எளிய கருவி பயனுள்ளதாக இருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
01-டிச-201706:45:05 IST Report Abuse
NARAYANAN.V தைவான் பல்கலைக் கழக மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை