இது எலக் ஷனா, செலக் ஷனா? ராகுலுக்கு கட்சியில் போர்க்கொடி Dinamalar
பதிவு செய்த நாள் :
இது எலக் ஷனா, செலக் ஷனா?
ராகுலுக்கு கட்சியில் போர்க்கொடி

புதுடில்லி: ''ஒரு குடும்பத்தைசேர்ந்தவர்களே தலைவர்களாவதற்கு, காங்கிரஸ் கட்சி என்ன குடும்ப வியாபாரமா; காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடக்க உள்ளது, எலக் ஷனா அல்லது செலக் ஷனா,'' என, காங்கிரஸ் கட்சியின், மஹாராஷ்டிர மாநிலச் செயலர், செஷாத் புனேவாலா கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மோசடி தேர்தல்காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில், கட்சித் தலைவர் சோனியாவின் மகனும், துணைத் தலைவருமான ராகுல், தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மஹாராஷ்டிர மாநிலச்

செயலர், செஷாத் புனேவாலா, பல கேள்விகளை எழுப்பி, ராகுலுக்கு கடிதம்அனுப்பியுள்ளார்;

அதில் அவர் கூறியுள்ளதாவது:

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, தற்போது நடக்க உள்ளது, ஒரு மோசடி தேர்தல். நியாயமான முறையில் தேர்தல் நடந்தால், தலைவர் பதவிக்கு நானும் போட்டியிடுவேன். இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடப்போகிறவர்கள் யாரும் கட்சியின் விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல; அவர்கள் நியமிக்கப்பட்டவர்கள்.

துணைத் தலைவர் என்ற முறையில் போட்டி யிடாமல், அந்தப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, தலைவர் பதவிக்கு போட்டியிடுங்கள். நானும் பதவியை ராஜினாமா செய்து போட்டியிடு கிறேன்.அடுத்தது, கட்சியின் எதிர்காலம் குறித்து

Advertisement

 இது எலக் ஷனா, செலக் ஷனா,ராகுல்,கட்சியில்,போர்க்கொடி

என்னுடன், 'டிவி' விவாதம் செய்யத் தயாரா? துணைப் பெயரின் அடிப்படையில் இல்லாமல், தகுதியின் அடிப்படையில் போட்டியிடுவோம்.

ஒருவருக்கு மட்டுமே பதவி


கட்சியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களில், ஒருவருக்கு மட்டுமே பதவி என்ற முறையை அமல் படுத்த தயாராக இருக்கிறீர்களா? கட்சி என்ன குடும்ப வியாபாரமா, அனைவருக்கும் பதவி அளிப்பதற்கு? இந்த முறையை மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-நவ-201721:51:57 IST Report Abuse

kulandhaiKannanOnly Congressman with backbone. But fixing the election was started by Motilal Nehru in 1929 itself in favour of Jawaharlal

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement