Ariviyalmalar | ஆராய்ச்சி மலர்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆராய்ச்சி மலர்

Added : நவ 30, 2017
Advertisement
ஆராய்ச்சி மலர்

காபி அருந்துவதால், சில நன்மைகள் உண்டு என்பதை, ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. சமீபத்தில் வெளிவந்துள்ள ஓர் ஆய்வு, மேலும் ஒரு நன்மையை, இப்பட்டியலில் சேர்த்திருக்கிறது. 'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்' ஆய்விதழில், காபி தொடர்பாக செய்யப்பட்ட, 200 ஆய்வுகளை அடிப்படையாக வைத்து, ஓர் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, காபியே அருந்தாதவர்களை விட, தினமும், 3 - 4 கோப்பைகள் வரை, காபி அருந்துவோருக்கு பக்கவாதம், இதய நோய், கல்லீரல் நோய், சர்க்கரை நோய் மற்றும் சில புற்றுநோய்கள் வரும் வாய்ப்பு குறைவு. அதே சமயம், காபி அருந்தும் வழக்கம் இல்லாதோர், நோய்களை தடுக்க, காபி குடிக்கும்படி, தாங்கள் பரிந்துரைப்பதாக நினைக்கக் கூடாது என்றும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

---------------


கருவுற்ற தாய், துாங்கும் போது இடது அல்லது வலது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பது நல்லது. மல்லாந்து படுத்துத் துாங்கும் போது, கருப்பை அழுத்தத்திற்கு உள்ளாவதால், வளரும் குழந்தைக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், குழந்தை இறந்து பிறக்க வாய்ப்புண்டு.
வடக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 1,000 கருவுற்ற பெண்கள் மத்தியில் நடத்திய ஆய்வில், இந்த உண்மை தெரிய வந்து உள்ளது. ஆய்வில் பங்கேற்ற கர்ப்பிணிகளில், 291 பேருக்கு குழந்தை இறந்து பிறந்தது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது, பிரசவக் காலத்தை ஒட்டிய மாதங்களில், பெண்கள் மல்லாந்து படுத்து உறங்குவது, முக்கிய காரணமாக இருக்கலாம் என, தெரிய வந்தது.

-------------



மது அருந்துவோர், என்ன வகை பானம், என்ன மாதிரியான மனநிலையை ஏற்படுத்துவதாக நினைக்கின்றனர்? இங்கிலாந்தைச் சேர்ந்த, 'பப்ளிக் ஹெல்த் வேல்ஸ்' மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த கேள்வியை, 21 நாடுகளைச் சேர்ந்த, 30 ஆயிரம் பேரிடம் கேட்டனர். இந்த கருத்தாய்வின் முடிவில், 60 சதவீதம் பேர், சிவப்பு ஒயின் அருந்தினால், மன இறுக்கம் தளர்வதாகவும், இரவில் நல்ல துாக்கம் வருவதாகவும் தெரிவித்தனர். கடினமான மது பானங்களை அருந்தும் ஆண்களில், 60 சதவீதத்தினர், அவை தங்களுக்கு உத்வேகத்தையும், தன்னம்பிக்கையையும் தருவதாக தெரிவித்தனர்.

ஆண்களில், 30 சதவீதத்தினர், கடின மதுவால் தங்களுக்கு முரட்டுத்தனமான மனநிலை வருவதாக தெரிவித்தனர். 'இந்த ஆய்வின் முடிவுகள், குடி நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் முறைகளை மாற்ற உதவும்' என, ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மதுவை பற்றி, குடிப்பவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதைத் தான், தாங்கள்
ஆய்வு செய்ததாகவும், மதுவால் உடலில் ஏற்படும் தாக்கத்தை, இதில் ஆராயவில்லை எனவும், ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X