இரட்டை இலை சின்னம் விவகாரம்: டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு Dinamalar
பதிவு செய்த நாள் :
இரட்டை இலை சின்னம் விவகாரம்
டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை, பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்புக்கு ஒதுக்கிய, தேர்தல் கமிஷனின் உத்தரவை ரத்து செய்ய கோரி, சசிகலா மற்றும் தினகரன் தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

 இரட்டை இலை, சின்னம் ,விவகாரம், டில்லி, ஐகோர்ட்டில் மேல்முறையீடு

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிரிந்ததை அடுத்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை,தேர்தல்கமிஷன் முடக்கிவைத்தது.

இந்நிலையில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைத்து, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அணியினர், ஒன்றாக இணைந்தனர்.

அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்,எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களில் பெரும் பாலானோர், தங்களை ஆதரிப்பதாக கூறி, பழனி சாமி மற்றும் பன்னீர் தரப்பினர், தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை இவர்களுக்கு ஒதுக்கி, தேர்தல் கமிஷன், சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், 'ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல், டிச., 21ல் நடத்தப்படும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து, சசிகலா மற்றும் தினகரன் தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத் தில், தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு, நேற்று தாக்கல் செய்யப் பட்டது.அதில், 'இரட்டை இலை சின்னத்தை, பழனிசாமி - பன்னீர் தரப்புக்கு ஒதுக்கிய தேர்தல் கமிஷனின் உத்தரவு, சட்ட விரோதமானது.

Advertisement

எனவே, இந்த மனுவை, அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

சசிகலா மற்றும் தினகரன் தரப்பில், மூத்த வழக்கறிஞர், கீர்த்தி உப்பல் ஆஜராகி, இந்த கோரிக்கையை வைத்தார்.இந்த கோரிக்கையை ஏற்ற, தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும், நீதிபதி, கீதா மிட்டல், இந்த மனுவை, இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
01-டிச-201717:19:09 IST Report Abuse

Selvam Pillaiகோர்ட் தற்போது கண்டிப்பாக இலைக்கு வழக்கு முடியும் வரை இடைக்கால தடை விதிக்கும். ஆர் கே நகர் தேர்தலுக்கு கிடைப்பது அரிது, மேலும் ஏ & பி பாரம் ஒரு பிரச்சினையை கிளப்பும், அதில் கழக பொது செயலாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.இதெல்லாம் நீதி மன்றத்தில் வைக்க கூடிய வாதங்கள். இதற்கு என்ன செய்யவேண்டும் என்று செல்லூர் ராஜு , ஸ்ரீனிவாசனிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்யுங்கள்

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-டிச-201715:31:03 IST Report Abuse

Cheran Perumalசிங்கக்குட்டி ஜெ. சமாதியில் அடித்த அடியை நீதிபதிக்கு போட்டுக்காட்டினால் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.

Rate this:
subash - pondicherry,இந்தியா
01-டிச-201713:15:46 IST Report Abuse

subashதினகரனுக்கு கண்டிப்பாக இரட்டை இலை கிடைக்காது பட் திகார் சிறையில் கண்டிப்பாக மறுபடியும் கிடைக்கும். இடைத்தேர்தல் முடிவதற்குள் தினகரன் கண்டிப்பாக ஜெயிலுக்கு போவார்

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
01-டிச-201711:17:40 IST Report Abuse

Paranthamanஇந்திய தேர்தல் ஆணையம் தன்னாட்சி தகுதி பெற்றது. அதில் உச்ச நீதி மன்றம் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. இது தான் உச்ச நீதி மன்றம் வழங்க இருக்கும் தீர்ப்பு.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
01-டிச-201707:59:48 IST Report Abuse

தேச நேசன் தேர்தல் பிரச்சாரத்தின் நடுவில் சின்னத்தை மாற்ற சட்டதிலிடமில்லை தினகரனுக்கு திமுக காங்கிரஸ் வக்கீல்கள் என்பதிலிருந்தே உள்நோக்கம் புரிகிறது

Rate this:
Mariappa T - INDORE,இந்தியா
01-டிச-201709:37:13 IST Report Abuse

Mariappa Tதேர்தல் இன்னும் ஆரம்பிக்க வில்லை,...

Rate this:
subash - pondicherry,இந்தியா
01-டிச-201713:17:54 IST Report Abuse

subashஇவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-டிச-201705:33:15 IST Report Abuse

Kasimani Baskaranஅடுத்த தேர்தலுக்குத்தான் தீர்ப்பு சொல்லுவார்கள்...

Rate this:
Mariappa T - INDORE,இந்தியா
01-டிச-201701:06:21 IST Report Abuse

Mariappa Tஜக்கம்மா சொன்னது நிறைவேற போகுது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement