4 நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர ரயில் பாதை திட்டம் அசத்தல்! Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அசத்தல்!
4 நகரங்களை இணைக்கும்
தங்க நாற்கர ரயில் பாதை திட்டம்

புதுடில்லி: சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி நகரங்கள் இடையே, மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் அதிவேக ரயில்களை இயக்கும் வகையில், தங்க நாற்கர ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

4 நகரங்களை ,இணைக்கும்,தங்க நாற்கர ,ரயில் பாதை, திட்டம்,அசத்தல்


சிறந்த ரயில் சேவையை அளிக்கும் வகையில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, ரயில்வே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் இயங்கும், கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

தங்க நாற்கர சாலை திட்டத்தைப் போல, நான்கு பெரு நகரங்களை இணைக்கும் வகையில், தங்க நாற்கர ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி இடையே, மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் இயங்கும், அதிவேக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த மார்க்கங்களில் மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அதிவேக ரயில்களை இயக்கும் போது, இந்த மார்க்கங்களில் பயண நேரம், பல மணி நேரம் வரை குறையும். இதற்காக, 10 ஆயிரம் கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதைகளை மேம்படுத்துவது, புதிதாக மாற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கிடையே, டில்லி - மும்பை இடையே, 11 ஆயிரத்து, 189 கோடி ரூபாயில் மேம்பாட்டு

பணிகள் மேற்கொள்ளவும், டில்லி - ஹவுரா இடையே, 6,975 கோடி ரூபாயில் பணிகள் மேற் கொள்ளவும், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

ரயில் பாதைகளை வலுப்படுத்துதல், சிக்னல் முறையை மேம்படுத்துதல், விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரயில்வே தங்க நாற்கர திட்டத்துக் கான வடிவமைப்பு பணிகள் துவங்கியுள்ளன.

வரும், 2022 ஆகஸ்ட், 15ல், நாட்டின், 75வது சுதந்திர தினத்தின்போது, இந்த திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ரயில்வே வாரியத்தின் கூட்டத்தில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு, 'நிடி ஆயோக்' ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத் ததும் திட்டபணிகள் வேகமெடுக்கும் என, ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

ரயில் விபத்து குறைந்துள்ளது


ரயில்வே வாரியத் தலைவர், அஸ்வினி லோஹானி கூறியதாவது: ரயில்வே பாதுகாப்புத் துறையில், 1.25 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால், பராமரிப்பு பணிகள் விரைவாக நடப்ப தால், விபத்துகள் குறைந்துள்ளன. இந்த ஆண்டில் ஏப்., 1 முதல், நவ., 30 வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்துகள், 40 சதவீதம் குறைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

முதல் நாளில் 2 லட்சம் பேர் பயணம்: ஐதராபாத் மெட்ரோ ரயில் சாதனை


தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.

Advertisement

தலைநகர் ஐதராபாதில், முதற் கட்டமாக, மியாபுர் - நகோல் இடையே, 30 கி.மீ., துாரத்துக்கு, மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சேவையை, பிரதமர் மோடி, சமீபத்தில் துவக்கி வைத்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம், ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம்,வர்த்த ரீதியான சேவையை துவக்கியது. இதில், ஒரே நாளில் இரண்டு லட்சம் பேர், மெட்ரோ ரயிலில் பயணித்து உள்ளதாக, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஐதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குனர், என்.வி.எஸ்.ரெட்டி கூறியதாவது:உலகளவில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய மெட்ரோ ரயில் சேவையில், இது தான், மிகப்பெரிய திட்டம்.

முதற்கட்டமாக, 30 கி.மீ., பணி முடிந்து சேவை துவக்கப்பட்டு உள்ளது.இதில், 24 ஸ்டேஷன்கள் உள்ளன. முதல் நாளிலேயே, இரண்டு லட்சம் பேர் பயணித்து உள்ளனர். இது, ஒரு சாதனை. நாங்கள் எதிர்பார்த்ததை விட, அதிக வரவேற்பு கிடைத்துள்ளது; இதில், பணி நிமித்தமாக பயணித்தவர்களே அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில், மெட்ரோ ரயில் சேவை, வர்த்தக ரீதியாக துவக்கப்பட்ட முதல் நாளில், 40 ஆயிரம் பேர் பயணித்தனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
08-டிச-201719:18:56 IST Report Abuse

Somiah Mஅறுபது கோடி விவசாயிகளின் தண்ணீர் தேவையையும் நூற்று முப்பது கோடி இந்தியர்களுக்கான உணவு உற்பத்தி தேவையையும் நிறைவு செய்வதற்கான இந்திய நதிகளின் இணைப்பு பற்றி பேசுவதற்கு ஒருவருக்கும் மனசில்லை .ஆனால் உலக அளவில் பீத்திக்கொள்ள புல்லெட் ரயிலையும் ,பறக்கும் ரயிலையும் விட பல லட்சம் கோடி ரூபாய்களை சிலவு செய்வதற்கு திட்டமிடப் படுவது ,குடிப்பதற்கு கஞ்சி இல்லாத பொழுது கோமணத்திற்கு பட்டுதுணி தேடுவது போல் இல்லையா ?

