ஆர்.கே.நகருக்கு அ.தி.மு.க.,வில் மதுசூதனன்! பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்.கே.நகருக்கு அ.தி.மு.க.,வில் மதுசூதனன்!
பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு

கடும் போட்டிக்கு இடையே, ஆர்.கே.நகர் அ.தி.மு.க., வேட்பாளராக, அவைத் தலைவர், மதுசூதனன், நேற்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

 ஆர்.கே.நகருக்கு ,அ.தி.மு.க.,வில், மதுசூதனன்! பழனிசாமி - பன்னீர்செல்வம்,கூட்டாக,அறிவிப்பு

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, மார்ச் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அ.தி.மு.க., இரு அணிகளாக பிளவு பட்டிருந்தது. அப்போது, பன்னீர் அணி சார்பில், மதுசூதனன்; சசிகலா அணி சார்பில், தினகரன் களம் இறங்கினர். வாக்காளர்களுக்கு, அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, மீண்டும், டிச., 21ல், இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த, அ.தி.மு.க., சார்பில் போட்டி யிட, மதுசூதனன் விருப்பம் தெரிவித்தார்.

அவர், துணை முதல்வர், பன்னீர்செல்வம்

ஆதரவாளர் என்பதால், பழனிசாமி ஆதரவாளர் கள் சிலர், 'சீட்' கேட்டு நெருக்கடி கொடுத்தனர். சில அமைச்சர்களும், அதன் பின்னணியில் செயல்பட்டனர்.இதனால், வேட்பாளரை அறிவிப்ப தில், இழுபறி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, நவ., 27, 28ல், போட்டியிட விரும்பு வோரிடம், கட்சியில் விருப்ப மனு வாங்கப்பட்டது. மதுசூதனன் உட்பட, 27 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அவர்கள், 'சீட்' பெற, கடும் முயற்சி செய்தனர். ஆனால், மதுசூதனனையே மீண்டும் நிறுத்த வேண்டும் என்பதில், பன்னீர் செல்வம் உறுதியாக இருந்தார்.

இந்தசூழலில், சென்னையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடந்தது.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அவைத் தலைவர், மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வளர்மதி, எம்.பி., வேணுகோபால், தமிழ்மகன் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆட்சிமன்ற குழு உறுப்பினரான ஜஸ்டின் செல்வராஜ் மட்டும், உடல் நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.

காலை, 11:30 மணி வரை கூட்டம் நடந்தது. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் கமிட்டி அமைப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக, ஆர்.கே.நகர் வேட்பாளராக, மதுசூதனன் அறிவிக்கப்பட்டார்.இதற்கான அறிவிப்பை,

Advertisement

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி ஆகியோர் கூட்டாகவெளியிட்டனர்.

தொண்டர்கள் கொண்டாட்டம்!


சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தின் முன், ஆர்.கே.நகர் வேட்பாளர் யார் என்பதை அறிய, அ.தி.மு.க., தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். மதுசூதனன் பெயர் அறிவிக்கப் பட்டதும், அவர்கள் ஆடிப் பாடினர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி யும், மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். மதுசூதனனுக்கு, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

26 ஆண்டுக்கு பின்...


அ.தி.மு.க., வேட்பாளர், மதுசூதனன், எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து, அக்கட்சி உறுப்பினராக உள்ளார். 1991ல், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். ஜெ., அமைச்சரவையில், கைத்தறித் துறை அமைச்சராக இருந்தார். அதன்பின், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.கடந்த மார்ச் மாதம், ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது,பன்னீர் அணி சார்பில், 26 ஆண்டுகளுக்கு பின், களம் இறங்கினார். ஆனால், தேர்தல் நடைபெறவில்லை. தற்போது, மீண்டும் ஒருங் கிணைந்த, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement