Ariviyalmalar | அவதி தரும் இரவு மின்னொளி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அவதி தரும் இரவு மின்னொளி!

Added : நவ 30, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அவதி தரும் இரவு மின்னொளி!

இரவு முழுவதும் ஒளிரும் மின் விளக்குகள், உலகெங்கும் அதிகரித்து வருகின்றன.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, 'சயன்ஸ் அட்வான்சஸ்' இதழில், ஒரு சுவையான ஆய்வு வெளியாகி உள்ளது. உலக நாடுகளை, இரவு நேரத்தில் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 2012 - 2016 வரையிலான கால கட்டத்தில், வெளி பகுதியில், இரவு நேரத்தில் விளக்குகள் எரியும் பரப்பளவு, ஆண்டுதோறும், 2.2 சதவீதம் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

அதே போல, இரவு விளக்குகளின் பிரகாசமும் கூடுகிறது. இரவு விளக்குகள் அதிகரிப்பதால், அதே அளவுக்கு மின் நுகர்வும் அதிகரிக்கவில்லை என்பது மட்டுமே, ஆறுதலான செய்தி. மின் சக்தியை குறைவாக பயன்படுத்தும், எல்.இ.டி., ரக விளக்குகள், உலகெங்கும் பரவலாகி இருப்பது தான், இதற்கு காரணம்.ஆனால், இரவு நேர ஒளி மாசு, வேறு பல பாதிப்புகளை தர துவங்கி உள்ளது. இரவில் இரை தேடும் விலங்குகளுக்கு, பெரும் தொந்தரவை இந்த ஒளி மாசு அதிகரிப்பு ஏற்படுத்துகின்றன என்கின்றனர், வல்லுனர்கள்.

அதே போல, தாவரங்களும் இரவு நேர விளக்குகளால் பாதிக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் விட, இரவு வெகு நேரம் ஒளிரும் விளக்குகளில் வெளிப்படும் நீல ஒளி அலைவரிசை, மனிதர்களின் துாக்கத் தரத்தை குலைத்து விடுவதாகவும், விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X