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
03-டிச-201710:07:33 IST Report Abuse

அம்பி ஐயர்தமிழ்நாட்டில் இருவழிப்பாதை.... மின்மயமாக்கல் போன்றவை ஏற்படாததற்கு மிக முக்கிய காரணம் தனியார் ஆம்னி பஸ் முதலாளிகளும் அவர்களால் கட்டப்படும் கப்பமும்....

Rate this:
adalarasan - chennai,இந்தியா
01-டிச-201721:58:31 IST Report Abuse

adalarasanநிதி வொடுக்குவதிலோ சென்னைக்குத்தான் எப்பொழுதும், கடைசி முக்கியத்துவம் என்பது வழக்கம்போல் தெளிவாகிறது

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
01-டிச-201721:29:19 IST Report Abuse

Kuppuswamykesavanஅட்ராசக்க அட்ராசக்க, சபாஷ் பிரமாதம், பராட்டுக்கள் பிரதமர் மோடிஜிக்கு. மேலும், சிலர் இங்கு, நொட்டு நொள்ளை என, யார் கூறினாலும், அதை புறக்கணித்து, இந்த திட்டத்தை நிறைவேத்துங்கஜி. இது எதிர் கால, நம் இந்திய ராணுவ அவசர பயன்பாட்டுக்கு, மிகவும் உதவி செய்யும்ஜி.

Rate this:
E.PATHMANABAN - vikramasingapuram,இந்தியா
01-டிச-201719:37:50 IST Report Abuse

E.PATHMANABANஎன்னத்த ஸ்கூபீட கூட்டி எங்க நெல்லை எக்ஸ்பிரஸ் என்னவோ லேட்டாதான் வருது

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-டிச-201718:44:23 IST Report Abuse

J.V. Iyerநல்ல மத்திய அரசு.. நல்ல திட்டங்கள்.. இது எல்லா மக்களையும் அடையும். இதில் கமிஷன் கிடைக்காமல் வயிறு எரிந்து பிரதமர் மோடிஜியை திட்டுவார்கள். உடனே அவரின் பாப்புலாரிட்டி அதிகரிக்கும்.

Rate this:
mupaco - Madurai,இந்தியா
01-டிச-201717:12:02 IST Report Abuse

mupacoபலமுறை எழுதி ஆயிற்று. திண்டுக்கல் ஈரோடு இருவழி பாதை (குறைந்த தூரம் தான்) அமைக்கப்பட்டால் வட்டமாக ரயில் இயக்க முடியும். மதுரை , ஈரோடு, சென்னை சென்ட்ரல், விழுப்புரம், திருச்சி வழியாக இயக்குவதன் மூலம் எந்த நேரமும் சிறப்பு வண்டி இல்லாமல் நெரிசல் குறைக்க முடியும். ஸ்லீப்பர் மட்டும் எனவும் இயக்கலாம்.

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
01-டிச-201716:48:21 IST Report Abuse

ரத்தினம்எதெற்கெடுத்தாலும் ஆஆ ஊ என்று குதர்க்கம் பேசாமல் யார் கொண்டு வந்தாலும் நல்ல திட்டங்களை வரவேற்போம், ஆக்க பூரவமானயோசனைகளையும் சொல்லலாம். ஏற்கனவே வாஜ்பாயின் முனைப்பினால் தங்க நாற்கர சாலை திட்டம் உருவானது. அதே மாதிரி மோடியும் செய்வார் என நம்புவோம்.

Rate this:
Sanghimangi - Mumbai,இந்தியா
01-டிச-201715:12:29 IST Report Abuse

Sanghimangiஇன்றைய தேதியில் கூட, சென்னை மற்றும் மும்பை இடையே பெரும்பாலான வழித்தடம் இரட்டை பாதை பணிகள் முடிக்கப்படாமலும், மின்மயமாக்கப்படாமலும் இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. பல ஆண்டுகளுக்கு முன்பே நிதி ஒதுக்கப்பட்டும் வழக்கம் போல பணிகள் மந்தமாகவே நடைபெறுகின்றன என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். இதில் எந்த ஆட்சியாளர்களும் விதி விலக்கு அல்ல. அதுவரையில், வெற்று மகிழ்ச்சிக்காக தினம் இப்படி ஒரு செய்தியை படித்து மட்டும் ஆறுதல் படலாம்.

Rate this:
Sanghimangi - Mumbai,இந்தியா
01-டிச-201715:06:28 IST Report Abuse

Sanghimangi11 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் (2007-2012 ), அப்போதைய பிரதமர் மன்மோகன் அவர்களால் தங்க நாற்கர தனி சரக்கு ரயில் பாதை திட்டம் வகுக்கப்பட்டு, முதற்கட்டமாக மேற்கு மற்றும் கிழக்கு தனி சரக்கு ரயில் பாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, சரக்கு ரயில் பாதைக்கு பிறகு, பயணியர் பாதையை மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டு விட்டது. இதை பற்றி விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தால் மக்களுக்கு அதிகம் தெளிவு கிடைத்திருக்கும்.

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement