கால்நடை விற்பனை தடை சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு திட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
கால்நடை விற்பனை தடை சட்டத்தை
திரும்ப பெற மத்திய அரசு திட்டம்

புதுடில்லி: பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இறைச்சிக்காக, பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 கால்நடை,விற்பனை, தடை சட்டத்தை, திரும்ப பெற, மத்திய அரசு, திட்டம்

இறைச்சிக்காக, பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு தடை விதிக்கும் அரசாணையை, மே மாதம், மத்திய அரசு பிறப்பித்தது; இதற்கு, பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த அரசாணைக்கு, சென்னை

உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்க்கும் வழக்கும், உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.

இதற்கிடையே, மத ரீதியில் இந்த உத்தரவு பிறப் பிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் செய்ய பட்டன. 'பசுஉள்ளிட்ட கால்நடைகளை, இறைச்சிக்காக விற்பது குறித்து, மக்களிடம் கருத்து கேட்கப் பட்டு உள்ளது. எதிர்ப்பு இருந்தால், அதைத் திரும்பப் பெறவும் தயாராக உள்ளோம்' என, உச்ச நீதிமன்றத் தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தத் தடை உத்தரவை திரும்பப் பெற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர் பாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்ச கம், தன் பரிந்துரையை சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது.

இது குறித்து, சுற்றுச்சூழல் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: இறைச்சிக்காக பசுவை விற்பதற்கான தடை குறித்து,மாநிலங்களின் கருத்து கேட்கபட்டது.

Advertisement

இந்த தடையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பல மாநிலங்கள் கருத்து தெரிவித்திருந்தன. அதன்படி, தடை உத்தரவை திரும்பப் பெறலாம் என, சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து உள்ளோம்.சட்ட அமைச்சகம் அதை பரிசீலித்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், தடை உத்தரவு திரும்பப் பெறப்படும். ஆனால், இதற்கான காலக்கெடு எதுவும் விதிக்கப்பட வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02-டிச-201700:00:51 IST Report Abuse

Mani . Vஇது போன்று மக்களை கொலையாய் கொல்லும் ஜிஎஸ்டி வரியையும் குறைத்தால் நல்லது. (என்னது, கார்ப்பரேட் காரன் ஒத்துக் கொள்ள மாட்டானா?).

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
01-டிச-201722:02:56 IST Report Abuse

Kuppuswamykesavanஒட்டு மொத்த மாநில அரசுகளின் அபிப்ராயத்துக்கு மதிப்பளித்து, இந்த சட்டத்தை மோடிஜி கொண்டுவர இருக்கிறாரோ என்னவோ?. என்ன இருந்தாலும், ஜனநாயக மரபுகளுக்கு மரியாதை செய்வதில், மோடிஜி கவனம் கொள்வதை, நாம் வரவேற்க வேண்டும்தான்.

Rate this:
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
01-டிச-201717:07:09 IST Report Abuse

Selvam Pillaiதேர்தல் பயம் கண்ணில் தெரிகிறது. இருந்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது

Rate this:
Gunasekar - hyderabad,இந்தியா
01-டிச-201715:03:48 IST Report Abuse

Gunasekarஇந்து மதப்படி பசு தெய்வமாக பூஜிக்க படுகிறது.

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
01-டிச-201710:01:26 IST Report Abuse

Sampath Kumarஎதையோ அடிப்பானே அப்புறம் எதையோ சுமப்பானே கதை தான்

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
01-டிச-201709:22:27 IST Report Abuse

balakrishnanஇதனால், இந்த சட்டத்தினால் இறந்து போன அப்பாவிகளுக்கு அரசு என்ன செய்யப்போகிறது, ஒரு புத்திகெட்ட அரசு எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் நமது மத்திய அரசு தான், எத்தனை இடைஞ்சல்கள், எத்தனை கஷ்டங்கள், இது தொடர்பாக அந்த தலைவர்கள் அவிழ்த்துவிட்டு பசு கதைகள் எத்தனை எத்தனை, எல்லாமே டுபாக்கூர்

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
01-டிச-201709:14:20 IST Report Abuse

Solvathellam Unmaiஆட்சியை எப்ப திரும்ப பெற போகிறீர்கள்?... கொலை கார காவிகள் போன உயிர்களை எப்ப திரும்ப கொண்டு வர போகிறீர்கள் ... ?

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
01-டிச-201708:23:25 IST Report Abuse

தங்கை ராஜாமக்களுக்கான சட்டமாக இருந்தால் இப்படி மாற்றி மாற்றிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
01-டிச-201708:09:16 IST Report Abuse

Loganathan Kuttuvaமாடுகளை வளர்ப்பவர்கள் விவசாயிகள். தேவை இல்லாத மாடுகளை விற்றால் தான் அவர்களுக்கு வருவாய் கிடைக்கும். பலன் கொடுக்காத மாடுகளை பராமரிப்பதால் அவர்களுக்கு செலவீனம் அதிகரிக்கும் நடைமுறைக்கு சரிப்படாது.

Rate this:
Anandan - chennai,இந்தியா
01-டிச-201707:38:01 IST Report Abuse

Anandanஜெயாவின் பார்முலாவை எல்லா விதத்திலும் அப்படியே காபி அடிக்கிறார் மோடி. அவரும் இப்படித்தான் வீராவேசம் ஒரு சட்டம் கொண்டு வருவார் தேர்தல் வரும் சமயம் எல்லாம் களைந்து விடும். மோடியும் அப்படிப்பட்ட வீரனாய் காட்சி அளிக்கிறார்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
01-டிச-201709:24:17 IST Report Abuse

balakrishnanபொய் அரசாண்டால், மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பிவிடும், பி.ஜெ.பி என்னென்ன சொன்னதோ, என்னென்ன அவங்க கொள்கைகளோ எதுவும் நடக்காது,...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement