விசாரணை பயம்: வரித்துறைக்கு திவாகரன் கடிதம்! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விசாரணை பயம்:வரி துறைக்கு திவாகரன் கடிதம்!

சசிகலா கும்பல் சொத்து குவிப்பதற்கு, மூளை யாக இருந்த, அவரது சகோதரர், திவாகரன், வருமான வரித்துறை விசாரணைக்கு பயந்து, உடல் நிலையை காரணம் காட்டி, 'டிமிக்கி' கொடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை,பயம்,வரித்துறை,திவாகரன்,கடிதம்

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த திவாகரன், இளவரசியின் மகள்கள், கிருஷ்ணபிரியா, ஷகிலா மற்றும் மகன், விவேக் உள்ளிட்ட உறவினர் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என,215 இடங்களில், வருமான வரித்துறையினர், நவ., 9 முதல், 13ம் தேதி வரை சோதனை நடத்தினர். அதில், முதல் கட்டத்தில், 1,430 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது.

மேலும், சென்னையில், ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த சோதனையிலும், போலி நிறுவனங்கள் வாயிலாக நடந்த, பண பரிவர்த்தனை ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் சிக்கின.இதற்கிடையே, விவேக்,

ஷகிலா, கிருஷ்ணபிரியா மற்றும் ஜெயலலிதா உதவியாளர், பூங்குன்றன் உள்ளிட்டோரிடம், சென்னையில், வரித்துறை விசாரணை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக, திவாகரனிடம் விசாரிக்க, வரித்துறைஅதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகாமல், டிமிக்கி கொடுத்து வருகிறார். அதற்கு, 'உடல் நலம் சரியில்லை' என, அவர் காரணம் கூறியிருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது.

வருமான வரித்துறை சோதனை நடந்தபோது, 'எனக்கு சம்மன் வரவில்லை; சோதனை நடவடிக்கை தோல்வி' என, திவாகரன் கொக்கரித் தார். ஆனால், மன்னார்குடியை நோக்கி, வருமான வரித்துறையின் கவனம் திரும்பியதும், கிடுக்கிப் பிடி விசாரணைக்கு பயந்து, சாக்குப்போக்கு கூறி வருகிறார்.

திடீர் கடிதம்


தமிழக வருமான வரிபுலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:மன்னார்குடி மற்றும்அதை சுற்றி உள்ள பல மாவட்டங்களில், பினாமிகள் பெயரில், சசி கும்பல் குவித்துள்ள சொத்துகள் பற்றிய விபரங்கள், திவாகரனுக்கு தான் தெரியும். அவருக்கு தெரியாமல், சசி கும்பல், எங்கும் முதலீடு செய்திருக்க முடியாது. அதனால் தான், அவர் மீது தனிக் கவனம் செலுத்துவதற்காக, கோவை

Advertisement

அலுவலகத்தில் இருந்து, 'சம்மன்' அனுப்பினோம். அவர், திருச்சியில் உள்ள வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியிருக்க வேண்டும்; ஆனால், ஆஜராகவில்லை.

அவர் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவெடுத்த நிலையில், எங்களுக்கு, ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'தான் ஓர் இதய நோயாளி என்பதால், உடல் நலம் சரியில்லை; விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார். அவருக்கு, மனிதாபிமான அடிப்படையில், அவகாசம் தந்துள்ளோம். ஆனாலும், அவரை விசாரணைக்கு அழைக்காமல் விட மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement