Ariviyalmalar | அரிய நோயை தீர்க்க மரபணு சிகிச்சை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அரிய நோயை தீர்க்க மரபணு சிகிச்சை!

Added : நவ 30, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அரிய நோயை தீர்க்க மரபணு சிகிச்சை!

உலகிலேயே, முதன்முறையாக, ஒரு மனித நோயாளிக்கு, மரபணுவில் திருத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை, சமீபத்தில், விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர். 'ஹண்டர் சிண்ட்ரோம்' என்ற அபூர்வ நோய்வாய்ப்பட்டிருக்கும், 44 வயது ஆணுக்கு, இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்நோய் தாக்கப்பட்டவருக்கு, உடலில் சில வகை சர்க்கரைகளை ஜீரணித்து, சக்தியாக மாற்றும் திறன் பழுதடைந்துவிடும். இதனால், உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உண்டு.
மரபணு கோளாறால் வரும் இந்நோய்க்கு, மரபணுவில் உள்ள பிழையை திருத்துவது தான் ஒரே சிகிச்சை. எனவே, அமெரிக்க மருத்துவர்கள், நோயாளியின் உடலுக்குள், 'ஜிங்க் பிங்கர் நியூக்ளியஸ்' என்ற உயிரி வேதிப் பொருளை செலுத்தி உள்ளனர்.

இது ரத்தத்தில் கலந்து, பயணித்து, கல்லீரலை அடைந்து, ஹண்டிங் சிண்ட்ரோம் குறைபாட்டை ஏற்படுத்தும் மரபணுக்களில் திருத்தங்களைச் செய்யும் என, மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இது சரியாக வேலை செய்தால், நோயாளியின் கல்லீரல் துாண்டப்பட்டு, ஆல்புமின் என்ற புரதத்தை உற்பத்தி செய்யும். இது, நோயாளியின் உடலில், கார்போஹைட்ரேட்டுகளை சரியாக ஜீரணிக்க உதவும் என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை